மகரந்தத் தூது

1.

காட்டுப் பூவிடமிருந்து
எழுகிறது பட்டாம்பூச்சி
குறைகிறது ஒரு வண்ணம்.

2.

பனி கரையும் காலை
மலர்க் கொத்துகள் மேல்
சிறகுலர்த்தும் தேனீ.

3.

கடக்கும் பட்டாம்பூச்சி
நடுங்கும் வெண்ணிதழ்கள்
தென்றலின் மேல் பழி.

4.

பூவுக்குப் பூ
தாவும் தேனீ
தோட்டத்தின் கடிதம்.

5.

தேனீ பறந்தபின்
நிமிரும் மலர்
தனித்தாடும் தண்டு.

*

ஒளிப்படம் & குறுங்கவிதைகள்: ராமலக்ஷ்மி

Author

  • ராமலக்ஷ்மி :
    எழுத்தாளர், கவிஞர், ஒளிப்படக் கலைஞர். பெங்களூரில் வசிக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டங்கள் பெற்றவர். சொந்த ஊர் நெல்லை. தனது வலைப்பூ மற்றும் இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், பத்திரிகைகளில் எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நூல் விமர்சனம், ஒளிப்படம் ஆகிய பல தளங்களில் இயங்கி வருகிறார்.

    இவரது ‘இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பு, ‘மு.ஜீவானந்தம்’ இலக்கியப் பரிசையும், ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய' விருதையும் பெற்றுள்ளது. ‘அடை மழை’ சிறுகதைத் தொகுப்பு ‘திருப்பூர் அரிமா சக்தி’ விருதைப் பெற்றுள்ளது. இவர் எடுத்த ஒளிப்படங்களும் பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அட்டைப் படங்களாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Related posts

மருத்துவர் பக்கம் – 45:  மனப்பருமன்

வரலாற்றில் பொருளாதாரம் – 42

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 16:  அணக்க நகரம்