அந்த ஜிமிக்கி அவளுடைய பாட்டி அவளுக்குப் பரிசாகக் கொடுத்தது. நுணுக்கமான தங்க வேலைப்பாடுகள் கொண்ட அந்த டிசைன், சீராகப் பின்னிப்பின்னி பூவும் கொடியுமாக நிறைந்து, விளிம்பில் சின்னஞ்சிறு முத்துகள் தொங்க, சின்ன குடை போல் அவளது காதுகளில் அசைந்து கொண்டிருக்கும். பேசும்போது …
சாந்தி மாரியப்பன்
தூரத்து மலையில்தனித்தலையும் ஒற்றைக்குருவிமனிதவாசம் படா வெளியில்ஒற்றையாய்ப்பூத்திருக்கும் நீலப்பூஇன்னொரு ஒற்றைப்பாறைக்குதாவிச்செல்லும் வரையாடுதன்னுள்மூழ்கித் தியானிக்கும்அலையற்ற சிறுகுளம்அவரவர் தனிமைக்குஅவரவரே துணையாயிருக்கபனித்துகள் திரட்டிநிலாப்பொம்மை செய்கிறது மலைஒவ்வொருவரின் தனிமையையும்கதகதப்பாய் அணைக்கிறது நிலாகுளிர்கிறது தனிமை.
உலகத்து வெயிலெல்லாம் உம்மேலதான்’செல்லமாகக் கடிகிறாள் நல்லாச்சிநட்புகளுடன் விளையாடும் பேத்தியைஉச்சிப்பொழுதின் வெப்பம்வாட்டுமென்ற அக்கறையில்கலந்தாலோசித்த பட்டாளம்திருவிழா விளையாட்டைத் தேர்கிறதுஅறங்காவலராக்குகிறது நல்லாச்சியை செங்கற்களே மூர்த்தங்களாய்அகப்பட்ட பூக்களே தோரணங்களாய்வடிவெடுக்கிறது சப்பரம்பூஜைப்பொருட்கள் ஒருவன் உபயம்நைவேத்யம் ஒருத்தி கொணர்கிறாள்காற்றில் ஒருவன் கொட்டுமுழக்கதாத்தாவின் கைத்தடி நாகஸ்வரமாகிறதுஏதும் கொணராத ஒருத்தியைவிலக்குகிறது கூட்டம் பதைக்கிறாள் …
பனிச்சறுக்கு விளையாட ஆசை பேத்திக்குநயந்தும் பயந்தும்பெற்றோர்க்குச்சொன்னவையெல்லாம்கிணற்றில் சறுக்கிய கல்லாய்க் கிடக்கவழக்கம்போல் சரணடைகிறாள் நல்லாச்சியிடம் இமயமலை பற்றி விளக்கினால்‘ஆராம்ளி மலய விட ஒசரமா?’ என்கிறாள்மணல்மணலாய்ப் பனித்துகள் காணலாமென்றால்‘ஆத்தங்கரையில் இல்லாத மணலா?’ என்கிறாள்ஊரே குளிர்ந்திருக்குமென ஆசை காட்டினால்‘தடுமம் பிடிச்சுக்கிடும்ல’ என்கிறாள்ஊரே உலகமென வாழ்ந்த நல்லாச்சி …
சாப்பிடுவதற்குசெரை படுத்தாத பேத்திஏனோசில பொழுதுகளில் சுணங்குவதுண்டு‘காத்தாட சாப்பிடுதேன்’ என்றபடிகிணற்றடிக்குத் தட்டுடன் செல்பவள்துலக்கி மினுக்கி மீள்வாள்அம்மட்டில் திருப்தியுற்ற நல்லாச்சிகண்டுகொள்ளாதிருக்கிறாள் சின்னவளை ‘காத்தாட’ தனித்துண்ணும் பொழுதுகள்சந்தேகத்தை விதைக்கின்றனஅன்னையின் மனதில்செல்லப்பேத்தியைச் சொல்லுக்கு ஆளாக்கினால்ஆச்சி வீசுவாள் கண்டனக்கணையைஅகிலமே ஆச்சிக்கு அஞ்சும்போதுஅன்னை எம்மாத்திரம்எனினும்புகையை ஒளிக்க இயலுமோ!! கரையவிட்ட தோசைகள் …
