6
சொற்கள் உதிரும் வெளியில்
தன் முகமூடியைக் கழற்றிய காலம்
கடந்துபோன வரிசையில்
ஒரு கதை அடைகாத்து விழித்திருக்கிறது
பார்வை தொட்ட இடமெல்லாம்
படிமங்கள் பெருக
கற்பனை தொட்ட பிம்பங்கள்
நிழல்களிலிருந்து உயிர்த்தெழுந்து
நிஜமும் புனைவுமாய்
ஒன்றையொன்று விழுங்கிக்கொள்ள
அக்கதை தன் சொந்தப்பாதையை
வரைந்து கொள்கிறது
ஒரு சொல்லெடுத்துப் பதித்து
இன்னொரு சொல்லை அடுக்கி
அக்கதை நெய்யும் பெருங்கதையில்
மொய்த்து முரலுகின்றன
எத்தனையோ குறுங்கதைகள்
காண்பதெலாம் கவிதையாகும் கடப்பதெலாம் கதையாகும்
கற்பனை தொட்டு அலங்கரித்தால்
அத்தனையும் உயிர் கொளும்
கருக்கள் சுமக்கும் படைப்பாளியோ
பூரண கர்ப்பம் நித்ய ஜனனம்.