வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். வான்திறந்து பெய்யாதோ விண் என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: காய்ந்த …
கவிதை
கருமை சூழ் நள்ளிரவில் மாமழையின் மண்வாசம் வரஅறையின் சிறு அகல்விளக்கும் சுழற்காற்றினில் அல்லாட…காரிருள் சோக நிழல் போர்த்திய காதலியின் நெஞ்சமதுநூலறுந்த பட்டம் போல் வேதனையில்துடிதுடிக்க… கண் மூட மறுக்கும் நொடியெல்லாம் காதலனின் நினைவு வாட்டவிண்ணெட்டும் காதலது உள்ளுக்குள் வேதனையாய் வலிகள் தர…தவிக்க …
தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா தூக்கம் இல்லாத இரவு சரியாக இதுதானென்று சொல்ல முடியாத சோகமொன்றுநரம்பில் பாய்ந்து மனதைத் தாக்கியதும்நெஞ்சுக்குள் “சிறைப்பட்டிருந்த” துக்க நதிகண்களிலிருந்து “விடுதலையாகும்” கண்களுக்குக் கனவுப்பசி எடுக்கும்போதுவீசிய இராத்திரி வலையில் தூக்கமீன் சிக்காதுமூடாத இமைகளுக்கு நடுவில் சிக்கிக்கொண்டதெளிந்தும் தெளியாத அவளுடைய …
நல்லாச்சி உறங்குகிறாள்சமையலறைப் பாத்திரங்கள் ஓசையின்றிசைகையில் பேசிக்கொண்டிருக்கதாழ்வாரம் வரை வந்துதயங்கி தவிப்போடு அமர்ந்திருக்கும்வெயிலின் தங்க நிறம்படிகளில் தேன்துளிகளாய்த் தேங்குகிறது பகலெல்லாம் ஓயாமல் உழைத்த களைப்பில்பாயில் சாய்ந்திருக்கிறாள் நல்லாச்சிஇறகுகளை மெல்ல விரித்த தென்றல்அவளுக்கு இதமாய் விசிறகாற்றில் கலைந்த நிழல்கள்பூனைக்குட்டியாய் அவள் காலடியில் முடங்குகின்றனமுற்றத்தில் விளையாடும் …
இலைகளில் இடைவெளி சிதறும் கதிரொளி தைக்கும் பட்டாம்பூச்சி.
ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 5 – தமிழ் மண்ணில் ஹைக்கூ( நிறைவுப்பகுதி)
தமிழில் ஹைக்கூவிற்கான அறிமுகத்தைத் தந்தவர் பாரதியார் என்றே சொல்ல வேண்டும். ‘சுதேசமித்திரன்’ இதழில் அவர் எழுதிய ஜப்பானிய கவிதைகள் என்ற கட்டுரையில் இருந்து சில பகுதிகள் இங்கே: “சமீபத்தில் “மாடர்ன் ரிவ்யூ” என்ற கல்கத்தாப் பத்திரிகையில் உயோநே நோகுச்சி என்ற ஜப்பானியப் …
தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா சித்திபேட் டூ மஸ்கட் வயா ஹைதராபாத்போகவேண்டும் என்று ஒருநாளும் இருக்காதுநிம்மதியற்ற வாழ்க்கை இருக்க ஒண்ணாதுகால் வீட்டில் இருந்தால் வயிற்றுப் பசி தீராதுஇறக்கை விரித்துக்கொண்ட மறுகணம் ஈரக்கண் காயாதுஇதுவே கடைசிமுறை என்றெண்ணிய ஒவ்வொரு முறையும்முடிவுகளெல்லாம் புதிய கலக்கங்களுக்குத் தளிர் …
இருளின் நஞ்சை விழுங்கிஅமுதச் சுடரினைப் பொழியும்மௌன மரங்களின் கனவுலகில்சஞ்சரிக்கும் மேகங்கள்பூக்களின் புன்னகையை உதிர்க்கின்றன. தன் காயங்களை மறைத்துபிரபஞ்சத்தை ஒளிரச்செய்யும்தேவதையின் வெண்ணிறச் சிறகுகளைஇருட்டறையில் சிறைப்பிடித்து வைத்திருக்கிறதுஒரு பேராசைக்காரனின் நிழல். சுரக்கும் அமுதக்கலசத்தை உடைத்துஅதில் தன் இருட்டைக் கலந்துதன்னை வாழவைத்த பேரன்பின் கழுத்தைமென்மையாக அறுத்துப் …
… அவ்வப்போது ஒரு நண்டு மற்ற நண்டுகளின் மேல் ஏறி வாளியின் விளிம்பை நோக்கி ஏறத் தொடங்கும். …
அறியாமை அகழியுள் அறிவினை சிதைத்துவழிகாட்டும் நல்லற நெறிகளை மறுத்துபேராசைகள் பல கொண்டு பொய்க் கடலில் வீழ்ந்துவஞ்சம் பொறாமைத் தீ மனதினில் வைத்து… நிறம் இனம் மத மொழி பேதத்தினால் பிரிந்துதினம் போர்க்கோலம் பல பூண்டு புதுப்பகை வளர்த்துமாந்தர்தம் நல்லுறவை சடுதியில் முறித்துநேர்மையின்றி …