அவர்கள் அவளிடம் சொன்னார்கள்அவள் ஒரு அழகி அல்ல என்று,அழகுக்காக அவர்கள் வரையறுத்திருந்தலட்சணங்கள் எதுவும் அவளிடம் இல்லையென்று. அவளது உடலின் எடை அதிகமென்றார்கள்அவளது சிரிப்பு உரத்ததென்றார்கள்அவளது தோலின் நிறத்தைக் குறிப்பிட்டார்கள்அவளது கனவுகள் மிக உயரமானவை,ஒரு பெண் எட்ட முடியாதவை என்றார்கள். அவர்கள் ஒருபோதும் …
இலக்கியம்
விழா நாள்கள் பலருக்கும் மகிழ்ச்சியைக் கூட்டும் நாள்கள். குடும்ப உறுப்பினர்கள் பலரும் ஒன்றுகூடும் நாள்கள். ஆனால் கோடிக்கணக்கான மக்களுக்கு, இதே விழாக் காலங்கள் தனிமையின் கொடூரமான நினைவூட்டல்களாக, சமூகப் புறக்கணிப்பின் வேதனையான அனுபவங்களாக மாறுகின்றன. வறுமை என்பது வெறும் பொருளாதாரப் பற்றாக்குறை …
திடலின் ஓரத்திலிருக்கும்ஆலமரத்தைக் கண்ணுறுந்தோறும்ஆவலும் பயமும் கொள்வாள் பேத்திகிளிகளைப்போன்ற அக்காக்களும்அக்கக்கோவெனும் கிளிகளும்இறுகப்பற்றி ஊஞ்சலாடும் விழுதுகள்ஆசையையும் பயத்தையும் விதைத்திருந்தன அவளுக்குள் விண்ணுக்கும் மண்ணுக்கும்பாலமாயிருந்த விழுதுகளில் சிலபாதாள லோகத்தையும் பார்த்துவரப்புகுந்திருந்தனஎண்ணெய் தடவாத முடிக்கற்றையெனநுனிகளில் பிளந்து கிளைத்திருந்தன சிலஅக்கையொருத்தி கைபற்றிச்சேர்க்கவிழுது பற்றி ஆடிய பேத்திஅதே வீச்சில்பூமியை முத்தமிட்டுப் …
மந்தையில் ஆடுகள் ஒன்றாக நகருகின்றனதலை குனிந்து குளம்புகளின் தூசியைத் தட்டிமேய்ப்பனின் நிழலைப் பின்தொடருகின்றன.அதுவே சத்தியம் எனகூட்டம் கூட்டமாகக் குவிகின்றன.அவற்றின் காதுகள்பொய்யான உறுதிமொழிகளுக்கு மட்டுமேசெவிமடுக்கப் பழகி விட்டன. செல்லும் பாதை குறித்து எந்தக் கேள்வியுமில்லைஅடைய வேண்டிய தூரம் பற்றி அளவீடு ஏதுமில்லைகோலை உயர்த்தி …
பூக்களென்றால் கொள்ளைப்பிரியம் பேத்திக்குசூட்டிப்பார்ப்பதில் அதிகப்பிரியம் நல்லாச்சிக்குதென்னைமரக்குடுமி வைத்த பிராயத்திலிருந்துகருநாகம் போல் பின்னலிடும் வயது வரைவிதவிதமாய்ச் சூட்டி அழகு பார்க்கிறாள்சூட்டும்போதே பயன்களையும் சொல்லிவளர்க்கிறாள்தாழைப்பூமுடித்து மருக்கொழுந்து சூடிய பொழுதில்குழந்தை மீனாட்சியாய் வரித்துசுற்றிப்போட்டும் கொள்கிறாள் பன்னீர், சண்பகம், ரோஜா, மகிழம், டேலியா எனதாத்தாவின் தோட்டத்தில் பூக்கிறதுஅந்தப் …
சுயவிளையாட்டு Self-referential / Playfulness என்பது பின்நவீனத்துவ இலக்கியத்தின் முக்கிய தன்மைகளில் ஒன்று. இலக்கியம் தன்னைப் பற்றிப் பேசத் தொடங்கும் நிலையே இதன் அடிப்படை. உரை தன்னுடைய உருவாக்க முறையை வெளிப்படுத்திக்கொள்ளும், தன்னைப் பற்றி சிரிக்கத் தொடங்கும், தன் பிம்பங்களை விளையாட்டாகப் …
“ஏங்க.. கழுத்துல ஒரு செயினு கூட இல்லாம எப்பிடிங்க உங்க சொந்தக்காரங்க கல்யாணத்துக்குப் போறது?” கமலா கவலையுடன் கேட்டாள். அவனின் பிடிவாதம்தான் மனைவியின் நகைகளையெல்லாம் அடகு வைக்கும்படி ஆனது. “வண்டி வாங்குறதுக்கு இப்ப என்னங்க அவசரம்?” என்று கமலா எவ்வளவோ சொல்லியும் …
யாரோ ஒருவரின் திராட்சை ரசம் நான்பருகப் பருகக் கடக்கிறது காலம்ஒரு நாள் அது கசப்பின்அடையாளமாகிறதுபருகியவர்கள் எவரும்இது திராட்சை ரசமெனஒப்புக் கொண்டதில்லை என்பதுதான்…. எனது வேர்களிலும்கனிகள் விளையும்உரமொன்றைத் தயாரிக்கிறார்கள்எனக்கே எனக்கெனமெனக்கெட்டதாகதூற்றித் திரிகிறார்கள்அறுவடைக் காலங்களில்பள்ளத்தாக்கில் வீசப்படும்மீதக் கனிகள்விரும்பாவிட்டாலும் நஞ்செனப் பரவுகிறதுகனிகளற்ற கிளைகளில்வந்தமர்கிறதுவண்ணத்துப் பூச்சியின்இறகொன்று. அவர்களின் …
“என்னோட லுங்கியைத் துவைக்கலியா?” என்று தலையைத் துவட்டிக்கொண்டே கேட்டான் தியாகு. “குளிச்சு முடிச்சாச்சா?” கேட்டாள் மனைவி வசந்தி. “ஆமா” “பாத்ரூம்ல கால் அடிக்கு ஏன் தண்ணீ நிக்குது?” “நின்னுகிட்டே குளிச்சேன். அதான்” “போய் அடைப்பைக் குத்தி விடுங்க” “இப்போ தான் குளிச்சேன் …