தண்டகாரண்யத்தின் பஞ்சவடி, நடுப்பகலின் வெய்யில் தாக்கத்தில் பளீரென மின்னுவது போல ஒளிர்ந்திருந்தது. அந்த ஒளி இலக்குவனின் ஆணையை ஏற்று யாரும் அருகில் வர வேண்டாம் என்று எச்சரிப்பது போல பார்ப்பவரின் கண்கள் கூசும் வண்ணத்தில் இருந்தது. கோதாவரியின் அலைகளும் கூட , …
நாவல்
சூரியன் உச்சியை அடைந்து விட்டான். இருந்தாலும் மேகங்கள் சூழ்ந்திருப்பதால் மெல்லிய வெயில்தான். சூடொன்றும் ஆகவில்லை. இரவில் மழை வந்தாலும் வரலாம். ஆனால் ச்சில்லென்ற காற்று அடித்து எனக்கே ஒரு மாதிரிக் குளிராய் இருக்கிறது. கூடவே என் கண்ணில் நீர். ஆவி அழலாமா …
எனக்குக் கோபம்,கோபமாய் வருகிறது. நான் தத்தி.. முற்பிறவியிலும் இந்த வாழ்க்கையிலும். ம்.. கோபம் வந்தென்ன?. சரியான செயலைச் செய்ய முடியவில்லையே. அவன் குரல் வேறு அவ்வப்போது. “உனக்குத்தான் வேண்டியதை அவ்வப்போது செய்து கொண்டிருக்கிறேனே? இன்னும் என்ன வேண்டும் உனக்கு?.. “போடா.. உன்னை, …
இந்த உச்சியிலிருந்து எல்லாம் பார்க்க முடிகிறது. சற்றுத் தூரத்தில் தேக்கு மரமொன்றில் நீலக்கழுத்து மஞ்சள் மூக்குப் பறவை ஒன்று தன் இணையுடன் அமர்ந்திருக்கிறது. அந்தப் பக்கம் சில பல காகத்தைப் போல பெரிய சைஸ் பறவைகள் அமர்ந்திருக்கின்றன. வெயில் ஏறிக் கொண்டிருப்பதைப் …
ஆழ்ந்த வனத்தின் அமைதியைப் பிளந்துக் கொண்டு, “ஓ.. சீதா, ஓ.. இலக்குவா..” என்ற குரல் உதவிக்காகக் கெஞ்சும் அவல ஓசையாய் வெளிவந்தது. இந்தக் குரல் இராமனின் உயிரே அவனது உடலை விட்டுப் பிரிந்து செல்வதுபோல, கேட்பவர்களின் இதயத்தைக் கிழிக்கும்படி ஒலித்தது. ‘யார் …
விடிந்தாலே எல்லா உயிரினங்களுக்கும் பசிக்கும் போலிருக்கிறது. நீல வானில் பறவைகள் இடம் வலமாகச் செல்கின்றன. பக்கத்து மரத்தில் ஒரு அணில் தாவித் தாவி ஏதாவது பழமோ கொட்டையோ கிடைக்குமா? எனப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு மூலையில் காகம் ஒற்றைக் கண்ணை உருட்டி …
கரிய நிறப் போர்வையில் வெள்ளிப் பூச்சித்திரங்கள் வைத்தாற் போன்ற, நட்சத்திரங்களுடன் இருந்த இருட்டைப் பார்த்துப் பார்த்து என் வெறுமை கூடியிருந்தது – நேற்றுவரை என்ன வாழ்க்கை இது?! ஏன் இப்படி எனக்கு வாய்த்திருக்கிறது என்று எண்ணி எண்ணி மிக நொந்து இருந்தபோதுதான், …
கர-தூஷணர்களின் தாயான இராகா, இலக்குவனைச் சுட்டிக்காட்டி “உனக்கான மிகப்பெரிய தடையைப் பார்” என்றாள். விச்ரவஸ் முனிவருக்கும் அவளுக்கும் பிறந்தவர்களே கரனும் தூஷணனும். மகன்களின் அழிவுக்குப் பழிவாங்க, அவள் இப்போது இராவணனின் வருகையைச் சாதகமாக்கிக் கொண்டாள். கைகேசியின் தங்கையும் இராவணனின் சிற்றன்னையுமான இராகா. இராவணன் …
மாரீசன் மாயமான் உருவெடுத்து காடுகளில் அலைந்துக் கொண்டிருந்தான். உடல் தங்கமாகவும், கொம்புகள் மாணிக்கமும் பதித்தது போலவும், உடலில் புள்ளிகள் பலவண்ணமாய் ஒளிரும் மாயமானாக உருமாறி, அவன் மனம் இராமனின் முன் செல்வதை விரும்பவில்லை. உயிர் பயம் காரணமில்லை. சீதை என்னும் பெண்ணைக் …