Home கவிதைவர்ணம் மாறிய வரைபடம்

காலத் தூரிகைத்
துடைத்துச் சென்ற
பக்கங்கள் யாவிலும்
அழுத்திப்பிடித்த கறைகள்
புரட்டி எடுக்கும்
நினைவின் அசைவில்
வெளிப் பரவும் வண்ணத்துகள்கள்
அலைவரிசையை நிறைத்துவிட்ட
அலப்பறையில்
படபடக்கும்
பக்கங்கள்
அத்துணையிலும்
புதுப்புது கலவைகளால்
தோய்த்து வைக்குமொரு
மாயம் நிகழும்
ஒன்று
கூடி
ஒன்று
குறைந்து
கலந்து திரிந்து
வர்ணம் மாறிய
வரைபடமென வாழ்க்கை
நின்றிருக்க
நிதானிக்க
நகர்ந்து செல்ல
தேவையாய் இருக்கிறது..
அன்னியப்படுதல் எனும் விதி.

Author

You may also like

Leave a Comment