கவிதை

அனு பாப்பச்சன் கவிதைகள்

தமிழாக்கம்: ஆசிஃப் மீரான் கண்கள்அடைவதற்கும் முன்பேஅவசரப்பட்டுஉள்ளுக்குள்ஏறி வந்தது மேல்கூரையின்நட்சத்திரங்களைப் பார்த்துகை வீசியது பகல்சொல்லமுடியாதமனதில் ஒடுங்கியஒரு வார்த்தைகூட்டத்தில் அடையாளமென்பது போலமினுங்கி நின்றது படுக்கைக்கருகில்மஞ்சள் நாற்காலியில்கால் நீட்டிவழக்கமான இருப்பு விரல்கள்நெட்டி முறிக்கின்றனஒவ்வொரு நெட்டி ஒலியிலும்ஒரு நினைவுமணிநிலத்தில்வீழ்ந்து மறைகிறது மழலையாயிருந்த காலத்தில்என்னைப் பாலூட்டியநிசப்தம்மடியிலிருந்துஊர்ந்து இறங்கியது இடையில்ஒளிந்து…

Read more

மல்லிகா அமர்ஷேக் கவிதைகள் : மராத்தி.

தமிழாக்கம் : புதியமாதவி வீடு திரும்பும் மனிதர்கள் தோல்வியுற்ற படைவீரர்கள்தங்கள் முகாம்களுக்குதிரும்புவது போலமனிதர்கள்தங்கள் வீடுகளுக்குத் திரும்புகிறார்கள். பெண்கள்வீடுகளை அடைகாக்கிறார்கள். கூர்மையான அறிவுடன் இருந்தகுழந்தைகள் கூடபின்னர்ஈசாப்* போல அடிமையாகிவிடுகிறார்கள்.அனுசரித்துப் போகும் பழக்கத்தின்நஞ்சுக்கொடியைச் சுமந்துசங்கிலிபோல சுழன்றுஸ்தம்பித்துவிடுகிறார்கள்.ஓவ்வொருவரும்அவரவருக்கான தனிப்பட்டதுயரங்களின் மடியில்சத்தமின்றித் தூங்கிப்போகிறார்கள். வீடுகள் பின் வீடுகள்நகரங்கள்…

Read more

பனிவிழும் வனங்களிடை நிதானித்தபோது – ராபர்ட் ஃப்ராஸ்ட் கவிதை

தமிழாக்கம்: பவளமணி பிரகாசம் யாருடைய வனங்களிவையென நானறிவேன்அவன் வீடிருப்பதோ கிராமத்தினிலேஅவன் வனங்கள் பனியால் நிரம்புவதைநான் நின்று ரசிப்பதை அவன் அறியமாட்டான் ஆண்டின் மிக இருண்ட மாலைப்பொழுதில்வனங்களுக்கும் உறைந்த ஏரிக்கும் இடையில்பண்ணைவீடொன்றும் அருகில் இல்லாமல் நின்றதேன்என்றெனது சின்னக்குதிரை வியக்குது சுகமாய் உலாவும் காற்றும்…

Read more

மொழிபெயர்ப்புக்கவிதைகள் – சந்திரா மனோகரன்

ஓ! மலையருவியின் அருகே நிற்கும் மழலையே!—– —————————————————————————ஆங்கிலம் : ஜார்ஜ் பார்க்கர்தமிழில் : சந்திரா மனோகரன் ஓ! மலையருவியின் அருகே நிற்கும் மழலையேஓர் இதயம் மட்டுமே கேட்ட அழைப்பை போலசொற்களற்ற பாடல்கள் அந்த வெள்ளப்பரப்பில்எழுகின்றன!எல்லாவற்றிலும் நிரம்பியிருக்கும் ஆனந்தம்எழும்புகிறதுஒரு பட்சியின் சீழ்க்கையொலிபோல ஓ!…

Read more

பொன்னந்தி – பி.பி. போர்க்கர்(மராத்தி)

தமிழாக்கம்: சாந்தி மாரியப்பன் குஞ்சுகள் சிறகை விரிக்கின்றனஎங்கெங்கோ உள்ளன அவற்றின் கூடுகள்நமது பொன்மாலைநேரம் இப்போதுபொன்னொளிரும் மேகவிதானங்களுடன் எத்தனை கவலைகள் இருப்பினும் போயினும்மென்வெய்யில் பரந்து விரிகிறதுஇருள் அடர்ந்து நிலவாகிஅமைதியாக மலர்கிறது நேற்றைய நினைவுகளை முழுமுற்றாய் மறந்துவாழும் இன்றைய நினைவுகளைச் சேமிப்போம்குழந்தைபோன்ற தூய மனதோடுஇன்னொரு…

