Home இதழ்கள்இதழ் 11வலைப்பூ – 4
This entry is part 4 of 4 in the series வலைப்பூ

“சுசிதானே? நான் மீனா பேசுறேன்.”

சுசியின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. ஆனால் நாடித் துடிப்பு எகிறியது. முகம் தெரியாத ஒரு குரல், தன் வீட்டின் தனிமைக்குள் அத்துமீறி நுழைந்தது போன்ற உணர்வு.

உணர்ச்சிகளைச் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டாள்.

“சொல்லுங்க மீனா. யார் நீங்க? என்ன வேண்டும்?” என்றாள் சாதாரணமாக.

“உங்களுக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கும், எனக்கு எப்படி உங்க எண் கிடைச்சுதுன்னு. LinkedIn அப்படிங்கிற இணையத் தொழில்முறைப் பக்கத்துல அர்ஜுனோட விவரங்களில் இருந்து மெல்ல மெல்ல விவரங்கள் சேர்த்து, உங்க ஐடி பிடிச்சு உங்களைத் தேடிக் கண்டுபிடிக்க அஞ்சு நிமிஷம் ஆச்சு.”

மீனாவின் குரலில் எந்தத் தயக்கமும் இல்லை. மிகத் தெளிவான, முதிர்ச்சியான குரல். சுசி அமைதியாக இருந்தாள். அடுத்த நகர்வு மீனாவுடையது.

“அர்ஜுன் ரொம்பக் குழம்பியிருக்கான் சுசி. அவனுக்கு யாரோ பிரிகேட் சாலைக்கு வரச் சொல்லிச் செய்தி அனுப்பியிருக்காங்க. அது நான் இல்லை.”

“ஓ… நீங்கதான் அந்த மீனாவா? உண்மையச் சொல்லவா? அந்த மெசேஜ் நான்தான் அனுப்பினேன்,” என்றாள் சுசி, எவ்விதக் குற்றவுணர்ச்சியும் இன்றி.

தொலைபேசியின் மறுமுனையில் ஒரு நீண்ட மௌனம்.

“சரி, நான் அனுப்பின மெசேஜ் உங்களுக்கு எப்படித் தெரிஞ்சது?”

“’சொன்னபடி பிரிகேட் ரோடில் சந்திப்போம்’ அப்படின்னு அவனே மெசேஜ் அனுப்பி இருந்தான். ஆனா நீங்க ஏன் இப்படி ஒரு மெசேஜ் அனுப்பினீங்க?”

“ஒரு மாயையைக் கலைக்க. அவன் கற்பனையில இரண்டாயிரத்து எட்டுல இருந்த அதே மீனா இருக்கா. நிஜத்துல அவ வரமாட்டான்னு அவனுக்குப் புரியணும். அவன் அந்தப் பழைய வலைப்பூவுக்குள்ளயே செத்துப் போயிருக்கக் கூடாது.”

மீனா மெதுவாகச் சிரித்தாள்.

“நீங்க நினைக்கிறது தப்பு சுசி. நான் பெங்களூரில்தான் இருக்கிறேன். சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்திருந்தேன். மெசேஜ் பார்த்துட்டு இப்ப நான் பிரிகேட் சாலையில அர்ஜுன் உட்கார்ந்திருக்கிற தேநீரகத்துக்கு எதிர்ல ஒரு புத்தகக் கடையில இருந்து அவனைப் பார்த்துக்கிட்டு இருக்கேன்.”

சுசி பலமாக அதிர்ந்தாள்.

Series Navigation<< வலைப்பூ – 3

Author

You may also like

Leave a Comment