Home வணிகம்வரலாற்றில் பொருளாதாரம் – 6

வரலாற்றில் பொருளாதாரம் – 6

by Viswanaath Thyagaraajan
0 comments

​போன அத்தியாயத்தில் மனிதர்கள் எப்படி நாடோடிகளில் என்கிற நிலையில் இருந்து சமூகமாக எல்லோரும் ஒன்றிணைந்து வாழத் தொடங்கினார்கள் ? என்கிற கேள்வியோடு முடித்திருந்தேன். ​மனிதர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து வாழ தொடங்கியது என்பது மனிதகுலத்தின் வரலாறு என்பது நாடோடி வாழ்க்கையிலிருந்து நிரந்தர சமூகங்களாக ஒன்றிணைந்து வாழ்ந்த ஒரு மகத்தான
பயணமாகும்.

பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் வேட்டையாடுபவர்களாகவும், உணவு சேகரிப்பவர்களாகவும் இருந்தனர். அவர்கள் உணவைத் தேடி இடத்திற்கு இடம் சென்று கொண்டிருந்ததால், நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கி வாழும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லை. ஆனால், சில முக்கிய மாற்றங்கள் இந்த வாழ்க்கைமுறையை முற்றிலும் மாற்றி அமைத்தன.

​இந்த மாற்றத்திற்கு மிக முக்கியமான காரணம், விவசாயத்தின் கண்டுபிடிப்பு. சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதர்கள் தாவர விதைகளை விதைத்து, பயிர் செய்யக் கற்றுக்கொண்டனர். இதன் மூலம், அவர்கள் தங்களுக்குத் தேவையான உணவை ஓரிடத்திலேயே உற்பத்தி செய்ய முடிந்தது.

இது நாடோடி வாழ்க்கையின் அவசியத்தை நீக்கி ஒரே இடத்தில் வாழ்வதற்கான வாய்ப்பினை உருவாக்கியது. உணவுப் பற்றாக்குறை இல்லாததால், மக்கள் பயிர்களைப் பராமரிக்கவும், அறுவடை செய்யவும் ஒரே இடத்தில் தங்க ஆரம்பித்தனர். இந்த நிரந்தர குடியிருப்புகள்தான் முதல் கிராமங்கள் மற்றும் நகரங்களின் தொடக்கமாக அமைந்தன.

​விவசாயத்தின் வளர்ச்சி, சமூக அமைப்புகளின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. மக்கள் குழுக்களாக ஒரே இடத்தில் வசித்தபோது, வேலைகளைப் பிரித்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது.

சிலர் விவசாயத்திலும், சிலர் கருவிகள் செய்வதிலும், இன்னும் சிலர் வீடுகள் கட்டுவதிலும் ஈடுபட்டனர். இது தொழிலாளர் பிரிவினையை உருவாக்கியது. இந்த பிரிவினைகள் தலைமுறைகள்
பல கடந்தும் பின்பற்றபட்டதால் அது பின்னாட்களில் சாதியாக உருமாறியது.

இந்த புதிய சமூக அமைப்பு, மக்கள் தங்கள் அறிவையும் திறன்களையும் பகிர்ந்து கொள்ள உதவியது. தேவைகள் அதிகமாக வேலைகளை திறம்பட செய்து முடிக்க புதிய தொழில்நுட்பங்கள் உருவாகவும் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுத்தது.

தொழில்நுட்பத்தின் மூலம் கிடைத்த பொருட்களின் பாதுகாப்பு, வளங்களின் பாதுகாப்பு கருத்தியும் சமூக விதிகள் உருவாக்கப்பட்டன. அதன் மூலம் தலைவர்கள் அதிகாரிகள் போன்ற சமூக
கட்டமைப்புகள் உருவாகின.

​அந்த கட்டமைப்புகள் மூலம் நிரந்தர குடியிருப்புகள் உருவாகின. அத்தகைய குடியிருப்புகள் சமூக ஒருங்கிணைப்பு மற்றும் அதுசார்ந்த பாதுகாப்பை மக்களிடத்தில் கொண்டு வந்தன.

கூட்டாக வாழ்வதால், அவர்களது ஒருங்கிணைந்த முயற்சியால் விலங்குகளிடமிருந்தும், பிற அச்சுறுத்தல்களிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு தங்களது தேவைக்கான பொருட்களின் உற்பத்தியில் கவனம் செலுத்த முடிந்தது. பிற்காலத்தில் தனிபெரும் கவனம் பெற்ற உற்பத்தி துறை மிக பெரிய அளவில் வளர்ந்தது.

அப்படி கூட்டமாக இருந்து சமூகமாக மாறி வளங்கள் நிறைந்தவை ஒன்றாக அந்த கூட்டத்தை வழி நடந்தி சென்ற தலைவனை தங்களது தலைவனாக ஏற்று கொண்டு சிறு கூட்டங்களாக இருந்த மனிதர்களும் வெற்றிகாரமாக வாழ்ந்து கொண்டு இருந்த சமூகத்தின் ஒரு பகுதியாக மாறினார்கள்.

இன்றைய புலம்பெயர்தலின் முன்னோடி, ஆனால் எல்லைகள் சட்டங்கள் என பெரியதாக அப்பொழுது இல்லாததால் இதனை புலம்பெயர்தலென ஆய்வாளர்கள் கருதுவதில்லை. இது இப்படியாக
தான் நடந்ததென சொல்ல சான்றுகள் இப்பொழுது இல்லை. பருவ கால மாற்றங்களுக்கேற்ற படி பறவைகள் மிருகங்கள் இடம் விட்டு இடம் பெயர்வதை வலசை என்கிறோம். அப்படி வலசையில்
சுற்றி கொண்டு இருக்கும் இனங்கள் ஒரு இடத்தில் அங்கு இருக்கும் தட்பவெப்பநிலைக்கு பழகி அங்கேயே வாழ தொடங்கி விடும்.

அதன் பிறகு அவை வலசை அல்லது இடம்பெயர்வதில் ஈடுபடாது. அதே போல் தான் மனிதர்களும் வேட்டையாடிகளாக இருந்த பொழுது இடம்பெயர்ந்து (வலசை) கொண்டு இருந்தார்கள். பிறகு
ஒரு இடத்திலேயே வாழ தொடங்கினார்கள். எல்லாம் சரி சமூகம் உருவாகிய பின் பொருளாதாரத்தின் தேவை மனிதனுக்கு எப்படி ஏற்பட்டது ?

தொடரும்…

Author

You may also like

Leave a Comment