சொற்கள் உதிரும் வெளியில்தன் முகமூடியைக் கழற்றிய காலம்கடந்துபோன வரிசையில்ஒரு கதை அடைகாத்து விழித்திருக்கிறது பார்வை தொட்ட இடமெல்லாம்படிமங்கள் பெருககற்பனை தொட்ட பிம்பங்கள்நிழல்களிலிருந்து உயிர்த்தெழுந்துநிஜமும் புனைவுமாய்ஒன்றையொன்று விழுங்கிக்கொள்ளஅக்கதை தன் சொந்தப்பாதையைவரைந்து கொள்கிறது ஒரு சொல்லெடுத்துப் பதித்துஇன்னொரு சொல்லை அடுக்கிஅக்கதை நெய்யும் பெருங்கதையில்மொய்த்து முரலுகின்றனஎத்தனையோ …
shanthy Mariyappan
சூரியன் தனது எட்டுமணி மென்மையைக் கைவிட்டு, பதினோரு மணி வெம்மைக்குள் நுழையத்தொடங்கியிருந்த ‘சுள்’ பொழுது. “ச்சாய்.. ச்சாய்.. இஞ்சி ச்சாய்” என எங்கிருந்தோ ஒரு குயில் கூவிற்று. கூவிய குயில்குரல் மெதுவாக மிதந்து வர வர சிவராமனுக்கு தேநீர் பசியெடுத்தது. பல …
ஈரநிலவின் நறுமணம் கசியும் வெளியில்இந்த இரவின் கிளைகளில்வெண்முத்துப்பரல்களாய்க் குலுங்கும்ஓராயிரம் நிலாமொட்டுகளின் நெற்றியில்தன் மென்விரல்களால்காற்றைத்தொட்டுமுத்தமாய்ப் பதிக்கிறதுஒளித்துகள்களால் நெய்யப்பட்ட கவிதையைஆடையாய் உடுத்த இரவு ஆசைகளின் அடர்ந்த மெளனத்தில்தூங்காதிருக்கும் கவிதைகள்இரவின் காதில் ரகசியமாய் மொழிபவற்றைதன் யாழில் சேமித்துக்கொள்கிறான்யாரோ ஒரு பாணன் அப்பாடல்களின் வெளிச்சம்பட்டுசுடரின் முத்துகளெனநீ தந்த …
முற்றத்தில் நின்றிருந்த அந்த ஒற்றை வேப்பமரம், அதிகாலைப் பனியில் நனைந்து சொட்டிக் கொண்டிருந்தது. மாரிமுத்துவின் கையில் இருந்த பழைய இரும்புப் பெட்டி அப்படியொன்றும் கனக்கவில்லை. திணிக்கப்பட்ட ஒன்றிரண்டு துணிமணிகள் என்ன கனத்து விடப்போகின்றன? வீட்டின் கதவை இழுத்துப் பூட்டியபோது எண்ணெய் இடப்படாமல் …
அரிசிஉளுந்து அளந்தெடுத்துஅண்டாநிறைய அரைத்துவைத்துவெடிக்காத உப்புச்சீடையும் கருகாத வெல்லச்சீடையும்பிரிபிரியாய்க் கைமுறுக்கும் பக்குவமாய் அதிரசமும்பல்லில்லாத கிச்சாவுக்கு பதமான மைசூர்பாவுமாய்அரங்குவீட்டில் அடுக்குகிறாள் நல்லாச்சி‘எச்சியாக்கிராதியோ பிள்ளேளா..கண்ணனுக்குப் படைச்சுட்டு ஒங்களுக்குத்தாம்’ என்றபடிதொறவாலைப் பத்திரப்படுத்துகிறாள் இடுப்பில்அரங்குவீட்டில் ஒரு கண்ணும்பேரம்பேத்திகள் மேல் இன்னொரு கண்ணுமாக பச்சரிசி ஊறவைத்து பக்குவமாய் தானரைத்துமங்களமாய் மாக்கோலங்களைஇழைத்து …
