Home இதழ்கள்இதழ் 14எண்ட் டோஹ் த்ரெ – 7
This entry is part 6 of 6 in the series எண்ட்.. டோஹ்.. த்ரெ

வாரத்தில் ஐந்து நாட்கள் நெட்டி முறிக்கிற வேலை.. இருப்பதோ மார்க்கெட்டிங் என்றாலும் கூட ஷாப் விசிட், சேல்ஸ் பற்றிய கவலைகள்.. மீட்டிங்குகள் என பொழுது எட்டு மணி எட்டரை என ஓடி விடும்.. வந்தால் தூங்கத்தான் சரியாக இருக்கும் அனந்திற்கு..

வெள்ளி, சனியில் பேச்சிலர்ஸ் போல சுற்றுவதெல்லாம் இல்லை.. புத்தகங்கள் புத்தகங்கள். கொஞ்சம் நல்ல புதிய பழைய பாடல்கள்.. அம்மா ரொம்பக் கேட்டால் ஸ்டார் சினிமாவில் நைட் ஷோ புதிய தமிழ்ப்படம் கூட்டிப் போய் தூங்கிவிட்டு வருவான். கொஞ்சம் கொஞ்சம் சித்தப்பா சொல்லிக் கொடுத்ததால் விருத்தம் வரும்.. சுமாராக..

அந்த சனிக்கிழமையும் அப்படித்தான்.. வெள்ளி நைட் ஷோ.. மனசுக்குள் ஆயுஷி ஆயுஷி என்று அடித்தாலும் கூட அம்மாவுடன் சென்று படம் பார்த்து, தூங்கி பதினோரு மணிக்கு எழுந்து குளித்துக்கொண்டு கொஞ்சம் லஞ்ச் சாப்பிட்டான்..

ஏன் சித்தப்பாவிடமிருந்து பதிலில்லை?

ஒரு வாரத்திற்குள் செல்வதாகத்தான் சொல்லியிருந்தார்.. கருந்தாட்டாங்குடியில் அவரது வீட்டில் சில வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் உடனே செல்ல முடியவில்லையாம்…

சாப்பிட்ட பின் அம்மா, அப்பா இருவரும் கிளம்பினார்கள்.. ஒரு பிரண்ட் வீட்டிற்குப் போய் பேசிவிட்டு ஈவினிங் கோவில், பின் வருவார்களாம்..

பை சொல்லிவிட்டுக் குட்டித் தூக்கம் போட்டு எழுந்து டைம் பார்த்தால் மூன்றரை..

கை அனிச்சையாய் செல்போனை எடுத்துப் பார்க்க சித்தப்பாவிடமிருந்து குட்டியாய் மெசேஜ்…

”ஆயுஷி இஸ் நோ மோர்…”

கொஞ்சம் மனதுக்குள் போக மறுத்தது அந்த மெசேஜ்.. ஏன் என்னாச்சு?.. கொஞ்சம் இதயம் திகைத்து விரல் மறுபடி கேள்வி கேட்க, அது செல்லாமல் செல்லில் ஒற்றைக் கோடு காட்டியது..

டவர் இல்லை.. நெட்வொர்க் இல்லை… ஆயுஷியும் இனி இல்லையா?

ஆயுஷி என் ஆயுஷி… என் கண்ணே ஆயுஷி..

மளுக்கெனக் கண்ணில் நீர் வந்தது.. இருக்காது.. இருக்காது.. எப்படி இப்படி இவ்வளவு விரைவாய்…

போனை வெறித்தான்..

பேசாமல் கலீகாவே இருந்திருக்கலாமே ஆயுஷி..

கொஞ்சம் பெட்டிற்கு அருகில் சிகப்புச் சுடிதாரில் அமர்ந்திருப்பது போன்ற பிரமை.. பின் பீரோவின் பக்கம் மொட்டை மாடியில் பார்த்த பிளாக் டீஷர்ட் அண்ட் வொயிட் லெக்கின்ஸுடன்… என்ன அனந்த்.. எனப் புன்முறுவலாய்த் தோற்றம்..

ஏன் ஏன் ஆயுஷி?..

படபடவெனப் பெய்யும் மழைத்துளிகளாய் சடசடவென வந்து காதலுடன் ஆடி, பின் அதே போலவே மறந்து விடு சொல்லிச் சென்றது இதற்குத்தானா?

என்ன ஆயிற்று ஆயுஷி?

சித்தப்பாவிற்கு அடித்தால் எடுக்கவில்லை.. அவுட் ஆஃப் ரீச்..

ஆயுஷியும் அவுட் ஆஃப் ரீச், இப்போது சித்தப்பாவும் தான்.

ம் ஆண்பிள்ளை அழக்கூடாதாம்.. நல்லவேளை அப்பா, அம்மா இல்லை..

இங்கு தனியாக இருந்தால் கொஞ்சம் பைத்தியம் பிடிக்கும் போல இருக்கிறதே…

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு.. புல் ஷிட், என் ஆயுஷி இஸ் வெரி மச் வித் மீ..

