போனா போகுதுன்னு புள்ள பெத்து பிக்பாஸ் ன்னு பேர் வச்சாப்ல, நடத்துவோம்னு ஆரம்பிச்சானுங்களா இல்ல ஆரம்பிச்சுட்டோம்னு நடத்துரானுங்களா? ஒண்ணும் புரியல போங்க.
வீட்ட ரெண்டா பிரிச்சா நிறைய கண்டென்ட் கிடைக்கும்னு யோசிச்சது ஓகே தான். ஆனா ஒரே மாதிரி கன்டென்ட் தான் கிடைக்கும்ன்றது எப்டி தெரியாம போச்சு? நீ சொன்னத நான் செய்ய மாட்டேன் நான் சொன்னத நீ செய்ய மாட்டேன்னு தான போகும்? இதுல என்ன சுவாரசியம்? பிக்கி டீம்ல வேலையாளு பிரச்சினையில்ல…அவன் மூளையாளா இல்லையான்றதுதான் பிரச்சனை. இப்பல்லாம் காலையில பாட்டு டான்சுன்னு ஏதும் இல்ல.
எந்திரிச்சதும் வீட்டு வேல பஞ்சாயத்து. வீடு கூட்ட விளக்கமாறுன்னு ஒண்ணு இருக்கிறதே வியானாவுக்கு இப்போதான் தெரியுது. “இதுக்குதான் நான் சூப்பர் வீட்ட விட்டு வரமாட்டேன், வரமாட்டேன்னு தலையால அடிச்சுக்கிட்டேன்”ன்னு பொலம்புச்சு.
இந்த FJ ஒரு மேம்படுத்தப்பட்ட மெண்டல் பயலா இருக்கான். சூப்பர் வீட்ல இருக்குறவனுங்களையும் தின்னுட்டு தூங்குறன்னு சொல்றான், நார்மல் வீட்ல இருக்குறவனுங்களையும் தின்னுட்டு தூங்குறன்னு சொல்றான்.
இதுல “வயிறு கவா கவான்னு கத்துது….கொஞ்சூண்டு காப்பியாச்சும் குடுங்கடா, குனிஞ்சு நிமிந்து வேல பாக்குறேன்”னு கேக்க, “நீ சூப்பர் வீட்ல இருந்தப்ப எங்களப் பத்தி இப்பிடி யோசிச்சிருக்கியா?”ன்னு திரும்ப பாலத் தூக்கி எறிஞ்சானுங்க. ஆதிரை ஃபுல் பார்ம்ல வியான்னாவ வித விதமா டார்ச்சர் பண்ணிட்டு இருக்கு.
பார்வதின்னு பேரு வச்சதுக்கு பதிலா பாதின்னே வச்சிருந்திருக்கலாம். எந்த வேலையையும் முழுசா பாக்குறதில்ல. குப்பைய க்ளீன் பண்ணுன்னு சொன்னா, கூட்ட மட்டுந்தான் செய்வேன், நீங்கதான் எடுத்து மூட்ட கட்டனும்னு சொல்லுது. எவனாச்சும் கேட்டா அது யாருக்குமே புரியாத மாதிரி MA பிலாசபி கணக்கா தான் பதில் சொல்லுது
பாரு: பெரும்பான்மையா சொல்றத ஏத்துக்குறீங்க…ஆனா அத மாத்தி யோசிச்சு ஒருத்தி பேசுனா கேக்குறது இல்ல
கனி: நீ மாத்தி யோசிச்சு பேசுறன்றதுக்காக நீ தப்பா சொல்றத எல்லாம் எப்டி ஒத்துக்க முடியும்?
பாரு: அப்டி என்ன தப்பா சொல்லிட்டேன்?
கனி: மீன் குழம்புல எல்லாரும் மிளகாப்பொடி போடலாமா இல்ல மிளகுத்தூள் போடலாமான்னு பேசிட்டு இருந்தா நீ வந்து மீன் போடாம மீன் குழம்பு வைக்குறதுல என்ன பிரச்சனைன்னு கேக்குற.
பாரு: அதுல என்ன தப்பு? மைசூர் போண்டால என்ன மைசூரா இருக்கு…அப்டிதான் இதுவும்//
பாவம் கனியக்கா. எந்தப் பக்கம் திரும்புனாலும் பஞ்சாயத்து. வியான்னா வேல பக்கலன்னு இந்தப் பக்கம் போனா…பாருவ வம்பிழுத்த கேசு அந்தப் பக்கமா வருது…வாட்டரு ஆனியன் திருடுறான்னு இந்தப் பக்கம் போனா….கலை சூன்யம் வைக்கிறான்னு அந்தப் பக்கம் பிரச்சனை. கனியக்கா கொஞ்சம் குனியக்கான்னு செய்யுறானுங்க.
இப்ப கதை சொல்ற நேரம்.
பாரு: பாரு கதை ஊருக்கே தெரியும்.
ப்ரவீன்: இவன் மிருகம்னு தெரியும் ஆனா சந்தேக மிருகம்னு இவன் சொல்லித்தான் தெரியும்.
ரெண்டு பேரும் அழுது வடியாம கதை சொன்னதுக்கே கர்த்தருக்கு காவடி எடுக்கலாம்.
இப்ப அடுத்த டாஸ்க். இது ஏதோ ஜூஸ் கடை டாஸ்க்காம். பிக்பாஸ் அனுப்புற காலி பாட்டில்ல ஆளாளுக்கு ஜூஸ் பிழிஞ்சு குடுக்கனுமாம். அத ஜட்ஜஸ் கணக்கு பண்ணி காயின் குடுப்பாராம். அது மூலமா சில சலுகைகள் இருக்காம்.
இதுல ஜட்ஜா இருக்குறதுக்கு 3 தகுதிகள். குறை கண்டுபிடிக்கிறதுல பத்ம ஸ்ரீ பட்டம் வாங்கி இருக்கனும். ஓடி விளையாடாம உக்காந்துக்கிட்டே நொட்ட சொல்றவனா இருக்கனும். அப்றம் மத்தவங்கள பேசி கன்வீன்ஸ் பண்ற ஆளா இருக்கக் கூடாது. இதுக்குன்னே அளவெடுத்து செஞ்ச பாருவ எல்லாரும் அதாவது வாட்டரு மொதக் கொண்டு சொன்னானுங்க. வியான்னாவ ஒரு ரெண்டு பேரு சொன்னதுமே அது “என்னய கார்னர் பண்றானுங்க போல காவாளிப் பயலுக”ன்னு கண்ணீர் சிந்துச்சு. கடைசியா வாட்டரும், பாருவும் ஜட்ஜ்.
ரொம்ப ஸ்டிரிக்ட்டா ஜட்ஜ் வேலப் பாத்தானுங்க. இதுல இப்போதைக்கு சபரிக்கு 1 காயின், ரம்யாவுக்கு 2 காயின், ஆதிரைக்கு 1 காயின் கிடச்சிருக்கு. ஆனாலும் ரொம்ப மோசமாத்தான் போறீங்கடா டேய். இந்த ஆஸ்டிரிச் இருக்குல்ல ஆஸ்டிரிச் அது அவ்ளோ பெரிய முட்ட போடுமாம்….முட்ட போடும்போது….சரி, விடுங்க! அடுத்து என்னாகுதுன்னு பாக்கலாம்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
32
previous post