தமிழாக்கம்: அனானி

மர்வான் மக்ஹூல் ஒரு பாலஸ்தீனியக் கவிஞர் ஆவார். இவர் 1979-ஆம் ஆண்டு மேல் கலிலீயில் உள்ள அல்-புகையா கிராமத்தில், பாலஸ்தீனியத் தந்தைக்கும் லெபனானியத் தாய்க்கும் மகனாகப் பிறந்தார். இவர் ஒரு கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பொறியியல் துறையில் பணியாற்றி வருகிறார்.

அரசியலற்ற
கவிதை
எழுத
நான் பறவைகளைக்
கவனிக்க வேண்டும்
பறவைகளைக்
கவனிக்க
வேண்டுமென்றால்
போர் விமானங்கள்
அமைதியாக வேண்டும்.

Author

You may also like

Leave a Comment