சில தினங்களிலேயே முளைத்து ஆலமரமான காதல்… ஆரம்பத்திலேயே ஏற்றுக் கொண்டிருக்க வேண்டுமோ.. அச்சோ மறுபடி அன்னைக்குச் சாப்பிட்ட மெக்டொனால்ட்ஸ்க்காக அவளைக் கூட்டிச் சென்று பே பண்ண வேண்டும் என நினைத்தேனே.. அனந்தா.. அல்பம்டா நீ.

ம் சரி இப்ப என்ன செய்யலாம், கிளம்பலாம்.. சித்துவிடமிருந்தும் தகவலில்லை.. கொஞ்சம் பீச் போய் உட்கார்ந்து விட்டு வரலாம்.. நிஜமான செய்தியா அது.. ஆயுஷி…

கண்ணிலே விழுந்து விட்டு
காட்சியை தந்து விட்டு
மண்ணையும் விட்டுப் போக
மனதுதான் வந்ததோடி
என்னிடம் சொன்னதென்ன
இன்றுதான் செய்ததென்ன
அன்பெதும் இல்லையாடி
அழவைக்க லாகுமோடி..

ஒன்றின் ரியல் வேல்யூ அதை இழக்கும் போது தான் தெரியும் என்பார்கள்.. அப்படித்தானோ.. ரொம்பவே வலிக்கிறதடி பெண்ணே.. இப்படி இருந்துவிட்டேனே…

எந்திரமாய் வீட்டைப் பூட்டி கீழே வந்து மரமாகக் காரைத் திறந்து உயிரில்லாமல் அமர்ந்து அதைக் கிளப்பி ஓட்டி, பதினைந்து நிமிடங்களில் அல்க்வைர் பீச்..

அது அனந்திற்கு ரொம்பப் பிடித்த பீச்..

கிரவுட் இருக்காது.. கொஞ்சம் பசுமையாக புல்வெளி, தூரத்தில் கடற்கரை.. இந்தப்பக்கம் இண்டர்கான்.. என கொஞ்சம் நீளம்.

சனி மாலை என்றாலும் கூட்டம் கம்மிதான்.. முன்னால் லஞ்ச்சிற்கு வந்து சாப்பிட்டுப் போனவர்கள் விட்ட பார்பெக்யூ கட்டைகள் கரியாய்ச் சிரித்தன…

தூரத்தில் கடல் சற்றே உள் வாங்கியிருப்பதாகத் தெரிந்தது..

ம்.. நடக்கலாம்.

அனந்த் நடந்தான்.. கடல் அலைகள் சில்லென காலின் மீது பட்டாலும் உறைக்கவில்லை.. கொஞ்சம் தள்ளிச் சென்று காலை நீட்டி அலைகள் தொடுவதற்கு வாகாக உட்கார்ந்துகொண்டான்..

”அனந்த்”

”என்ன ஆயுஷி?”

”இந்த ஸ்டேட்மெண்ட்.. கொஞ்சம் அந்த ….” என ஆபீஸ் விஷயம் பேசினாலும் குறுகுறுவெனப் பார்த்தாளே.

”உங்களுக்கு இந்த புளூ ஷர்ட் நல்லா இருக்கு.. அண்ட் நைஸ் டை டூ..”

ஸ்டேட்மெண்ட்டைக் கவனித்தபடி ”தாங்க்ஸ் ஆயுஷி” என்றேனே.. அன்றும் அவள் அழகாக பச்சைக் கலர் சுடிதார் என நினைவு.. புதிய கம்மல்கள் கூட எமரால்ட்… குட்டியாய் ஆடியதாக நினைவு..

திருப்பி அலுவலைப் பற்றிப் பேசும் போதும் ஆர்வமாய்ப் பார்த்த விழிகள்..

”அனந்த்..”

”யெஸ் ஆயுஷி..”

”இந்தாங்க ஸ்வீட்”

”என்ன ஸ்வீட்?”

”சாரி தான் கொடுத்தார்… ஸ்ரீரங்கத்துலருந்து வந்ததாம் அரவணை..”

”ஆயுஷி.. அப்படிக் கூட ஸ்வீட் இருக்கா என்ன?”

”தெரியாது”.. கண்ணில் குழப்பம்… ”ஏன் சிரிக்கறீங்க? நான் என்ன சொல்லிட்டேன்?”

”அரவணைன்னா ஹக்னு அர்த்தம் தமிழ்ல, அதுல ஸ்வீட் இருக்கா என்ன…?”

”ம்க்கும்.. சொன்னா மட்டும் செஞ்சுடுவீங்களாக்கும்” முணுமுணுத்து உதடு சுழித்துத் திரும்பிச் செல்ல,
”வெயிட் என்ன சொன்ன ஆயுஷி?”
திரும்பி.. ”ம்க்கும் ஐ வில் ஆஸ்க் சாரி என்றேன்..” எனச் சொல்லிச் சென்றாளே…

அந்தக் காலத்தில் பைண்ட் செய்யப்பட்ட தொடர்கதைப் புத்தகங்கள் சித்தப்பா வீட்டில் பார்த்திருக்கிறேன்.. அதில் வருமே பெண்கள் இனிமையான தருணங்களை வெளிப்படுத்த பல வழிகளை முயற்சிப்பர், அவற்றில் ஒன்று கட்டாவ் சேலைகள் என்று.. வருமே.. அதே போலவே இவளும் தான் எவ்வளவு முயற்சித்தாள்.

