வணக்கம்.. மீண்டும் உங்கள் ஆராவமுதன்…
முளைச்சு மூணு இலை விடலை, அதுக்குள்ள என்ன லவ்? அப்படின்னு அந்தக்காலப் படங்கள்ல வசனம் வரும்.
இந்தப் புள்ளையாண்டான் நெடுநெடுன்னு ஸ்மார்ட்டா நல்ல படிப்போட நல்ல வேலையும் இருந்தா யாருக்குத்தான் காதல் வராது..?
ஆயுஷிக்கும் வந்திருக்கு…
லூஸுப்பய.. ‘ஐ திங்க் ஐ லவ்யூ’ன்னு அவ சொன்னான்னு எனக்கு மெஸேஜ் பண்றான்.
”எனக்கு எதுக்குடா பண்றே?”
”இல்லை சித்தப்பா நா அவளை அப்படிப் பார்க்கவே இல்லை”
”என்ன பாக்கலை.. ஒரு பொண்ணுக்குப் பருவத்தில் கொஞ்சம் உருவத்தில் கொஞ்சம் நன்னாவே அழகு வரும்.. அவளைப் பார்க்கற ஆணுக்கு அதுலயும் அவ பழகறதையும் வெச்சுத்தான் ஆசையே வருமாக்கும்.. என்ன கள்ளா சொல்லுடா எதுவும் உண்டா?”
”அப்படில்லாம் பல்ப் எதுவும் எரியலை சித்தூ.. அதுவும் ஆஷா பிழி பிழின்னு பிழியறா..”
”அவ கெடக்கா.. அவளை இன்னொரு நாள் பிழிஞ்சுக்கலாம். சரி. ஆயுஷி.. எப்படி அழகா?
அவள் சாலையில்
சென்ற போது
சிலிர்த்தன
நின்று கொண்டிருந்த மரங்கள்
நின்று கொண்டிருந்த பூக்கள்
நின்று கொண்டிருந்த வாகனங்கள்….
அப்படிங்கறா மாதிரி சிலிர்ப்பு வந்ததா? ஸாரிடா எனக்கு கவிதை வரலை..”
”Context-இப்ப என்ன பண்ண?”
”ஒண்ணும் பண்ண வேண்டாம் காதலுக்குல்லாம் சித்தப்பாவை யோசனை கேட்கறியே தத்தி.. பிடிச்சுருக்கா அவளை உனக்கு?”
”பறயான் பாடில்லா..”
”என்னடா மலையாளமா பிடிச்சுருக்குன்னு அர்த்தமா?”
”அவ ஒரு தடவை சொன்னா அதை யூஸ் பண்ணினேன் சித்.. ஒண்ணும் அபிப்ராயமே இல்லை.”.
அப்படியே சொல்லு என்றேன்..
என் அண்ணன் பையன் இருக்கானே கிளிப்பிள்ளை மாதிரி அப்படியே போய் சொல்லியிருக்கான்..
”ஆயுஷி”
”எஸ்.. அனந்த் இது ஆஃபீஸ் டைம்.. வேணும்னா ஈவ்னிங் அந்த மேக்டொனால்ட்ஸ்ல பேசலாமா..?”
”ஓகே.. அப்ப நீ தான் பே பண்ணனும்”
பாருங்க தத்தி.. ம் அடுத்து என்ன பேசினான்னு கேப்போம்.
”சரி.”. சிரித்தாள் ஆயுஷி..
மேக்டொனால்ட்ஸ் இல் வெஜ்ஜீ மேக் ரெண்டு வாங்கி கோக்குடன் அமர….
”ஆயுஷி”
”அனு”
”என்ன திடீர்னு என் மேல லவ்..?”
