“பொல்லாத்தனம் செய்பவர்களை ஒழிப்பதற்கு ஒரே வழி நாம் பொல்லாதவர்களாக மாறுவதுதான். அதுவும் இப்போதுதான் இத்தனை ஜென்மங்களில் நீ சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறாய்.” கடகடவென சிரிப்பு வந்தது எனக்கு. சிரிக்கவும் முடியாது. ஏனெனில் கையில் தூக்கிக்கொண்டிருந்த இயந்திரத் துப்பாக்கியின் கனம்; தவிர முதுகில் …
குறுநாவல்
விக்ரம் சாத்திவிட்டுப் போன கதவின் அதிர்வு அந்த அறைக்குள் வெகுநேரம் தங்கியிருந்தது. மேசையின் மீதிருந்த அந்தச் சிறிய காகிதத் துண்டை அர்ஜுன் கையில் எடுத்தான். அதில் சில எண்களும் எழுத்துகளும் கலந்த ஒரு புதிய கடவுச்சொல் கிறுக்கப்பட்டிருந்தது. சுசி சமையலறைக் கல்மேடையில் …
“யூ ஸ்டுப்பிட் இடியட்!” அழகான கொஞ்சம் பிங்க் நிறப் பூப்போட்ட காகிதத் தட்டில் இரண்டு சமோசாவை எடுத்து வைத்து மெல்ல பொடி நடையாய் அங்கிருந்த ஓவனில் சூடு படுத்தப் போன அந்தக்கடைப் பெண் முழித்தாள். கோபத்துடன் நான் சொல்லியிருப்பேன் என்று பார்த்தவள் …
சனிக்கிழமை காலை. பத்து முப்பது. பெல்லந்தூர் அடுக்குமாடிக் குடியிருப்பு வழக்கத்தை விட அமைதியாக இருந்தது. அர்ஜுன் நேற்றிரவு சுசியிடம் எல்லாமும் ஒப்பித்துவிட்டான். அவளுக்குப் புரிந்தது – மீனா அவனது மாயையைக் கலைத்துவிட்டாள் என்பது. அர்ஜுன் சோபாவில் அமர்ந்திருந்தான். கைகளில் காபி குவளை …
முதலில் ஒரு கல். கையைக் கொஞ்சம் குவித்து வீசியதில் தொபுக் க்ளக். குளத்தில் மூழ்கியது. இரண்டாவது கல்… தட்டையாகவும் கொஞ்சம் வேகமாகவும் எறிந்ததில் ஒரு இடத்தில் தொபுக் எனச் சத்தமிட்டுப் பின் தாவி சற்றுத் தூரத்தில் விழுந்தது. “பாவனி. என்ன செய்து …
5 நான்-கள்: அத்தியாயம் ஒன்று
“நடிப்பின் அளவுகோல் என யாரைச் சொல்லலாம் தெரியுமா? உன்னுடைய நந்தினிதான் அது, ஆதித்த கரிகாலா!” கிட்டத்தட்டக் கத்தலாய்ச் சொன்னான் பார்த்திபேந்திரன். கண்களில் கொஞ்சம் பொறாமை கலந்த உணர்வா என்ன? செவேலென்றிருந்த முகம் மீண்டும் சிவந்துவிட உதடுகள் துடித்தன. உற்றுப் பார்த்தேன் அவனை. …
“சுசிதானே? நான் மீனா பேசுறேன்.” சுசியின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. ஆனால் நாடித் துடிப்பு எகிறியது. முகம் தெரியாத ஒரு குரல், தன் வீட்டின் தனிமைக்குள் அத்துமீறி நுழைந்தது போன்ற உணர்வு. உணர்ச்சிகளைச் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டாள். “சொல்லுங்க மீனா. யார் …
நின்ற கால்கள் நின்றபடி இருக்க, அந்தப் பெரியவரை நோக்கிச் சென்ற கண்களின் பார்வை திரும்பாமலே இருக்க… கொஞ்சம் சிரமப்பட்டுப் பார்வையைத் திருப்பி, மறுபடி அவரைப் பார்த்தான் சுல்தான் மாலிக் ஏஜாஸ். தீர்க்கமான, சாந்தமான கண்கள். வயதான உடல். ஆனால் தேஜஸ்… உடலில் …
வெள்ளிக்கிழமை காலை. அர்ஜுன் சரியாகத் தூங்கவில்லை. கண்கள் சிவந்திருந்தன. முகச்சவரம் செய்யும்போதே கை லேசாக நடுங்கியது. நேற்றிரவு சுசிக்குத் தெரியாமல் அந்த எண்ணிற்குப் பதில் அளிக்க முயன்றான். ஏதும் போகவில்லை. மீனாவின் பழைய எண்ணிற்கே செய்தி அனுப்பினான்: “பிரிகேட் ரோட், டீ …