Home கவிதைகாலத்தை வென்றவன் கண்ணதாசனே

சொல்லாலே காட்சியைச் சுவைபடவே காட்டியே
செல்லாத இடத்திற்கும் சென்றுவரவே வைத்திடும்
வில்லாளன் கண்ணதாசன் வியப்பிற்கு நேரானார்!
கல்லாத மனிதருக்கும் காவியத்தைப் படைத்தார்!

உள்ளத்து உணர்வுகளை உவமைகளில் வைத்திட்டு
எள்ளெனில் எண்ணெயென எண்ணத்தில் ஏற்றிட்டு
பண்ணெடுத்துப் பதமாகவே பாரத்தை இறக்கியே
மண்ணிற்குப் பெருமையாய் மன்னவன் நின்றாரே!

பலாவாழை மாவுடனே பாலோடு தேனுடனே
உலாவரும் காற்றலையில் உவகைக் கூட்டியவர்!
எழுத்தாலே எளியவரும் இளைப்பாறித் தன்னாலே
பழுதுபார்க்க நெஞ்சத்தைப் பாட்டாலே தொடுபவர்!

இலக்கியத்துப் பெருமையை இலையிட்டு விருந்தாக்க
பலரிங்கு பாவியற்றவே பாட்டுயர் சொற்களஞ்சியமே!
கலையாலே மருந்தாக்கிக் களிப்பாக்கும் புவியிதனில்
காலத்தை வென்றவன் கண்ணதாசனே என்றும்!

Author

You may also like

Leave a Comment