3
மின்சாரம் வழிந்தோடும்
கம்பி பட்டவுடன்
விசிறப்படும் யாக்கை போலவே மனமிருந்தது..
நம்பிக்கையின் பெயர்
வைத்து துரோகம்
இயற்றிய பொழுது..
பனிச்சில்லுகள் மேல் நிற்கையில்
வழிந்தோடும் குருதியின்
ரணத்தை பரிசளித்தது
உள்ளொன்று வைத்து வெளிப்படும்
கானல் சிரிப்பு..
எப்போதும் போல் தீயில்
பொசுக்கி விட்டு அறியாதது போல்
அக்கறை களிம்பு தடவியதில்
இன்னும் பற்றி எரிகிறது
உணர்வுகள்..
ப்ரூட்டசாகவே இருப்பதையறிந்தும்
தாயுமானவனாகவே வருகிறேன்
குத்தப்பட்டு குற்றுயிராக கிடக்கிற
புன்னகையை சுமந்துகொண்டு.