எண்ட் டோஹ் த்ரெ – 5

This entry is part 4 of 4 in the series எண்ட்.. டோஹ்.. த்ரெ

வணக்கம், ஆரு ஹியர்..

அது சரி, திடீர்னு ஒரு மலையாளப் பெண் எதுக்கு குஜராத்தி டான்ஸுக்குக் கூட்டிக்கிட்டுப் போகணும் அனந்தை எனக் கொஸ்டின் வரலாம் உங்களுக்கு.

மஸ்கட் இருக்கே, இந்த கருந்தட்டாங்குடி அண்ட் அமெரிக்க கிராமம் இரண்டும் கலந்த கலவை..

மஸ்கட் அண்ட் மத்ரா என்று வழங்கப் படும் இடத்தில்தான் மஸ்கட் மன்னரின் அரண்மனை இருக்கிறது. அதைச் சுற்றி மினிஸ்ட்ரீஸ் பில்டிங்ஸ் உண்டு. ஆனால், அங்குச் செல்லும்போது சின்னச் சின்னச் சந்துகள், அந்தக் கால ஓமானிய வீடுகள் எல்லாம் உண்டு.

அந்த மத்ராவில் ஒரு சிவன் கோவில் உண்டு. பல வருடங்கள் ஆன கோவில்.

அதே போல் டார்ஸெய்ட் என்ற இடத்தில் கிருஷ்ணன் கோவில்.. இரண்டும் மேக்ஸிமம் பராமரிக்கப்படுவது சிந்தி மற்றும் குஜராத்திகளால்தான்.. கிருஷ்ணன் கோவிலில் ஆடிட்டோரியம் உண்டு.. அதில் எல்லா நிகழ்வுகளும் நடக்கும் – ஐயப்பன் பூஜை, ஸ்ரீனிவாச கல்யாணம், நவராத்திரி டாண்டியா, கல்ச்சுரல் ப்ரோக்ராம்ஸ் என ஸீஸனுக்குத் தக்கபடி எனலாம்…

எனில், நம்ம ஆயுஷிக்கும் குஜராத்தி ஃப்ரண்ட்ஸ் உண்டு.. அவர்கள் அழைத்ததனால், அதுவும் டிக்கெட் கொடுத்ததால்தான் அனந்தை அழைத்திருக்கிறாள்..

ம்.. தெளிவாகிடுத்தா.. மஸ்கட் பற்றி அனந்த், சீனு மற்றும் நானும் இரண்டு தடவைகள் பார்த்ததால் சொல்கிறேன் உங்களிடம், அதுவும் வெகு கொஞ்சமாக….

இனி ஓவர் டு மார்ல்பரோ க்ரெளண்ட்ஸ்.

ஆயுஷி சொன்னதும் அனந்த்துக்குச் சற்றே தடுமாற்றம்..

”ஆயுஷி, எனக்கு டாண்டியா வராதே…”

”ச்ச்.. இது ஒரு விஷயமா என்ன… இங்கு இருந்தால் சும்மா வேடிக்கை பார்க்கப் படாது…”

துப்பட்டாவை இடுப்பில் கட்டிக்கொண்டாள்.. அதீத உதட்டுச்சாயம் அணிந்து ஆடிக்கொண்டிருந்த ஒரு தோழியிடம் கேட்க, அவளும் இரண்டு ஜோடி டாண்டியா ஸ்டிக்குகளைக் கொடுக்க,

”இந்தா அனந்த்..”

”சரி…”

”இது ஒரு ஸ்டெப், இது இன்னொன்று, இதை இப்படி அடிக்க வேண்டும்..”

இரண்டு கைகளிலும் வைத்து அடித்துக் காண்பித்து, ”இந்தாங்க அடிங்க..”

ஒரு ஸ்டெப் ஒரு அடி, ஒரு ஸ்டெப் ஒரு அடி…

பத்து நிமிடங்களில் அனந்துக்குப் பழக, கொஞ்சம் வேகமும் பிடித்தது…

அங்கே பாடியவரும் வேகப் பாடலுக்கு மாறியிருக்க, இவர்களும் கொஞ்சம் சுழன்றாடினர்..