Read more

அதிசயங்கள் – வால்ட் விட்மன்

தமிழாக்கம்: நளினி சுந்தரராஜன் அதிசயத்தைப் பற்றி யார் பெரிதாகப் பேசுகிறார்கள்?அதிசயங்களைத் தவிர வேறொன்றும் எனக்குத் தெரியாது, நான் மன்ஹாட்டன் வீதிகளில்நடந்தாலும் சரி, அல்லது வீடுகளின் கூரைகளுக்குமேல் விண் நோக்கிபார்வையைச் செலுத்தினாலும் சரி, அல்லது கடற்கரை ஓரத்தில்வெற்றுக் கால்களுடன்நீரின் விளிம்பில் நடந்தாலும் சரி,…

Read more

நல்லாச்சி – 29

This entry is part 29 of 37 in the series நல்லாச்சி

தோல்பாவைக்கூத்து தெருக்கூத்துஇரண்டும் வந்திருக்கின்றன கிராமத்திற்குஊர்த்திருவிழாவை முன்னிட்டுதெய்வங்களும் கொஞ்சம்உற்சாகமடைந்து புத்துணர்வு கொள்கின்றன நல்லாச்சியும் பேத்தியும்தினம் ரசிக்கின்றனர் இரு கூத்துகளையும்அர்ச்சுனன் தபசையும், நள தமயந்தியையும்அரிச்சந்திரனையும் பாஞ்சாலி சபதத்தையும்நல்லாச்சி சொன்ன இன்னபிற கதைகளையும்கூத்துவடிவில் பார்த்த பேத்திராஜாக்களையும் ராணிகளையும்பளபளக்கும் அரசவாழ்வையும்நிஜமெனவே நம்பத்தொடங்குகிறாள்இரவிலும் பகலிலும் வெவ்வேறாய்ச் சுழல்வதுஅவர்கள் உலகம்…

Read more

இரு கவிதைகள் – டு ஃபு

போர் ரதங்களின் பாடல் மூலம்: ”Ballad of the Army Carts” by Du Fuஆங்கிலத்தில்: David Lundeஆங்கிலத்திலிருந்து தமிழில்: ராமலஷ்மி ரதங்கள் உருளுகின்றன,கடகடவென அதிர்கின்றன.குதிரைகள் கனைக்கின்றன,சீற்றத்துடன் மூச்சு விடுகின்றன.படைவீரர்கள் இடுப்பில் வில்லும் அம்பும் கட்டிஅணிவகுத்துச் செல்கின்றனர்.தந்தைமார், தாய்மார்,மனைவியர் மற்றும் குழந்தைகள்அவர்களை…

Read more

குறுங்கவிதை – மர்வான் மஃகூல்

தமிழாக்கம்: அனானி அரசியலற்றகவிதைஎழுதநான் பறவைகளைக்கவனிக்க வேண்டும்பறவைகளைக்கவனிக்கவேண்டுமென்றால்போர் விமானங்கள்அமைதியாக வேண்டும்.

Read more

ஏப்ரல் – 1

பள்ளி முடிந்துஅவசர அவசரமாகவீட்டிற்கு வந்துஅம்மா வருவதற்குள்பேனா மைத்துளிகள்கோலமிட்ட சீருடையைசோப்பு நீரில்முக்கித் துவைக்கையில்… பறந்து உடையும்வண்ண நீர்க்குமிழிகளில்அன்றைக்கு சூதுவாதின்றிநண்பர்களுடன் ஏமாற்றிகொட்டமடித்த எண்ணங்கள்மின்னி மறையும்; பிள்ளைப் பருவத்தில்ஏமாந்த கோபத்திற்குநீர்க்குமிழியின் ஆயுள்,நீடித்த நட்பினில்கடுமைகள் ஏதும்பலநாள் தொடராது. மனதினில் எதனையும்நிறுத்திக் கொள்ளாதிருக்கஒரு முறையேனும்மீண்டும் வாராதோ…கள்ளமில்லா பிள்ளைப்பருவஏப்ரல் 1.

Read more