விதைத்த சோளக்காடு அறுவடைக்கு நிற்கிறதுதளவாடங்களுடன் கிளம்புகிறது குடும்பம்கோணிகளோடு நல்லாச்சியும்சிறு பையுடன் பேத்தியும் தொடர்கின்றனர் கும்பிட்டு அறுத்தமுதல் கதிரே சாவியாய் இருக்கஅடுத்தடுத்த கதிர்களும் அப்படியேபோனால் போகிறதெனஒன்றிரண்டு சோளமுத்துகளைச் சுமந்துவெறுஞ்சிப்பியாய் பிளந்திருக்கின்றன மீதமுள்ளவைபறவைகள் பாதி நாம் மீதியெனபிரிக்கத்தேவையின்றிகாலிப்பாத்திரத்தை வைத்திருக்கிறாள் மண்மாதாமலைத்து நிற்கின்றனர் மற்றவர்பரிகசிக்கிறாள் பேத்தி …
தொலைத்த இடத்தில்தான் தேடணும்என்கிறாள் நல்லாச்சிதினமும் ஏதேனுமொன்றைத்தொலைக்கும் பேத்தியிடம்அவள்எங்கோ தொலைத்ததையெல்லாம் கண்டுபிடிக்கும்மந்திரக்கோலன்றோ நல்லாச்சிஎனினும்அல்லல் அதிகமானால் அலுத்தும்கொள்வாள் பொருட்களைத்தொலைத்தே பழக்கப்பட்ட பேத்திஒருநாளில்நல்லதோர் நட்பையும் தொலைக்கிறாள்பிரிவென்ற பெயரில்;அவ்வன்பை எங்கே தேடுவதெனக் குழம்புகிறாள்பெற்றோரின் அன்போஉற்றாரின் அன்போஇன்னபிற களித்தோழரின் அன்போஇணைவைக்க இயலாமல் தத்தளிக்கின்றனதூக்கமின்றி ஏக்கத்தில் மெலிகிறாள் பேத்திமாற்றமொன்றே மருந்தாகும் …
விருந்தொன்று வந்திருக்கிறதுநல்லாச்சி வீட்டுக்குஅன்புமிக்கதுதான் அந்நெஞ்சமும்எனினும்இருண்டதும்பேத்தியின் மேல் அன்புசற்றே வறண்டதும் கூட வந்த நாள் முதல்அதன் அட்டகாசங்களையெல்லாம் சகிக்கின்றனர்உறவின் பெயரால்தலைமேல் தாங்குகின்றனர்அன்பின் பெயரால்;பேத்தியின் நனையும் கண்களையும்வெதும்பும் நெஞ்சத்தையும்மரியாதை நிமித்தம் வாளாவிருப்பதையும்கண்ணுறாதவளல்ல நல்லாச்சிவந்த உறவின் மனக்காயம் புரியாதவளுமல்ல எல்லை மீறிய ஓர் நாளில்அருகிருத்தி உரைக்கிறாள் …
கண்புரை ஏற்பட்டிருக்கிறதாம் நல்லாச்சிக்குஅறுவை சிகிச்சைக்குப் பயப்படுகிறாள் அவள்தைரியம் சொல்பவர் சிலர்அதன் பெயரால்அதைரியப்படுத்துபவர் இன்னும் சிலர் தொடச்சுப்போட்ட டியூப்லைட் மாதிரிபளீர்ன்னு தெரியும் ஒலகம்அழகுபோல சீரியல் பாக்கலாம்எனத்தெம்பூட்டுகிறாள்சிகிச்சையால் பலன் பெற்ற செல்லாச்சிநப்பாசையால் சம்மதிக்கிறாள் நல்லாச்சிமுற்றத்து வெயில் முகத்தில் படாதுவெக்கை அணுகாதுஅருகிலிருந்து பேத்தி பேச்சுத்துணையாகஅந்தப்புரத்து ராணி …
பேரன்பும் பெருங்கருணையும்ததும்பித்தளும்பிய காலக்கடலிலிருந்துபொங்கிப்பிரவாகித்துகரைதழுவ ஓடி வந்தன நினைவலைகள்நினைவுகளெனில் பாலைவனச்சோலையுமாம்நினைவுகளெனில்புன்னகையின் பின்னொளிந்த கோரப்பற்களுமாம் வாழ்வெனும் காட்டாற்றின் நடுவேசிறுதுண்டு நிலமாய்காலூன்றி ஆசுவாசம் கொள்ளவும்மலர்ந்திருக்கும் நினைவுகளில் கமழும்நறுமணத்தால் பேதலித்துகாலடி நிலம் நழுவவும்இளஞ்சூரியன் சிரிக்கும் இவ்வீதியில்அதோ அந்தக்குழந்தையின் நகைப்பொலியாய்ஓங்கியொலித்துஇறுதியில் முணுமுணுப்பாய்த் தேய்ந்தடங்கவும்என நங்கூரமிட்டுவரிசையாய் நிற்கின்றன நினைவுகள்அவ்வப்போது பார்த்துக்கொள்ளும்நட்சத்திரங்களைப்போல் …