”அனந்த்”

”ஆயுஷி..”

”இந்த செண்ட் இஸ் நைஸ்.. நேத்து போட்டது நல்லாலை”..

”நேத்தா, நேத்து பாஸ், இன்னிக்கு டயார்.. ஓகே தேங்க்யூ.. இந்தப் பார்ட்டியோட” என ஆரம்பித்தேனே.. அவளுக்கு ஒரு காம்ப்ளிமெண்ட்ஸ் கொடுத்திருக்கிறேனா?

ஆயுஷி.. இப்படிப் புலம்ப வைத்துவிட்டாயடி…. சித்தப்பாவிற்கு கேட்கலாமா.. ஓ மை குட்னஸ், போனை வீட்டில் மறந்து விட்டேன்..

அனந்தின் சிந்தனைகளைக் கலைத்தது ‘ஹெல்ப் ஹெல்ப்’ என்ற குரல்.. குரலில்லை அலறல்..

சற்றுத் தள்ளி கொஞ்சம் கூடுதலான தூரத்தில் ஒரு வெள்ளைக்காரப் பெண் குழந்தை தவித்தபடி இருந்து கொஞ்சம் மூழ்கியது..

அனந்த் திரும்பிப் பார்த்தால் அவளது தாயார் கொஞ்சம் தொலைவிலிருந்து ஓடி வருவது தெரிந்தது.. எதையும் யோசிக்கவில்லை… பர்ஸ், கார்கீ கொஞ்சம் தள்ளி மணலில் வைத்து டபக்கெனத் தாவி அந்தக் குழந்தை நோக்கி நீந்தினான்..

நல்லவேளை ரொம்ப தூரமும் போகவில்லை.. கொஞ்சம் மூழ்கப் பார்த்ததை எடுத்துக் கொஞ்சம் இழுத்து கரைக்குக் கொண்டு வந்தால்…. வெள்ளைக்காரி அந்தக் குழந்தையை அணைத்துக் கொண்டாள்… யூரோப்பியனாக இருக்க வேண்டும்.. ”தாங்க்ஸ் தாங்க்ஸ்” என்றாள்.. உடன் இருந்த சில ஆடவர்களும் தாங்க்ஸ் சொல்ல, அந்தப் பெண்ணின் அம்மா அனந்தின் கார் கீயையும் பர்ஸையும் தந்தாள்..

”ரொம்ப சிரமம் உங்களுக்கு”

”இட்ஸ் ஆல் ரைட்” சொல்லிக் கொஞ்சம் நடந்தான் அனந்த்.. ஜீன்ஸ் டார்க் புளூ.. டீஷர்ட் பிளாக் தான்.. சோ ஈரம் பார்ப்பவருக்குத் தெரியாது..
வீடு போயிடலாம்..

”ஆயுஷி பார்.. நான் ஒரு உயிரைக் காப்பாற்றியிருக்கிறேன்.. நீ என் உயிரை எடுத்துக் கொண்டுவிட்டாய்.. இனி எனக்கும் உறக்கமில்லை.. என் நிழலுக்கும் கூடத்தான்”..

வீடு சென்று குளித்துத் தலையைத் துவட்டிய போது பெல் அடித்தது. திறந்தால் அப்பா… அம்மா, கூடவே பின்னிருந்த இருவர்.

திறந்து விட்டு உள் செல்ல எத்தனிக்கையில்… ”அனந்த்.. சீக்கிரம் டிரஸ் செஞ்சுண்டு வா…”

”சரிப்பா..”

”ஒரு நிமிஷம் இரு” என்றார் சீனிவாச வரதன்..

”இவர் சாரியோட ரிலேஷன்.. ஹி இஸ் வொர்க்கிங் இன் சூர் திவான் ஆஃப் ராயல் கோர்ட்.. பெயர் வேணுகோபால்”

”ஹலோ”
”ஹலோ..”

”என்னடா இப்ப குளியல்?”

”பீச் போய்ட்டு வந்தேம்மா.”

”இவனே.. இது மிசஸ் வேணு..” என்று விட்டு, ”இது…” என ஆரம்பித்தார் சீனிவாச வரதன்.

அந்த இதுவைப் பார்த்தான் அனந்த்.. டார்க் எல்லோ சுடிதார், டார்க் ரெட் லெக்கின்ஸ்.. நெற்றியில் குட்டிப் பொட்டுடன் சிரித்தது அந்த அது..

”இது… வேணுவோட டாட்டர் ஆர்யா” என்றார் சீனிவாச வரதன்.

(தொடரும்)

Series Navigation<< எண்ட் டோஹ் த்ரெ – 6

Author

You may also like

Leave a Comment