“நாம்தான் படு சௌகர்யமாக இருக்கோமே, எதிலும் குறைவில்லை. அதனால், இப்போ நீ வீட்டைக் கவனித்துக் கொண்டு, பிள்ளைகளைப் பார்த்துகிட்டு ராணி மாதிரி இருக்கிறதை விட்டுட்டு இன்னும் எதுக்கு நீ சம்பாதிக்கணும் என்று நினைக்கிறே?” பாஸ்கர் கொஞ்சம் கோபமாகவே கேட்டான். “சரி பாஸ்கர், …
இதழ் 8
கடந்த வாரம் வேற்றுமை உருபுகளில் எங்கெல்லாம் ஒற்று மிகும் அல்லது மிகாது என்பதைப் பார்த்தோம். குறிப்பாக இரண்டாம் வேற்றுமை உருபான ஐ, நான்காம் வேற்றுமை உருபான கு– இவை வெளிப்படும் இடங்களில் வல்லெழுத்து மிகுத்து எழுதுவதனால் நாற்பது விழுக்காடு ஒற்றுப் பிழைகளைத் …
தண்டகாரண்யத்தின் அந்தப் பகுதி, மாலை முடிந்த முன் இரவுப் பொழுதில் ஒருவித இரம்மியமான நீல நிற ஒளியில் திளைத்திருந்தது. ஆகாயத்தை முட்டும் ஆச்சா மரங்களும், ஆகாயப் பந்தலில் ஊஞ்சலாடும் விழுதுகளும், சுற்றிப் படர்ந்த காட்டுக் கொடிகளும் என எல்லாம் சேர்ந்து நிலவின் …
வள்ளுவன் தந்த பொதுமறைபிறவிக் கடல் நீந்தப் பொற்கலம்!ஈராயிரங் கால நீதிநூல்வாழ்வியல் செறிவாக்கிடும் நற்பாடம்!முப்பாலின் முத்தான பாக்கள்பண்பு நெறியூட்டும் நல்லுரம்! அன்பும், அறமும், கல்வியும்,அரசு முறையும், குடி கடமையும்பாங்கே படிப்பிக்கும் போதிமரம்!அருளும், நட்பும், இன்சொல்லும்இன்பமும், இல்லறமும், காதலும்சேர்ந்தே பொதிந்துள்ள நித்திலம் ! அல்லவை, …
பஃப்ஃபெனப் புதர் போலத் தலைகள், கன்னத்தோரம் புசுபுசுவென தாடி: சில ட்ரிம் செய்யப் பட்டவை, சில அங்கங்கே பரந்த கொடி போல கன்னத்தில் நீட்டிக் கொண்டிருந்தன. குறு குறு கண்கள், என ஒன்று இரண்டு இல்லை.. எட்டுப் பேர் என் வீட்டில் …
1. சும்மா கிறுக்குகிறேன் என்பாள்கிறுக்கி கிறுக்கிக் கிழித்தாள்அந்தப் பக்கம் களர்நிலம் போன்றது என்பாள்படுபயங்கரமான விளைச்சல் உள்ள களர்நிலம்எல்லா இரகசியமும் ஒளிந்த பக்கம்யாவருக்கும் கிறுக்கல்களின் குவியல்தனக்கே அது உரித்தான பக்கங்களாய்ஒவ்வொரு நோட்டுகளும்தாங்கும் அப்பக்கங்களின் சுமை அதிகம்அவை தனித்தே இருப்பவைஅடையாளங்களோடு… *********************************************************2.பழுதாகும் பொழுதுகளில் எல்லாம் …
கொடகுவைச் சேர்ந்த எழுத்தாளர் காயப்பண்டா சாந்தி கே. அப்பண்ணா, 2017-ஆம் ஆண்டுக்கான கேந்திர சாகித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருதைப்பெற்றவர். சாந்தி அப்பண்ணா தனது ‘மனசு அபிசாரிகை’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக இந்த உயரிய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே ‘சந்தா புத்தக விருது’ மற்றும் …
வாழ்வியல் இயக்கங்களை வரலாறாகப் பதிவு செய்யும் பாணி தொன்றுதொட்டே இருந்து வருகிறது. எழுத்துருக்கள் தோற்றுவிக்கப்படும் முன்பே ஆரம்பகாலக் குகை ஓவியங்கள் மூலமாக அப்போதைய வரலாற்றை, சம்பவங்களைப் பதிவு செய்தனர். இதன்பின்னர் பேச்சு மொழி உருவாக, வாய்வழிக் கதைகளாகவும், பாடல்களாகவும் இவை அடுத்த …
(பிரபல கன்னட எழுத்தாளர் விவேக் ஷம்பாக் அவர்கள், எழுத்தாளர் கணேஷ் வெங்கட்ராமனின் வேண்டுகோளிற்கிணங்கி நம் சிறப்பிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி) கேள்வி: பெரும் இதிகாசங்களைக் கொண்ட இந்தியப் பெருநிலத்தின் சமகால இலக்கிய ஆக்கங்கள் அந்தத் தொடர்ச்சியை நிறைவு செய்யும் அளவிற்கு உருவாகின்றனவா? …
மிட்டாய்க்காரன்|கணேஷ் வெங்கட்ராமன்
ராகவனை முதன்முதலாகத் துபாயில் சந்தித்தேன். அவனைச் சந்திக்குமுன்னரே அவனைப் பற்றிய சிறப்பம்சங்கள் – வியப்பின், ஆர்வத்தின் ஒன்று சேர்ந்த கலவையாக – என் காதுக்கு எட்டியிருந்தன. அனைவரும் அவனின் எதிர்காலம் கணிக்கும் திறனைச் சிலாகித்தனர். ஒரு வரைபடம் போல கைரேகையை வாசிப்பான் …