கண்கள் மற்றவர்கள் போலில்லைகள் வடிக்கும் கண்களைபெற்றிருக்கிறாள்கடந்து போவதற்கும்கரைந்து போவதற்கும்அவை வழிகாட்டிகள்** அவரின்கண்களைக் கசக்கி மூடிவிட சொன்னார்கள்என் விரல்களுக்கும் உள்ளங்கைக்கும் கசக்கும் வித்தை தெரியவில்லைவெறித்த விழிகளில்கடைசியாக எதைப் பார்த்திருப்பார் என எதிர் திசையைப் பார்த்தேன்அவரே நின்றுக் கொண்டிருந்தார்** எந்தக் கண்களை தானம் செய்வதுஏற்கனவே …
கவிதை
நீரோட்ட நெல்வயலில் நித்தம் சிறுதிருட்டாம்ஊரோட்ட நேரமில்லை உள்பகையே – ஏரோட்டும்தம்பியின் கைகள் தளராது வேலியிடக்கம்பிகளின் காட்டில் கதிர் காலைக் கதிரவன் கண்ணால் கவிபாடிமாலை மயங்குவான் மாவெளியில் – சோலைதனில்செம்பந் திறங்கிடச் சேர்ந்தது வேலிமுகம்கம்பிகளின் காட்டில் கதிர் மாலா மாதவன் காலையிலே எழுந்தவுடன் …
நல்லாச்சியின் கொடி உயரப்பறக்க வேண்டும் வானளாவிப்பறக்கும் கொடியைப் பற்றிக்கொண்டு விண்வெளிக்கும் செல்ல வேண்டும்
திண்ணையில் பேச்சென்றுத் தேர்போல் அசைந்தாடிவண்ணமாய் வந்தமர நேரமில்லை – கண்பார்த்துவாதி பிரதிவாதி வம்பு வழக்கெல்லாம்காதிலவன் சொன்ன கதை பதில் சொல்லத் தெரியாது விழித்திட்டவேதியனைச் சிறையிட்டத் தன்மகனை வேண்டிட்டஆதிசிவன் மண்டியிட பிரணவத்தின் விரிவுரையேகாதிலவன் சொன்ன கதை! ஏதிலார் குற்றம்போல் தன்குற்றம் காணாதுவீதியிலே சென்றவனை …
1 – வேதம் படித்தவர்க்கும் வித்தை அறிந்தவர்க்கும்நாதம் இசைப்போர்க்கும் நல்கவில்லை – பேதமில்லாபாதங்கள் பட்டநிலம் பார்த்தது மோட்சமதுமாதவன் தானுண்ட மண் 2 – சிலிக்கன் வழிவந்த சில்லுப் புரட்சிகலிகாலம் ஆளும் கம்ப்யூட்டர் ஆதியெங்கே?பாதாதி கேசத்தில் அண்டம் அளந்திட்டமாதவன் தானுண்ட மண்! 3 …
குப்பைகளைத் தரம்பிரிக்க கற்றுக்கொடுத்திருக்கிறார்களாம் பள்ளியில் மக்கும் குப்பை மக்காக் குப்பை என உதட்டுக்குள்ளேயே அடிக்கடி சொல்லிப்பார்த்துக்கொள்கிறாள் பேத்தி
எத்தனை யுகங்கள் கடந்திருக்கும் இந்த பிரியத்தின் மழைத்துளி! அதன் கண்ணாடி மோன உடல் மிதந்தலைந்தது எங்கெங்கே!
நட்சத்திரப் பூத்தையல் காலத்தறி நெய்த இன்னுமொரு இரவு. கண் திறவா பிள்ளையின் இதழ் சிரிப்பாய் வெள்ளி குழைத்த நிலாத்துண்டு.
அறுவடைக்கென ஆட்கள் வந்திருக்கிறார்கள் நல்லாச்சி வீட்டு தோப்பில் வகைவகையாய் மாங்காய்களும் பலாப்பழங்களும் வாழைத்தார்களுமாய் கனியக்காத்திருந்தவற்றில் குத்தகை போக மீதத்தை அடுக்குகிறார்கள் நல்லாச்சி வீட்டு முற்றம் நிறைய