இறைவனின் இணையில்லாப் படைப்பு

இறைவன்
மலரின் நறுமணம் பிரித்து எடுத்தான்
மலைநேர் மரத்தின் மாண்பினைச் சேர்த்தான்
புலரிப் பனியின் மென்மை குழைத்தான்
புணரியினுள்ளிருந்த அமைதியினை அகழ்ந்தான்
அந்திப் பொழுதின் அழகை வார்த்தான்
ஆயிரம் விண்மீன் ஆன்மாவினை வடித்தான்
சிலிர்க்கும் ஓடையின் நகையினை இட்டான்
சிறகடிக்கும் புள்ளின் நளினம் கோர்த்தான்
இத்தனை எழிலினையும் ஒன்றாய்ப் பிணைத்து
இணையிலாக் கலையினை இறைவன் முடித்தான்;
முழுமை கண்ட அத்தலைசிறந்த படைப்பிற்கு
எளிமையாய் “அன்னை” எனப் பெயரிட்டான்!

Author

  • கவிஞர் நளினி சுந்தரராஜன் வட அமெரிக்காவில் வசிக்கிறார். தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதும் இவர், அமெரிக்காவில் தமிழ்ச்சங்கப்பேரவை, கவியரங்கங்கள் மற்றும் உலகத்திருக்குறள் மாநாட்டில் கவிதைகள் வாசித்திருக்கிறார். "Face in Face" இவரது முதல் மொழிபெயர்ப்பு நூல். "திக்குகளின் புதல்வியர், உறைபனி உதிர்த்த இறகு, வலசை சென்ற வண்ண மயில்கள்" ஆகிய தொகுப்பு நூல்களில் இவரது கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.

Related posts

உலகின் பெருவிழா – கால்பந்துப் போட்டி

உருதுக் கவிதை உலகு – 7: கைஃபி ஆஸ்மி

எண்ட் டோஹ் த்ரெ – 3