58
வா வள்ளிக்கா… எங்க மேக்க இருந்து வர..
மேவரத்து காட்டுல, மழ பேஞ்சதுக்கும் அதுக்கும் பில்லு மொழங்கால் வளத்திக்கு கருகருனு கெடக்குது.அதா எருத ஒரு கட கட்டீட்டுவரலானு போன. வெயிலுக்கு மிந்தி, வளத்திக்கவற போட்டு கட்டீட்டா வவுறு நம்ப மேஞ்சுக்கும்..
ஆமா ஆமா வாஸ்த்தவந்தே..
ஆமா,வடிவா மருமவ எப்படி தேவுலியா.
சோறு ,கொழம்பெல்லாம் நல்லாத்தா ஆக்கறாளாமா. ஆனா நறுவுசு கெடயாது ஒரே சூரத்தனமாமா போ..
( சூரத்தனம் : சுத்தமில்லாம இருக்கறது )
ஊட்டுக்குள்ள போறக்கில்லினா கூட மூனு நாளானா வழிச்சுட்டு தண்ணி ஊத்தறது இல்லயாமா போ..
கேட்டா ஒட்டிகிட்டா இருக்குதுங்கறாளாமா ..
அட சூரச்சியே