காலம் உறங்கும் இருட்டு அறையில்நிழல்கள் நிஜங்களை வேட்டையாடுகின்றன.நீலக் கண்ணீர்த்துளிகளாய்சூரியன் உருகி வழியகடந்த பாதைகளின் காலடித்தடங்கள்கள்ளிச்செடிகளாய் முளைத்து நிற்கின்றன தொண்டைக்குள் அடைபட்டுக் கிடந்த மௌனம்ஒரு கருப்புப் பறவையாய்ஆன்மாவைக் கொத்திக்கொண்டிருக்கஆழ்மனதின் கடலில் மூழ்கிவலிகளைச் சேகரிக்கிறேன் முத்துக்களென வானத்தை நோக்கியஒரு புதிய வாசல்தான் வலிகாலம் எறிந்து …
இடித்த பச்சரிசி மாவும்ஈருருண்டை வெல்லமும்இரண்டுக்கும் தோதான தேங்காய்களுமாகஒளவையாரம்மன் கோவிலுக்குப்புறப்பட்டுக்கொண்டிருக்கிறதுநல்லாச்சியின் குடும்பம் உப்பொரு வகை இனிப்பொரு வகையெனஅவித்து வைத்த கொழுக்கட்டைகளும்அவை வெந்த நீரில் காய்ச்சிய கூழுமெனஅம்மைக்கு இவர்கள் படைக்க“முன்தயாரிப்பு வகைகளும் கிடைக்குது மக்ளே”என்கிறாள் ஒளவை“புதியவையோ சூடாக்கியவையோ யானறியேன்ஊதித்தின்ற சுட்ட பழம் இன்னும் நெஞ்சினிக்கஊர்ப்பட்ட …
வளைந்து தொங்கும் நிலாவின் விளிம்பில்மிதக்கும் என் பாதங்கள்நிகழ்காலத்தின் காலணிகளை அணியும்போதுகாற்றோடு கரைந்துபோகிறதுஎன் ஆதி முகவரிகளின் வாசனை ஒவ்வொரு வாசலையும் கடக்கும் நேரம்காலம் தோல் உரித்துக் கொள்ளும்போதுஉதிர்ந்து விழும் என் நிழல்கள்யாரோ விட்டுச்சென்ற நிழற்படத்தைதன் முகம் என நம்ப முயல்கின்றன வண்ணத்துப் பூச்சியின் …
நல்லாச்சி உறங்குகிறாள்சமையலறைப் பாத்திரங்கள் ஓசையின்றிசைகையில் பேசிக்கொண்டிருக்கதாழ்வாரம் வரை வந்துதயங்கி தவிப்போடு அமர்ந்திருக்கும்வெயிலின் தங்க நிறம்படிகளில் தேன்துளிகளாய்த் தேங்குகிறது பகலெல்லாம் ஓயாமல் உழைத்த களைப்பில்பாயில் சாய்ந்திருக்கிறாள் நல்லாச்சிஇறகுகளை மெல்ல விரித்த தென்றல்அவளுக்கு இதமாய் விசிறகாற்றில் கலைந்த நிழல்கள்பூனைக்குட்டியாய் அவள் காலடியில் முடங்குகின்றனமுற்றத்தில் விளையாடும் …
இருளின் நஞ்சை விழுங்கிஅமுதச் சுடரினைப் பொழியும்மௌன மரங்களின் கனவுலகில்சஞ்சரிக்கும் மேகங்கள்பூக்களின் புன்னகையை உதிர்க்கின்றன. தன் காயங்களை மறைத்துபிரபஞ்சத்தை ஒளிரச்செய்யும்தேவதையின் வெண்ணிறச் சிறகுகளைஇருட்டறையில் சிறைப்பிடித்து வைத்திருக்கிறதுஒரு பேராசைக்காரனின் நிழல். சுரக்கும் அமுதக்கலசத்தை உடைத்துஅதில் தன் இருட்டைக் கலந்துதன்னை வாழவைத்த பேரன்பின் கழுத்தைமென்மையாக அறுத்துப் …