உடன் ஆடிய குஜராத்தி மாமா அனந்தைப் பார்த்து, ”யூ ஆர் ஸ்மார்ட், லேர்ண்ட் சூன்” எனச் சொல்ல, அனந்த் வெட்கப்பட்டான்..” அண்ட் யுவர் கேர்ள் இஸ் எ பியூட்டி…”

ஆயுஷியும் முறுவலித்தபடியே ஆடிக்கொண்டிருந்தாள்..

ஒரு ஷணப் பொழுதில் சற்றே தடுமாற, கோல் கொஞ்சம் அழுத்தமாகவே ஆயுஷியின் கோலின் மீது படாமல் அவள் கையில் பட்டுவிட, ஆயுஷி ‘ஷ்ஷ்’ எனக் கொஞ்சம் உதறிப் பின் முறுவலித்து ஆடலைத் தொடர, அனந்த் ஜாடை செய்து நிறுத்தினான்.

”ஆயுஷி.. வலிக்கலையா…?” மஞ்சள் வெளிச்சத்தில் மேலும் பொன்னாய் மின்னிய கரத்தைப் பிடித்தான்.. ஷ்.. கொஞ்சம் சிவந்திருக்கே எனத் தடவினான்.. ”வலிக்குதா..?”

சிவந்தாள்…

”ம்ஹும், கையை விடு அனந்த்..”

”இப்படி எல்லார் மத்தியிலும் சுழன்றாடும் போது உன்னைப் பார்ப்பதே வெகு அழகு… இவ்வளவு அழகை எங்கு ஒளித்திருந்தாய்?… ”

”யோவ்.. முடிஞ்சா மலையாளத்துல பேசு.. சுத்திலும் இங்க்லீஷ், ஹிந்தி புரியும்.”

”ஏன், நீ தமிழ்ல பேசப்படாது.. நெசம்மாவே வலிக்கலையா..?”

”இல்லை.. சரி வா ஆடலாம்…”

தொடர்ந்து சில மணி நேரம் ஆடிக் கிளம்பும்போது பதினொன்றரை..

கார் பார்க் பண்ணியிருந்த இடத்தில் ஆள் நடமாட்டம் இல்லை.. சற்றே தள்ளி நிறுத்தியிருந்ததால் கொஞ்சம் ஜாஸ்தி இருள்..

அந்த இடத்திற்குச் செல்லும் வழியில் அனிச்சையாக அனந்த்தின் கைகளைப் பிடித்தாள் அவள்.. அப்படியே நடந்தனர்..

ரிமோட்டால் காரைத் திறக்க வைத்து, அவளுக்கு அமர்வதற்குக் கதவைத் திறந்துவிட்டான் அனந்த்.. கொஞ்சம் மெல்லிய இருள் அண்ட் கொஞ்சம் குளிர் தென்றல் அதிசயமாக அங்கு இருந்தது..

”அனந்த், ஒரு நிமிஷம்…”

”என்ன ஆயுஷி…?”

படக்கென அவனை அணைத்துக் கன்னத்தில் கன்னம் உரசி, சடக்கென விலகினாள் அவள்..

சற்றே அவள் உடல் நடுங்கியது.

”ஆயுஷி, என்ன ஆச்சு..?”

”ம்.. ஒண்ணும் இல்லை…” கண்ணோரம் நீர் அவளிடம்.. துடைத்துக்கொண்டாள்.. ”அனந்த், நீ வண்டியை எடு.”

அல்க்வேரில் அவளது ப்ளாட் இருக்கும் இடம் வரும் வரை எதுவும் பேசவில்லை..

”ஆயுஷி..”

”அனந்த்”

”சொல்” என்றான் காரை நிறுத்தியபடி..

”என்ன சொல்ல?”

”ஏன் அழுகை…. ஏன் தடுமாற்றம்..?”

”ஜஸ்ட் தான்டா பையா… அப்படிச் செய்தால் தான் நீயும் சும்மா இருப்பாய்.. சரியா..?”

