மந்தையில் ஆடுகள் ஒன்றாக நகருகின்றனதலை குனிந்து குளம்புகளின் தூசியைத் தட்டிமேய்ப்பனின் நிழலைப் பின்தொடருகின்றன.அதுவே சத்தியம் எனகூட்டம் கூட்டமாகக் குவிகின்றன.அவற்றின் காதுகள்பொய்யான உறுதிமொழிகளுக்கு மட்டுமேசெவிமடுக்கப் பழகி விட்டன. செல்லும் பாதை குறித்து எந்தக் கேள்வியுமில்லைஅடைய வேண்டிய தூரம் பற்றி அளவீடு ஏதுமில்லைகோலை உயர்த்தி …
இதழ்கள்
பூக்களென்றால் கொள்ளைப்பிரியம் பேத்திக்குசூட்டிப்பார்ப்பதில் அதிகப்பிரியம் நல்லாச்சிக்குதென்னைமரக்குடுமி வைத்த பிராயத்திலிருந்துகருநாகம் போல் பின்னலிடும் வயது வரைவிதவிதமாய்ச் சூட்டி அழகு பார்க்கிறாள்சூட்டும்போதே பயன்களையும் சொல்லிவளர்க்கிறாள்தாழைப்பூமுடித்து மருக்கொழுந்து சூடிய பொழுதில்குழந்தை மீனாட்சியாய் வரித்துசுற்றிப்போட்டும் கொள்கிறாள் பன்னீர், சண்பகம், ரோஜா, மகிழம், டேலியா எனதாத்தாவின் தோட்டத்தில் பூக்கிறதுஅந்தப் …
தண்டகாரண்யத்தின் எல்லையைக் கடந்து, சூர்ப்பனகை இலங்கையை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தாள். பகல் நேரத்தின் சூரிய ஒளி அவளைச் சுட்டெரித்தது. கடலின் அலைகளில் பொன்மயமாகப் பரவி மின்னினாலும், கடற்கரையின் மணல் வெயிலில் தகதகத்தது கூட அவளுக்கு நெருப்பாற்றில் செல்வது போல உணர்வை ஏற்படுத்தியது. …
பெரியூட்டு பங்கெல்லாம் பிரிச்சு எழுதியாச்சாமா.. சுப்பாய்ந்தக்கா சொன்னாங்க. குழிகாலு பங்குல நீ நின்னுகிட்டீனு சொன்னாங்க.. ஆமாங்கத்த.. அடப் பொழையாக்குப்பா (உஷாரில்லாம இருக்கறது) நாளைக்கு ஆடிப்போவத்துக்கு ரண்டா நெம்பருக்கு தண்ணியுட்டானா,குழிகாலெல்லாம் ஒரம்பெடுத்துக்கும். என்ன வெள்ளாம பண்ண முடியும் அங்க.. கெடக்குதுடுங்கத்த.. அந்த வயில்ல …
ஆதிவாசி மனிதர்களிடத்தில் குடும்பம் என்கிற அமைப்பு உருவானது என்பது மனித சமூகத்தின் ஒரு அடிப்படை மற்றும் சிக்கலான பரிணாம வளர்ச்சியாகும். குடும்பம் என்பது மனித சமூகத்தின் மிகப் பழமையான சமூகக் கட்டமைப்பு மற்றும் அடித்தளம் ஆகும். அந்த அடித்தளம் தான் இன்றைய …
சுயவிளையாட்டு Self-referential / Playfulness என்பது பின்நவீனத்துவ இலக்கியத்தின் முக்கிய தன்மைகளில் ஒன்று. இலக்கியம் தன்னைப் பற்றிப் பேசத் தொடங்கும் நிலையே இதன் அடிப்படை. உரை தன்னுடைய உருவாக்க முறையை வெளிப்படுத்திக்கொள்ளும், தன்னைப் பற்றி சிரிக்கத் தொடங்கும், தன் பிம்பங்களை விளையாட்டாகப் …
மனதில் ஒளிந்திருக்கும் நரகாசுரன்களை அழிப்போமா?
விடிந்தால் தீபாவளி.. ஊரே உற்சாகத்துடன் பரபரவென்று இருக்கிறது. இரவு நெடு நேரம் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தாலும் எப்பொழுது விடியும், புதிய ஆடை உடுத்தி பட்டாசுகளை வெடிக்கலாம் என்று சிறார்களும், மாமனார் வீட்டு உபசரிப்பில் மயங்கியபடி இளம் மனைவியைச் சுற்றி வரும் புது மாப்பிள்ளைகளும், கண்கவர் ஆடைகளில் …
தீபாவளி என்பது தீப ஒளித் திருநாள் என்பதாகும். குடும்பங்கள், உறவுகளோடு ஒற்றுமையாகக் கொண்டாடும் பண்டிகை ஆகும். தீபாவளிப் பண்டிகை குறித்து இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம். நரகாசுரனை கிருட்டிணர் அழித்த நாள்தான் தீபாவளியாகக் கொண்டாடப்படுவதாக சொல்கிறார்கள். தீபாவளிப் பண்டிகை வருவதற்கு முன்பாகவே மக்கள் …
இன்னும்கூட நன்றாக நினைவிருக்கிறது. அது பூப்போட்ட வெளிர் மஞ்சள் நிறச்சட்டை. அவன் அப்பொழுது ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். வீட்டிலிருந்த ஐவரில் மூவர் பெரிய மனிதர்களாகிவிட, நான்காவது அண்ணன் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். இவன்தான் கடைக்குட்டி. அனைவருக்கும் செல்லப்பிள்ளை என்றாலும் அப்பாவிற்கு …
“ஏங்க.. கழுத்துல ஒரு செயினு கூட இல்லாம எப்பிடிங்க உங்க சொந்தக்காரங்க கல்யாணத்துக்குப் போறது?” கமலா கவலையுடன் கேட்டாள். அவனின் பிடிவாதம்தான் மனைவியின் நகைகளையெல்லாம் அடகு வைக்கும்படி ஆனது. “வண்டி வாங்குறதுக்கு இப்ப என்னங்க அவசரம்?” என்று கமலா எவ்வளவோ சொல்லியும் …