…தனியாக இருப்பதை விட மோசமானவை இருக்கின்றன ஆனால் அதை உணர பல தசாப்தங்கள் ஆகிவிடுகின்றன…
Ramalakshmi Rajan
Ramalakshmi Rajan
ராமலக்ஷ்மி : எழுத்தாளர், கவிஞர், ஒளிப்படக் கலைஞர். பெங்களூரில் வசிக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டங்கள் பெற்றவர். சொந்த ஊர் நெல்லை. தனது வலைப்பூ மற்றும் இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், பத்திரிகைகளில் எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நூல் விமர்சனம், ஒளிப்படம் ஆகிய பல தளங்களில் இயங்கி வருகிறார். இவரது ‘இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பு, ‘மு.ஜீவானந்தம்’ இலக்கியப் பரிசையும், ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய' விருதையும் பெற்றுள்ளது. ‘அடை மழை’ சிறுகதைத் தொகுப்பு ‘திருப்பூர் அரிமா சக்தி’ விருதைப் பெற்றுள்ளது. இவர் எடுத்த ஒளிப்படங்களும் பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அட்டை முகப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இலைகளில் இடைவெளி சிதறும் கதிரொளி தைக்கும் பட்டாம்பூச்சி.
… அவ்வப்போது ஒரு நண்டு மற்ற நண்டுகளின் மேல் ஏறி வாளியின் விளிம்பை நோக்கி ஏறத் தொடங்கும். …
ஒவ்வொரு தலைமுறையும் தன் சொந்த வாழ்க்கையை நினைவுகூர அவரது ஏதோவொரு பாடலை கடன் வாங்கியது
சுள்ளி சேகரிக்கும் பறவை கூட்டைக் கலைக்கும் காற்று மற்றுமொரு சுள்ளி.
மனித மனதின் நிழல்களும் வெளிச்சங்களும் – ராஜேஷ் வைரபாண்டியனின் “அறல்” சிறுகதைத் தொகுப்பு – வாசிப்பனுபவம்
மனித மனதின் நுட்பமான உளவியல் சிக்கல்களைப் பேசும் இக்கதைகள், கிராமத்து வாழ்வின் எளிய மனிதர்களையும் அவர்களின் ஆன்மத் துடிப்பையும் மிக நெருக்கமாகப் பதிவு செய்கின்றன. மற்றொரு புறம், நகரத்து வாழ்வின் கோர முகங்களையும், நிழல் உலகின் மர்மச் சுவடுகளையும் எதார்த்தமான மொழியில் …
நமது வட்டமும் நமது மெழுகுவர்த்தியின் ஒளியும் சிறியது, மிகச் சிறியது. அதைத் தாங்க முடியாதவராக கருத்துகளை உயர்த்திப் பிடிக்கிறோம்
தந்தையர் தினக் கவிதை: …பையனுக்கு சிக்ஸர்கள் வேண்டும் அப்பா எளிதான பந்துகளை வீசுவார் பையனுக்கு ரன்கள் வேண்டும் அப்பா கேட்சுகளை தவற விடுவார் பையனுக்கு வெற்றி வேண்டும் அசாத்திய நிலைத்தன்மையுடன் அப்பா தோற்பார்…
மேலெழும் தேநீர் ஆவி கடை உத்திரத்தில் குருவி கோப்பையின்றி வெதுவெதுப்பு.
நான் தனிமையில் இருக்கிறேன் என்பதற்காக என்னை நினைத்து வருந்தாதீர்கள். ஏனெனில் மிகக் கொடூரமான தருணங்களில் கூட நகைச்சுவை எனக்குத் துணையாக இருக்கிறது.