மெல்லிய வெளிறல் சிரிப்பு.. அவள் சொன்ன த்வனியே பொய் என்றது..

”ஓகே, குட் நைட் டார்லிங்க்.”

டார்லிங்க்கா.. முதல் தடவை சொல்கிறாள்.

”குட் நைட்..” காரை எடுக்காமல் அவள் உள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான் அனந்த்..

மறுநாள் ஆயுஷி அலுவலகத்திற்கு வரவில்லை.. ‘நாட் வெல்’ என்று வாட்ஸ்அப் மெஸேஜ் மட்டும் சாருக்கு அனுப்பியிருந்தாள்..

ஹாய், ஆராவமுதன் ஹியர்…

வாழ்க்கை எப்போதும் நேர் ரோடாகத்தான் இருக்கும் என்பதில்லை.. திடீரெனத் திருப்பங்கள் வரலாம்.. அதுவும் ஷணப்பொழுதே பலரின் வாழ்க்கையை மாற்றிவிடலாம்… உண்மை.. உதாரணம்: சுனாமி…

ஆயுஷியிடம் ஆடியதைப் பற்றிச் சொல்லியிருந்தான் அனந்த் அன்றிரவே…

ஏதோ புத்தகம் படித்தபடி நானும் விழித்திருந்ததால் ‘குட்’ என மெஸேஜ் அனுப்பினேன்..

”குட், ஒண்ணு போனா ஒண்ணு கிடைச்சுடுத்து பார்த்தியா?”

”எஸ் சித்து.. ஆனா தெரியலை.”

”ஏன்…?”

”அவ என்னை ஹக் பண்ணினப்போ லேசா குலுங்கினா.. ஆசை, காதல், பாசம் கூடவே கொஞ்சம் குழப்பம் கூட இருந்தது.”

”என்னடா நடுரோட்டுல ஒரு பொண்ணு உன்னைக் கட்டிப்பிடிச்சுக்கறா.. அதுவும் ஒரு ஷணம்தான்.. அதுல இதெல்லாம் கண்டுட்டயாக்கும்?”

”நோ சித்து, சம்திங்க் ராங்க்.”

”படவா, கிஸ் பண்ணியா என்ன?”

”இல்லை சித்து, தோணலை..”

”ம்க்கும்.. இந்த ஆம்பளைங்களைப் புரிஞ்சுக்கவே முடியலை.!”

”தெரியலை, போறச்சே என்னைத் திரும்பித் திரும்பி மனசே இல்லாமப் பார்த்த மாதிரி போனதா எனக்குப் பட்டுது..”

”சும்மா குழப்பிக்காதடா.. மனங் கவர்ந்தவனோட முதல் அணைப்பு அவளுக்கும் கொஞ்சம் ஜிலோன்னு இருந்திருக்கும்.. இப்ப நீ என்ன பண்றேன்னா,”

”என்ன பண்ண?”

”என்ன, அவளோட டூயட் பாடு கனால்ல.. என்ன பாடப் போற..?”

”தெரியலை…”

”அழகா கிட்டக்க வந்த அவ கன்னத்தை நினைச்சுக்கோ.. முத்தமிடும் நேரமெப்போன்னு அவ உன்னை கேக்கற மாதிரி நினைச்சுண்டு பாடு..”

”போங்க சித்து.. எப்பவும் பழைய பாட்டுதானா…. குட் நைட்.”

நானும் போனை வைத்தாலும் சொன்னாற்போல என் மனதுக்குள்ளும் நெருடல்… குலுங்கினாளா.. அழுதாளா.. என்னமோ இடிக்கிறதே..

தூங்கி எழுந்தால் அனந்திடமிருந்து மெஸேஜ்:

ஆயுஷி ஆபீஸ் வரவில்லையாம்.. என்ன ஆகியிருக்கும்?

(தொடரும்)

Series Navigation<< எண்ட் டோஹ் த்ரெ – 4

Author

Related posts

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 1

ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 2 – ஹைக்கூவின் வேர்கள்

தின்று செரித்தாலும் தீது