nallachi

நல்லாச்சி – 45

This entry is part 44 of 46 in the series நல்லாச்சி

வெகு அமைதியாய் இருக்கிறது வீடுகிலேசமடைகிறாள் நல்லாச்சிஏதோ சரியில்லையெனஉள்மனசு எச்சரிக்கிறது அவளைநிசப்தமாய் இருக்கும் குழந்தைகள்விஷமங்களின் ஊற்றுக்கண் என்றறிவாள் அவள்அடுக்களையின்மூலைமுடுக்கெல்லாம் சோதிக்கிறாள்சேதமில்லையென்பதறிந்து நிம்மதியாகிறாள்அஞ்சறைப்பெட்டி கலவரபூமியாகியிருந்ததைஇன்னும் மறக்கவில்லை அவள் அடுத்த கட்டமாய்தோட்டத்திற்குப் பாய்கிறாள்விவசாயி விளையாட்டில்கத்தரி,தக்காளிச் செடிகளின் கதியைஇன்னும்புலம்பித்தீரவில்லை அவள்திக்திக்கென்ற நெஞ்சோடுதிண்ணையிலமர்ந்தவளை எழுப்பிஉள்ளே விரட்டுகிறதுபூஜைமணிச்சத்தம் கண்டகாட்சியில் கதிகலங்குகிறாள்பாவம்போல்…

Read more

நல்லாச்சி – 44

This entry is part 45 of 46 in the series நல்லாச்சி

முதற்சோறூட்டும் சடங்கிற்காய்குழுமியிருக்கின்றனர் குடும்பத்தார் அனைவரும்பிள்ளைக்குத் தான்தான் ஊட்டுவேனெனஆளாளுக்குப் பதிகிறார்கள் நல்லாச்சியிடம்தர்மசங்கடத்துடன் தலையசைக்கிறாள் அவளும்பாரபட்சமின்றி பாலமுதும் தேனமுதும் பாயசமும்வெள்ளிக்கிண்ணங்களில் வீற்றிருக்கமாலைகளும் குறுவேட்டியுமணிந்துதண்டை சலசலக்கக் காலுதைக்கும் பாலகனுடன்வழிபாடுகள் முடியக் காத்திருக்கின்றனர்கூப்பிய கரங்களுக்குள்பொதிந்த வேண்டுதல்களோடும்முதல் மரியாதைக்கான எதிர்பார்ப்புகளோடும் வீறிடத்தொடங்குகிறான் குழந்தைஎதற்கும் கட்டுப்படா அழுகைக்குஆளாளுக்காய்க் காரணங்களைக் கண்டவர்கள்மறக்காமல்…

Read more

நல்லாச்சி – 43

This entry is part 43 of 46 in the series நல்லாச்சி

பன்னாட்களாய்ப் பராமரிப்பின்றிகட்டாந்தரையாய்க்கிடக்கிறது வீட்டுத்தோட்டம்ஆடி, தையென எல்லாப்பட்டங்களையும்பறக்க விட்டுசாரலையும் தூறலையும் கண்டுகொள்ளாதுவயல்களும் தோப்புகளுமே சரணமென்றிருந்தவர்களிடம்கடுப்புற்றுஉலோபியின் நெஞ்சென இறுகிக்கிடக்கிறது நிலம்யோசனையில் ஆழ்ந்திருக்கிறாள் நல்லாச்சிசெலவிடாத தாத்தாவை வழிக்குக்கொண்டுவரும்வகையறியாமல். கண்ணீர் ததும்ப ஓடிவருகிறாள் பேத்திகனத்த கட்டிக்கொலுசுநவமணி பதித்த தங்கக்கொலுசுதோட்டத்து எலிப்பொந்தில் விழுந்துவிட்டதாம்அலறியடித்து விரைகிறார் தாத்தாமடமடவென உத்தரவுகள் பறக்கபரபரவென…

Read more

நல்லாச்சி – 42

This entry is part 42 of 46 in the series நல்லாச்சி

அரிசிஉளுந்து அளந்தெடுத்துஅண்டாநிறைய அரைத்துவைத்துவெடிக்காத உப்புச்சீடையும் கருகாத வெல்லச்சீடையும்பிரிபிரியாய்க் கைமுறுக்கும் பக்குவமாய் அதிரசமும்பல்லில்லாத கிச்சாவுக்கு பதமான மைசூர்பாவுமாய்அரங்குவீட்டில் அடுக்குகிறாள் நல்லாச்சி‘எச்சியாக்கிராதியோ பிள்ளேளா..கண்ணனுக்குப் படைச்சுட்டு ஒங்களுக்குத்தாம்’ என்றபடிதொறவாலைப் பத்திரப்படுத்துகிறாள் இடுப்பில்அரங்குவீட்டில் ஒரு கண்ணும்பேரம்பேத்திகள் மேல் இன்னொரு கண்ணுமாக பச்சரிசி ஊறவைத்து பக்குவமாய் தானரைத்துமங்களமாய் மாக்கோலங்களைஇழைத்து…

Read more

நல்லாச்சி – 41

This entry is part 41 of 46 in the series நல்லாச்சி

இடித்த பச்சரிசி மாவும்ஈருருண்டை வெல்லமும்இரண்டுக்கும் தோதான தேங்காய்களுமாகஒளவையாரம்மன் கோவிலுக்குப்புறப்பட்டுக்கொண்டிருக்கிறதுநல்லாச்சியின் குடும்பம் உப்பொரு வகை இனிப்பொரு வகையெனஅவித்து வைத்த கொழுக்கட்டைகளும்அவை வெந்த நீரில் காய்ச்சிய கூழுமெனஅம்மைக்கு இவர்கள் படைக்க“முன்தயாரிப்பு வகைகளும் கிடைக்குது மக்ளே”என்கிறாள் ஒளவை“புதியவையோ சூடாக்கியவையோ யானறியேன்ஊதித்தின்ற சுட்ட பழம் இன்னும் நெஞ்சினிக்கஊர்ப்பட்ட…

