”ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே” – என்றான் அனந்த்.
”ஓ.. அது பழைய படமோன்னோ.. நான் மலையாள டப் பார்த்தேன்” – என்றாள் ஆயுஷி.
”ஆயுஷி, ஐ மீன் இட்..”
”ம்க்கும்.”
”நன்னா ம்க்கும் சொல்ற..”
”அனந்த்.. நான் என் ரூமுக்குப் போறேன்.. சித்பா நம்ம பேச்சக் கேட்டு முழிக்காணு.. நீ என்ன பண்ற, என்னோட செல்லுக்கு என்னைத் திரும்ப விளி..”
டிஸ்கனெக்ட் செய்ய, அவன் அவளுடைய செல்லில் திரும்ப விளித்தான்.
எடுத்தாள்.
”இதான் என் பெட்ரூம், நல்லா இருக்கா?”
”நைஸ்டி..”
”ஆமா அனந்த் குஞ்ஞு. எண்ட குட்டிப் பூச்சை… உன்னை எப்படி விளிக்கறது?”
”எப்படி வேணும்னாலும் விளி என் பொன்னு மோளே.”
”உன்னோட ஃப்ரெண்ட்ஸ் உன்னை எப்படிக் கூப்பிடுவாங்க?”
”அனந்த்னுதான்.. வெய்ட், ஒரு யூஎஸ் ஃப்ரெண்ட் இருக்கான் ராஜேஷ்னு, அவனும் சரி, என் பாட்டியும் சரி, ஆனந்தான்-னுதான் என்னைக் கூப்பிடுவாங்க.”
”ஆனந்த்-னா ஹாப்பினஸ், இஸிண்ட் இட்?”
”யா.. அங்க வழக்கமே இப்படித்தான்.. இன்னொரு ஃப்ரெண்ட், அவனோட பேர் லோகநாதன்.. அவன் தனக்குத்தானே லோகோ-ன்னு வச்சுண்டுட்டான்.. பட் ஆயுஷி..”
”என்னவாம்?”
”என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி பிஹேவ் பண்ணிண்டு.. ரொம்ப மோசம்டி..”
”இப்படி எல்லாம் ‘டி’ போட்டா நான் ஒண்ணும் பறயான்பாடில்லா..”
”அழகா இருக்கடி நீ.. அதென்ன லைட் கலர் நைட்டி.. ப்ரௌனா.. நெத்தில பொட்டு வச்சுக்காதது அப்படியே மழைல நனஞ்ச அல்லி மலராட்டம் இருக்க..”
”அல்லி?”
”லில்லிடி..”
”போடா.”
”சொல்லு, எதுக்காக இப்படி?”
சொன்னாள்.
”நீ என்கிட்ட சொல்லாமயே இருந்திருக்கலாமே.. எனக்கு ஒண்ணும் தெரிஞ்சுருக்காதே.. ஒய் யூ கால்ட் மீ டு டாண்டியா?”
”சொல்லறதுக்குத்தான் மடையா..”
”என்ன சொல்ல?”
”நான் தானே சொன்னேன் லவ் யூ-னு.. ரெசிப்ரோகேட்டே பண்ணலை..”
”பட் அத்தைக்காக மேரேஜ்லாம்?”
”கொஞ்சூண்டு சின்னதா ஒரு ஹோப் ஒட்டிண்டு இருந்தது.. நீ என்னடான்னா என் பக்கம் திரும்பற வழியே காணோம். அந்த ஆஷா பின்னாடியே சுத்திண்டு இருந்த.. அதான்..”
”ஹப்புறம்..?”
”அப்புறம் தப்பண்ணிட்டேனோன்னு பிரமை.. ஒரு வேளை நீ என்னை லவ் பண்ணிட்டேன்னாக்க யூ ஷுட் நாட் ஃபீல் ஸேட், இல்லியா? ஸோ ஐ ஆக்ட்ட் லைக் தட்..”
”இப்போ மட்டும்?”
”அதான் உருகிட்டியே.. உன்னோட சித்தப்பாவோட தப்பான மெஸேஜால.. ஆமா, அப்படி நான் போயிருந்தா என்ன பண்ணியிருப்ப?”
”ச்.. வாயைக் கழுவி மறுபடி லிப்ஸ்டிக் போட்டுக்கோ ஆயுஷி.. எனக்கு நெகட்டிவ் தாட்ஸ்லாம் பிடிக்கவே பிடிக்காது.”
”ம்க்கும்.. என்ன பண்ணிண்டுருந்த சித்பா சொன்னதுக்கப்புறம்?”
”பீச் போய் கடலலையைப் பார்த்தேன்.. எல்லா இடத்துலயும் உன் முகம்தான் தெரிஞ்சது.”
”அம்புட்டு லவ்வா என் மேல?”
”என்ன நீ அந்தக் கால ட்ராவல் ஏஜண்ட்டாட்டம் பேசற.. வெய்ட் லிஸ்ட், கன்ஃபர்ம், ரீகன்ஃபர்ம்னு.. எஸ் எஸ் எஸ்ஸு, சரியா?”
”ம்.. கேன்சலாகிடக் கூடாதில்ல..”
”அஃதெல்லாம் கேன்சல் ஆகாதுடி..”
”எண்ட ஹ்ருதயமாகுன்ன அம்பலத்தில் நின்ன விக்ரகமாய்ப் ப்ரதிஷ்டிச்சு பூஜை செய்யுண்ணு. ஞான் நின்ன கண்ணில கிருஷ்ணமணி போல சினேகிக்குன்னு…. அது நினக்கு அறியுமோ” – என்றாள் ஸ்ருதி பிசகாமல் மலையாளத்தில் ஆயுஷி.
”புரியலை.. அப்ப்ப்ப.. நீ வேகமா மலையாளத்துல பேசற..”
