பூக்களென்றால் கொள்ளைப்பிரியம் பேத்திக்குசூட்டிப்பார்ப்பதில் அதிகப்பிரியம் நல்லாச்சிக்குதென்னைமரக்குடுமி வைத்த பிராயத்திலிருந்துகருநாகம் போல் பின்னலிடும் வயது வரைவிதவிதமாய்ச் சூட்டி அழகு பார்க்கிறாள்சூட்டும்போதே பயன்களையும் சொல்லிவளர்க்கிறாள்தாழைப்பூமுடித்து மருக்கொழுந்து சூடிய பொழுதில்குழந்தை மீனாட்சியாய் வரித்துசுற்றிப்போட்டும் கொள்கிறாள் பன்னீர், சண்பகம், ரோஜா, மகிழம், டேலியா எனதாத்தாவின் தோட்டத்தில் பூக்கிறதுஅந்தப் …
சாந்தி மாரியப்பன்
தீபாவளிக்கு ஆரோக்கிய அல்வா வேண்டுமெனஅரை மணி நேரமாய்எசலுகிறான் மாமன்அசையாமல் அமர்ந்திருக்கிறாள் நல்லாச்சிஎடையும் இடையும் பெருகாமல்எண்ணெய்யும் நெய்யும் தொடாமல்நாவினிக்க வேண்டுமாம் தீபாவளிஇத்தனை விதிகளைப் பரப்பினால்என் செய்வாள் அவளும் நல்லாச்சியின் பட்டியலைதலையசைத்து ஒதுக்குகிறான்பேத்தியின் பட்டியலையோகண்டுகொள்ளவேயில்லைபழைய மனப்பான்மை கொண்ட உங்களுக்குநவீன நடைமுறை தெரியாதெனகேலியும் செய்கிறான் ஆரோக்கிய …
ஐந்தாறு நாட்களாய்அமர்க்களப்பட்டுக்கொண்டிருக்கிறது வீடுபருப்புப்பொடியும் ஊறுகாய்களும் இன்னபிறவும்பாட்டிலில் அடைபட்டுக்கொண்டிருக்கின்றனஆரவாரம் கண்டு புருவமுயர்த்துகிறாள் பேத்தி‘அண்ணன் வெளிநாட்டுக்குப்போறாம்லா’குறிப்பறிந்து கூறுகிறாள் நல்லாச்சி பத்தில் ஒரு பங்கைச் சேமித்து வைஅன்றாடம் கணக்கெழுதுநிர்வாகப்பாடத்தை மூளையில் திணிக்கின்றனர்அப்பாவும் அம்மாவும்வம்புவழக்கில் போய் விழாதேஅறிவுரையுடன்தலைவலி வாசனாதி திரவியங்களுக்குதுண்டு போட்டு வைத்தாயிற்று அக்கம்பக்கத்தினர்தாத்தா கிணற்றடியில்துணி வெளுக்கக் …
வயலில் நடக்கும் அறுவடையை மேற்பார்வையிடவென தொற்றிக்கொண்டு கிளம்பினாள் பேத்தியும் கேள்விகளும் பதில்களுமாய் வழிப்பாதையை நிரப்பிக்கொண்டே சென்றாலும் அறுவடை என்பது ஒரு வடையல்ல என்பது சற்று ஏமாற்றத்தையே கொடுத்தது அவளுக்கு
கைபேசியில் தற்படமெடுக்ககற்றுக்கொண்டுவிட்டாளாம் பேத்திகால் பாவாமல் தாவிக்கொண்டேயிருக்கிறாள் பூக்களின் பின்னணியில் ஒன்றுபூவுடன் முகம் பொருத்தி ஒன்றுகன்றுக்குட்டியுடன் கன்னமிழைத்து இன்னொன்றுகலர் கோழிக்குஞ்சைதலையிலமர்த்தி மற்றொன்றெனகைபேசியின் மூளையைபடங்களால் நிரப்பிக்கொண்டேயிருக்கிறாள். சாக்கு சொல்லி தப்பித்துக்கொண்டிருந்ததாத்தாவைக்கூடசெய்தித்தாள் வாசிக்கும்அசந்த நேரத்தில்காலையொளியின் பின்னணியில் படமெடுத்தாயிற்று ‘எல.. போட்டோ புடிச்சா ஆயுசு கொறையும்’என நழுவிக்கொண்டிருக்கும்நல்லாச்சிக்கும்ஆசை …
தொட்டுப்பொட்டு வைத்துக்கொள்ளலாம்போல்கரேலென்றிருக்கும் வானத்தில்ஆட்டுக்குட்டிகளாய்மேய்ந்து கொண்டிருக்கின்றன மேகங்களெல்லாம் தலைப்பிரசவம்போல்எப்போது வேண்டுமானாலும் நிகழக்கூடும்மழையின் வீச்சிலிருந்துநெல்லைக்காப்பாற்றும் முகமாய்சாக்குப்பையில்மரக்காலால் அள்ளி நிறைக்கிறாள் நல்லாச்சிஉழக்கு போல் ஒட்டிக்கொண்டு இழையும் பேத்திகேட்கிறாள்மழை எப்போது பெய்யுமென ‘மழை பெய்யறதும் மக்க பொறக்கறதும்மகேசன் கணக்குல்லா’பதிலாகவும் புலம்பலாகவும்ஒரே நேரத்தில் சொன்னபடிமெலிதான இடிச்சத்தத்தைச் செவிமடுக்கும் ஆச்சியைதாக்குகிறது …
நல்லாச்சியின் கொடி உயரப்பறக்க வேண்டும் வானளாவிப்பறக்கும் கொடியைப் பற்றிக்கொண்டு விண்வெளிக்கும் செல்ல வேண்டும்
வழக்கத்திற்கு மாறாக முகம் வாடி அமர்ந்திருக்கிறாள் நல்லாச்சி கூம்பிக்கிடக்கும் அல்லியொன்று வாடித் தளர்ந்துமிருப்பது போல் சற்றே தலை சாய்த்து பார்வையை நிலத்தில் சரிய விட்டிருக்கிறாள் கனலும் பெருமூச்செறிந்து ஆறுதலுக்குத் தவிக்கிறாள்.
கொக்கு பற பறகிளி பற பறவிளையாடிக்கொண்டிருக்கிறார்கள்நல்லாச்சியும் பேத்தியும்இறகும் சிறகுமுள்ளவையெல்லாம் பறக்கும்அதே நேரத்தில்நாலு காலுள்ளவையும்இரு கால் பிராணிகளும் கூட பறக்கின்றனசந்தடி சாக்கில்விடை பிழைத்தவர்வென்றவர் சொல் பணியவேண்டுமென்பதுவிளையாட்டின் விதிவெற்றிகளைஒவ்வொன்றாய்ச்சேர்த்து வைத்துமொத்தமாகவும் அனுபவித்துக்கொள்ளலாமெனதிருத்தம் கொணர்கிறாள் பேத்திஉடன்படுகிறாள் நல்லாச்சிஏறுபுள்ளிகளும் இறங்குபுள்ளிகளுமாய்இருவரின் கணக்கிலும்ஏய்க்க முடியாதவரவு செலவு எக்கச்சக்கம்அதில்நல்லாச்சி ரகசியமாய் …