”தெரியலை.. கொஞ்சம் அக்கெளண்ட்ஸ் பார்த்தேனா.. உன்னோட காண்ட்ராக்ட் பார்த்தேனா படிப்பு பார்த்தேனா… அப்புறம் உன்னை முழுமையா ஒரு நாள் உன் முகத்தை உனக்குத் தெரியாமப் பார்த்தேனா… அப்ப என்ன தோணிச்சுன்னா”
”அப்படியே உதைக்கலாம்னு தோணிச்சா?”
”ச்சீய் ” என உதடு குவித்தாள் அழகாக (இதை அவன் வாட்ஸ்அப்பில் எனக்குச் சொன்னான்) ”கேக்கலாம்னு தோணிச்சு…”
உரையாடல் ஆங்கிலமாம்.. பின்ன மல்லு இவனுக்குத் தெரியில்லா.. ஆகுட்டிக்குத் தமிழ் அறியாது..
”சரி ஆனா எனக்கு ஆஃபீஸ் ப்ரொபேஷன் பீரியட் முடிஞ்சு கன்ஃபர்ம் ஆகட்டுமே.. அதுவரை கலீக்ஸா இருப்போமே..”
”ம்” எனச் சிரித்தாளாம் அவள்..
என்னிடம் சொன்னான், இப்ப என்ன செய்யறதுன்னும் கேட்டான். இவனை என்ன செய்ய..?
ஆனாக்க அவன் வாழ்க்கைல ஒரு டர்னிங்க் பாய்ண்ட் வந்ததாக்கும் ஆஷா வடிவில்…
மாலை நேரம். அனந்த் கார் ஓட்டிக் கொண்டிருந்த போது செல் சிணுங்கியது புதுமணப் பெண்ணைப் போல.
பார்த்தால் ஆஷா.. எடுத்தால்…. “ அனந்த்…’ அவள் குரலில் கொஞ்சம் பதற்றம்.. எங்க இருக்க?”
”சரூஜ் தாண்டப் போறேன்..”
”கொஞ்சம் ட்வண்டி தேர்ட் ஜூலை ஸ்ட்ரீட் வரயா ஒரு சின்ன ஆக்ஸிடண்ட்… ஆர் ஓ பி (ராயல் ஓமான் போலீஸ்) க்கு ஃபோன் பண்ணிட்டேன்.. வாயேன்..”
காரைத் திருப்பி கொஞ்சம் இருபது நிமிடங்களில் போனால் ஏற்கெனவே ஒல்லி ஒல்லி ஆர் ஒ பி வந்திருக்க அவள் கார் பின்னால் இன்னொரு கார் சாலையோரம் பார்க் செய்யப் பட்டிருக்க ஆஷா அந்தப் பக்கம் சாய்ந்திருந்தாள்.
அவள் காருக்குப் பின்னால் நல்ல அடி. மோதியது ஒரு டாக்ஸிக்கார ஓமானி. அவனும் நின்று கொண்டிருந்தான்..
ஆஷாவிடம் சென்றால்..” கொஞ்சம் அடி அனந்த். தோளில் பெய்ன்.. கார் இங்கே இருக்கட்டும் ஆஃபீஸ் ட்ரைவரை விட்டுக் கொடுக்கச் சொல்லலாம்.. அந்த ட்ரைவர் தான் ஃபால்ட் என்னை டாக்டர்கிட்ட ஹடாட் (Hatat) பாலிக்ளினிக் கூப்பிட்டுப் போறயா?”…
சரி எனச் சொல்லி போலீசிடம் பேசி ஹடாட் பாலிக்ளினிக்கில் அவன் அம்மாவிற்குத் தெரிந்த டாக்டர் ஜோஸஃபின் ஃபெர்னாண்டஸிடம் காட்டி… ”.ஒண்ணுமில்லை அனந்த்.. கொஞ்சம் அதிர்ச்சி தோள்ல கொஞ்சம் அடி அதனால அதிர்ச்சி கவலைப்பட ஒண்ணுமில்லை. டேப்லட் சாப்பிட்டா சரியாய்டும்.. ஒரு இஞ்சக்ஷன் கொடுத்துருக்கேன். குட்டி நன்னாயிட்டே இருக்கா.”.