”ச்சீ போடா.. இதையெல்லாம் தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ண முடியாது..”
”சரி.. பாரேன், உன்னைப் பார்த்த சந்தோஷத்துல உனக்கு முத்தாவா கொடுத்தேனா, போன் ஈரமாகிடுத்து..”
”ம்..”
”என்ன ம்..?”
”அதான் நானும் என்னன்னு கேக்கறேன்?” – பின்னால் குரல் வர, ”பை சீ யூ லேட்டர்” சொல்லி டிஸ்கனெக்ட் பண்ணித் திரும்பினான்..
அம்மா, பின்னால் ஆர்யா…
”என்னடா.. ஆளே இல்லாத காட்டுக்குள்ள அடிச்ச புயல்ல விழற மரம் கூட அமைதியாத்தான் விழுமாம், தெரியுமோ? நீ என்னடான்னா… கன்னிப் பொண்ணாட்டமா குப்புற விழுந்துண்டு யார் கிட்ட பேசிண்டு இருக்க?” – என்றாள் அம்மா.
அனந்த் முழிக்க, உடன் வந்த யெல்லோ சுடி ஆர்யாவும் அதை விட முழித்தாள்.
”ஆண்ட்டி.. நீங்க என்ன சொன்னீங்க? புரியலையே..”
ஹிஹி.. அம்மா சிரித்தாள்.. ”ஜென் கதை.. வாட்ஸ்அப் க்ரூப்ல கேட்டேன். அதுலருந்து யூஸ் பண்ணிக்கணும்னு தோணிண்டுருந்தது.. சொன்னேன், தப்பா? உனக்கு புரிஞ்சுதோ?”
”சுத்தமாப் புரியலை”.. இது ஆர்யா..
”சரி அனந்த்.. வா ஹாலுக்கு.. யார் கிட்ட பேசின?”
”ஆஃபீஸ் கலீக்மா..”
”ஓ” – என்றாள் ஆர்யா..
”தூரக்க பாக்கறச்சே பொண்ணு மாதிரி இருந்தது.. வீடியோ காலா?”
”ம்” – என்றான் அனந்த்..
”சரி வாடா.. வேணுகோபால் உன்கிட்ட ஏதோ பேசணுமாம்” – என்றாள் அம்மா..
ஹாலுக்குச் சென்றவுடன் அங்கு வேணுவும் அப்பாவும் எதையோ பேசிக் கொண்டிருந்தனர்.
வேணு நிறுத்தினார்.
மஞ்சள் சுடி ஆர்யா கொஞ்சம் அவள் அம்மாவுக்கு ஜாடை காட்ட, அவள் அம்மா எழுந்து ஆர்யாவுடன் ஹாலை விட்டுச் சென்றாள்.
”அனந்த்” – என்றார் வேணுகோபால்.
”நான் சுற்றி வளைத்தெல்லாம் பேசவில்லை.. ஸ்ட்ரெய்ட்டாகவே சொல்கிறேன். என் பெண் ஆர்யா உங்களை லவ் செய்கிறாள். அதைத்தான் ஸ்ரீனிவாசவரதனிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்” – என்றார்..
அனந்த் பேச்சிழந்தான்..
*
”அப்படிப் போடு அரிவாளை” – என்றார் சித்தப்பா திருவல்லாவிலிருந்து..
”சித்தப்பா..”
”அதென்ன அது, உங்க ஆஃபீஸ் ஆஷா சொல்வாளே.. பாய்ண்ட் எண்ட் டே டோஹ் த்ரெ.. அதே மாதிரி உனக்கு பாய்ண்ட் எண்ட் டே ஆஷா, பாய்ண்ட் டோஹ் ஆயுஷி, பாய்ண்ட் த்ரெ ஆர்யா. கொஞ்சம் கிட்டக்க முகத்தை க்ளோஸப்ல காட்டு.. இந்த ஆட்டுத்தாடில என்ன இருக்குன்னு இவ்ளோ பொண்ணுங்க உன்கிட்ட விழறாங்க..”
”சித்பா!” என அலறினான். ”இதெல்லாம் பாய்ண்ட்ஸ் இல்லை, பெண்கள்.”
”அதான் என்னோட பாய்ண்ட்.. சரி, நீ என்ன சொன்னியாம் வேணுகிட்ட? அதை விடு, ஆர்யா மேட்டர் கொஞ்ச நேரம் கழிச்சுப் பேசலாம். முதல்ல ஆயுஷி.. அவ மலையாளத்துல என்ன சொன்னான்னு புரிஞ்சுதாடா?”
”சித்பா, நாங்க ஸ்வீட் நத்திங்க்ஸ் எவ்வளவோ பேசினோம். அதுல மலையாளத்துல பேசினத உங்ககிட்ட சொன்னது தப்பாப் போச்சு..”
”லூசு, அவ சொன்னது இதாண்டா…. ‘என் மனசுங்கற அம்பலத்துல உன்னை விக்ரகமா வச்சு ஆராதனை பண்றேன் அனந்த். என் கண்ணுக்குள்ளயே அன்பால உன்னை வச்சுண்டுருக்கேன், அது உனக்குத் தெரியுமோ’ அப்படின்னுருக்கா…”
”அப்ப தெரியலை.. இப்ப நீங்க சொன்னதும் க்ளியர்.. அதுக்கு என்னங்கறேள்..?”
”ஒண்ணும் சொல்லலை.. கொஞ்சம் இரு, இன்னும் ஆயுஷி வீட்லதான் இருக்கேன். நானும் உன்கிட்ட சிலது சொல்ல வேண்டியிருக்கு.. ரூம் கதவை தாழ் போட்டுண்டு வர்றேன்…” என்றார் சித்தப்பா.
(தொடரும்)