Read more

நல்லாச்சி – 40

This entry is part 40 of 46 in the series நல்லாச்சி

நல்லாச்சி உறங்குகிறாள்சமையலறைப் பாத்திரங்கள் ஓசையின்றிசைகையில் பேசிக்கொண்டிருக்கதாழ்வாரம் வரை வந்துதயங்கி தவிப்போடு அமர்ந்திருக்கும்வெயிலின் தங்க நிறம்படிகளில் தேன்துளிகளாய்த் தேங்குகிறது பகலெல்லாம் ஓயாமல் உழைத்த களைப்பில்பாயில் சாய்ந்திருக்கிறாள் நல்லாச்சிஇறகுகளை மெல்ல விரித்த தென்றல்அவளுக்கு இதமாய் விசிறகாற்றில் கலைந்த நிழல்கள்பூனைக்குட்டியாய் அவள் காலடியில் முடங்குகின்றனமுற்றத்தில் விளையாடும்…

Read more

நல்லாச்சி – 39

This entry is part 39 of 46 in the series நல்லாச்சி

கிளை நுனியில் ஊசலாடும்தூக்கணாங்குருவியின் பெருவீடு கண்டுவியப்புடன் வினவினாள் பேத்தி“கம்பியும் இல்லை, காரையும் இல்லை,எப்படி முடைந்தது இத்தகு பேரழகை?பட்டம் பயின்ற பொறியாளராலும்இப்படியோர் விந்தை இயலுமோ ?” மென்னகை புரிந்த நல்லாச்சிஇயற்கையின் அதிசயங்களில்இதுவுமொன்று என்றாள்;கூட்டுக்குள் மழைத்தூறல் நனைக்குமேஇரவானால் வெளிச்சத்திற்கு என்செய்யும்அசராமல் கேள்விகளை அடுக்குகிறாள் பேத்தி…

Read more

நல்லாச்சி – 38

This entry is part 38 of 46 in the series நல்லாச்சி

மழை பொய்த்த அவ்வருடம்அலைமோதுகின்றனர் தண்ணீருக்காய்கண்ணீரும் ஆவியாய்ப்போகும் வெப்பத்தில்வெடித்து அழுகிறது நிலம்மழைக்கஞ்சியை உண்டுவிட்டுமௌனம் சாதிக்கும் கடவுளர்முன்இறைஞ்சி ஏங்குகின்றனர் மக்களெலாம் அடிகருத்த வானம் துளிகளோடு ஏமாற்றிவிடஅடாபுடாவென வந்திறங்குகிறது இடிநல்லாச்சி வீட்டு வாழைமரத்தில்கருகிய வாழைமரத்தூரில்தங்கமாய் உறைந்திருக்குமென்றுபொறாமையுடனும் ஆவலுடனும் பார்க்கிறது கூட்டம் அனுமதி பெறாத அவசரக்காரனொருவன்அடிமேலாய்ப்புரட்டுகிறான் மண்ணைகிளைத்துக்கொத்திச்சாய்க்கிறான்ஆறடி…

Read more

நல்லாச்சி – 37

This entry is part 37 of 46 in the series நல்லாச்சி

சந்தைவிலை சரியாய் அமையவில்லையாம்கொட்டி வீசப்பட்டிருக்கின்றன காய்கனிகள்கூடைகூடையாய் சாலையோரத்தில்எதிர்ப்புமுகம் காட்டும்விதமாய்கண்டு பதைபதைக்கிறாள்விவசாயியும் தாயுமான நல்லாச்சிஊனுறக்கம் மறந்து அல்லும்பகலும் காத்ததெல்லாம்பயிர்வாடத் தான் வாடி நின்றதெலாம்அழிய விடுவதற்காகவோவெனக் குமுறுகிறாள் ஆதரவற்றோர்க்கு அளிஅதிக லாபமின்றி அள்ளிக்கொடுஅல்லதுவிளைந்ததின் மதிப்பை விவேகமாய்க்கூட்டுவிழுந்த விலைக்காய் நீயும் சோர்ந்தால்உழைத்த நிலத்தின் உதிரம் வற்றாதோபக்குவம்…

Read more

நல்லாச்சி – 36

This entry is part 36 of 46 in the series நல்லாச்சி

சூறாவளி வரப்போவதாய்லேடியோப்பொட்டி அறிவித்த அன்றிருந்தேகலக்கமுற்றிருக்கிறாள் நல்லாச்சிஅறுவடைக்குத் தயாராயிருப்பவற்றிலிருந்துஅப்போதுதான் நட்டவை வரைக்கும்அத்தனையும் அபாயத்திலிருந்தாலும்நாணித் தலைசாய்ந்து நிற்கும்வாழைகள் மேல் அதிகக்கரிசனம் அவளுக்கு விளைந்த குலைகள் கனக்கநிறைமாத சூலிபோல் பொலிபவற்றைச்சூறாவளி சாய்க்குமோவென அஞ்சியவள்அஞ்சாறு பேர் துணையுடன் ஆளுயரக்கம்புகளால்ஓடியோடி முட்டுக்கொடுக்கிறாள்மூடிப்பொதிந்த வாழைக்குலைகளுக்கு.பாதுகாப்பின் அவசியத்தைப் பேத்திக்குஊடேஊடே பாடமும் எடுக்கிறாள்…

Read more