”ஷ்.. டாக்டர். அவர் என் ஜி எம்..”
”இருந்தா என்ன? அவ உன்னை ப்ரமோட் பண்ணிலைன்னா நீ அவளை ப்ரமோட் பண்ணிடு. உங்க அம்மா கிட்ட பேசட்டா?”
”நன்றி” எனச் சொல்லி விரைந்து சோர்ந்திருந்த ஆஷாவை மறுபடி காரில் ஏற்றி அவள் வீடு இருக்கும் பெளஷர் என்ற இடத்தை அடைந்தான் அனந்த்..
”கம் வித் மீ அனந்த்”..
”இருக்கட்டும் ஆஷா.. டேக் கேர்..”
”ஐ ஸே யூ கம்..”
இரண்டாவது ஃப்ளோர்.. ஃப்ளாட் சிங்கிள் பெட்ரூம் தான்.. கொஞ்சம் நீட் அண்ட் க்யூட்.
”உட்கார்” என உள் சென்றாள்.. திரும்பி வரும் போது கையில்லாத கவுன். கொஞ்சம் தலையை விரித்திருக்க கூந்தல் மாலை நேரப் பொன்னிறக் கடலலைகளை நினைவூட்டியது….
”ஹேவ் திஸ்…”
”ஆஷா.. நான் கிளம்பறேன்..”
”நோ ப்ராப்ளம்.. கிளம்பலாம்.. இது பகார்ட்டி வித் லைம் மிண்ட் நன்னா இருக்கும்.. எனக்குப் பிடிச்ச ட்ரிங்க் இது”
”ஸாரி எனக்குப் பழக்கமில்லை”
”ம்.. ஏன் தான் கர்ட் ரைஸா இருக்கியோ.. சரி, கோக் குடி”
பின் சென்ற ஒரு மணிப் பொழுதில் ஆஷாவின் குடும்பம் இன் கோபன் ஹேகன்… அம்மா அப்பா பாட்டி.. தென் அந்த மாத டார்கெட் எனப் பேசியதில் ஆஷா நான்கு பெக் இவன் இரண்டு கோக்…
”பீஸ்ஸா சூடு பண்றேன்.”. எழுந்தாள் தடுமாறினாள்.
சூடுபண்ணி இவன் கொடுக்க, அவள் கொறித்தாள்.
அனந்த் உண்ணவில்லை நான்வெஜ் என்பதால் ..குட்டியாய் ஆப்பிள்..
”நான் கிளம்புகிறேன் ஆஷா…”
”ஓகேய்… ஒன் மினிட் இங்கே வா”
”எஸ்ஸு”
அவனை நெருங்கி அவள்…
எனக்கு வாட்ஸ்அப் வந்தது இவ்வளவு விஷயமும்.
”என்ன ஆச்சுடா?”
”ஒண்ணுமில்லை சித்தூ.. எனக்கு முத்தா கொடுத்துட்டா இறுக்கி…”
”அட்ரா சக்கை.. அதுக்கு ஏன் கத்தற.. என்னமோ கற்பே பறி போனாப்பல”
”பட் இட்ஸ் ராங்..”
”இளவயசுல எதுவும் ராங்கில்லை.. எஞ்சாய்..”
”போங்க சித்தப்பா”
”நான் எங்க போனேன் நீதானே வெள்ளைக்காரக் குட்டி வீட்டுக்குல்லாம் போற ”
”நாளைக்கு ஆஃபீஸ்ல அவ ஏதாவது டார்ச்சர் பண்ணா?”
”அவ முத்தாவை ரிடர்ன் பண்ணிடு.. அவ தானே குடுத்தாடா.. லீவ் இட்”..
”நிசமா?”
”ஆமண்டா ஆமா” என ஃபோனை வைத்தேன்..
நாளை என்ன நடக்கும்.. ம்ம் தெரியாது.
(தொடரும்)