விடிந்தாலே எல்லா உயிரினங்களுக்கும் பசிக்கும் போலிருக்கிறது. நீல வானில் பறவைகள் இடம் வலமாகச் செல்கின்றன. பக்கத்து மரத்தில் ஒரு அணில் தாவித் தாவி ஏதாவது பழமோ கொட்டையோ கிடைக்குமா? எனப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு மூலையில் காகம் ஒற்றைக் கண்ணை உருட்டி …
Chinna kannan
கரிய நிறப் போர்வையில் வெள்ளிப் பூச்சித்திரங்கள் வைத்தாற் போன்ற, நட்சத்திரங்களுடன் இருந்த இருட்டைப் பார்த்துப் பார்த்து என் வெறுமை கூடியிருந்தது – நேற்றுவரை என்ன வாழ்க்கை இது?! ஏன் இப்படி எனக்கு வாய்த்திருக்கிறது என்று எண்ணி எண்ணி மிக நொந்து இருந்தபோதுதான், …
சில பெண்கள் தான் அழகாக இருக்கிறார்கள். அவர்களில் சரிதா ஒருத்தி. சில பெண்கள்.. ஏன் எவ்வளவோ பெண்கள் சாதாரணமாகத்தான் இருக்கிறார்கள். அவர்களில் நான் ஒருத்தி. அழகு என்றால் அகத்தழகு அது இது என்று புத்தகங்களில் எழுதுகிறார்களே அது இல்லை. நான் சொல்வது …
அள்ளக் குறையா அன்பாம் அமுதினைத் துள்ளியே என்னிடம் தா… எனச் சொல்லவேண்டிய என் காதலர் புரு அஸ்தினாபுரம் போகிறாராம்.. மன்னரிடம் நீதியாம்… அரசகுமாரியைப் பணிப்பெண்ணாக்கி அழகு பார்த்துப் பின் அவளின் அழகைப் பார்த்த பொல்லாத யயாதி மன்னனிடம்.. நீதி கிடைக்குமா என்ன? …
”வாக்குகள் துள்ளி வருகின்ற வாயினில்நாக்கைச் சுருக்கல் நலம் இந்த நாக்கு பிறந்ததிலிருந்து நம்மிடம் கூடத்தான் இருக்கிறது..ஆனால் அதைக் கட்டுப் படுத்தவில்லை எனில் அதல பாதாளம் தான்..அதுவும் இளமையில் தறிகெட்டு ஓடும்… ஏனெனில் உடலில் ஓடும் ரத்தம்… அதில் உள்ள உணர்வுகள் தரும் …
என்னைச் சுற்றிக் காரிருளில்ஏக்கத்துடன் நான் நடக்கின்றேன்கண்ணைச் சுழற்றிப் பார்க்கையிலேககன வெளியா புரியவில்லைவிண்மீன் தொடுக்க ஆசையுடன் விரைவாய் இருந்த பொழுதினிலேஎண்ணம் கலைந்த மாயமென்னஏற்றம் வருமா என்வாழ்வில்… தெரியவில்லை.. ஏதோ தொடர்ச்சியாய் மன ஒலியா புரியவில்லை..மெல்லப் பிதற்றுகிறேன் என்று மட்டும் தெரிகிறது.. இருப்பது படுக்கையில்.. …
ஆல விழுதாக அஞ்சுபத்து பெத்துபுட்டு ..அழகா வாழ்வேன்னு நினச்சேனே எங்கண்ணே காலம் ஏன்வந்து சுழன்றடிச்சுக் கன்னியுனை …காத்தில் ஒளிச்சுடுச்சே தெரியலையே என்கண்ணே
எனக்கும் உற்சாகமாய் இருந்தது மாமா வீட்டுக் கல்யாணம்.. நிறையப் பேர் வருவார்கள் என் வில்லிமங்கலச் சினேகிதி அனகாவைப் பார்க்கலாம்., அங்கே வில்லியாற்றில் நீந்தலாம், விளையாடலாம், அதுவும் மலர்ந்த பின்னர் அவளைப்பார்க்கப் போகிறேன். நிறையப் பேசலாம் சந்தேகங்கள் கேட்கலாம்.
மலையில் பிறவா சிறு தென்றல் மாந்தர் மனதில் வீசும் பசும் தென்றல் முகிலில் மறையா முழு நிலவு பூந்துகிலில் மறையும் முழு நிலவு எது? பெண்! பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? – கொத்தமங்கலம் சுப்பு
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும். – கண்ணதாசன்