தீபாவளி என்றவுடன் சிறுவயதில் வண்ண வண்ண மத்தாப்புக்களுடன் பண்டிகை கொண்டாடிய நினைவுகள் நெஞ்சில் பூக்கின்றன. அப்போதெல்லாம் கிராமத்துப் பாட்டி வீட்டிற்குப் போய்தான் தீபாவளி கொண்டாடுவது வழக்கம். கம்பி மத்தாப்பை கொளுத்தக்கூட அஞ்சி நிற்கும் எங்களுக்கு, சோளத்தட்டையில் கம்பி மத்தாப்பை சொருகித் தருவார் …
இதழ்கள்
வீட்டுத் திண்ணையில் காலைச் சூரியன்அந்தி சாயும் வரைக்கும் என் கண் தேடும்,இத்தனை வருடம் காலடிச் சத்தம்கேட்டதெல்லாம் இப்போதேன் தூரம். ஊர் தாண்டி நீ போனதனால்,சுவரெல்லாம் நீ சாய்ந்த இடம்,பாயெல்லாம் நீ படுத்த நினைவுகள்,பேச ஒரு வார்த்தை இல்லையே நீயின்றி. பழைய சோற்றைக் …
தொண்ணூறுகளில், பள்ளிக்கால பதின்மவயது கிராமப்புற சாமானியனுக்கு, தீபாவளி என்பது சொர்க்கத்தைக் காணுமளவுக்கான ஒரு பெருவிழா. கிரைண்டரும், மிக்ஸியும் இல்லாமல் அம்மியும், குடக்கல்லும் ஆக்கிரமித்திருந்த வீடுகளில் எப்போவதாவதுதான் மாவரைப்பதால் பண்டிகைகாலப் பலகாரங்களுக்கு இணையாக அப்போதெல்லாம் இட்லியும் இருந்தது. தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்த …
விஜி நான் உள்ளே வரும்போதே சொல்லிவிட்டாள். “பட்டாளத்தம்மா உங்களைப் பார்க்கணும்ன்னு சொன்னாங்க..” சட்டையைக் கழற்றப் போனவன் நிறுத்திவிட்டேன். “வா.. போயிட்டு வந்தரலாம்…” “டிபன்?” “அதெல்லாம் அப்புறம்..” நான்கு வீடுகள் தள்ளித்தான் அவர்கள் வீடு. ‘பட்டாளத்தம்மா’ என்பது நாங்கள் வைத்த பெயர். சொந்தப் …
புலம் பெயர்ந்தவர்களின் தீபாவளிக் கொண்டாட்டம்
தீபாவளி உலகெங்கும் உள்ள இந்தியர்களால் கொண்டாடப் படுகிறது. எங்கிருந்தாலும் தமிழர்கள் தங்கள் கலாச்சாரத்தை மறப்பதில்லை. நான் தற்சமயம் ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன். தீபாவளி வேலை நாளில் வருவதால் வீட்டில் புதுத்துணி உடுத்தவோ மகிழ்ச்சியாகக் கொண்டாடவோ இயலாததால் அந்த வார இறுதியில் விடுமுறை நாளில் …
எத்தனைப் பண்டங்கள்! எத்துணைச் சுவை!
“ஐயா ராஜேஷ் அவர்களே, தீபாவளி நெருங்குகிறதே, தங்கள் இல்லத்தில் எத்துணைத் தித்திப்புப் பண்டங்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள்?” என்று சங்கத்தமிழில் பேசிக்கொண்டே வீட்டுக்குள்ளே நுழைந்தான் சுரேஷ். “என்னடா? தமிழ் எல்லாம் ரொம்ப பலமா இருக்கு? என்ன விஷயம்?” “நீ வேற கதை, …
காலிலிருந்து நுரையீரல் வரை (நுரையீரலில் இரத்தக்குழாய் அடைப்பு)
நுரையீரலில் இரத்தக்குழாய் அடைப்பு – Pulmonary embolism: (PE) எவ்வாறு ஏற்படுகிறது? சாதாரணமாக நினைத்த ஒரு காய்ச்சல், நோயாளியை ஐசியூவில் கொண்டு சேர்ப்பதில் முடியுமா? சந்தோஷமாக ஆரம்பித்த விமானப்பயணம் உயிருக்கு ஆபத்தாகுமா? ஆகலாம்.. எப்படி? எனப் பார்ப்போம். இவற்றுக்கெல்லாம் காரணம், கால்கள் …
நகரின் பிசியான ரோட் சைட் கார் பார்க்கிங். அந்த ஏரியாவை சேர்ந்த கல்லூரி மாணவன் (முதலாம் ஆண்டு) பிரபு ஒரு காரை நோக்கி வருகிறான். அது அகலமான Rear View Mirror உள்ள பணக்காரத்தனமான கார். அதே சமயத்தில் ரொமாண்டிக்காகவும் இருந்தது. …
மயங்கும் இருளை மறுக்கும் ஒளியாய்,மனங்களில் மேகம் களைக்கும் வான்மழையாய்,அழகு தீபம் அலங்கரித்ததோர் தருணம்,அறத்தை மொழியும் அகல் விளக்கமிது. இருள் வாழும் இடம் தெரியாது,ஓர் ஒளி வந்தால் தவம் முடியும்;அந்த ஒளியாம் இந்நாள் வாழ்த்து,அன்பெனும் வாசலில் அழைக்கின்றது. அரசர் குடியில் தீபமிட்டார்,ஆசையுடன் கூடி …
“அம்மா.. வாங்கம்மா வாங்க, எல்லாம் புது ரகம். சுடிதார், நைட்டி, புடவை, ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் எல்லாம் இருக்கு. வாங்கம்மா வாங்க” ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் திருச்சி மலைக்கோட்டை பஜாரில், உச்சி வெயிலில் பிளாட்பாரத்தில் துணிக்கடை வைத்து வியாபாரம் செய்து …