பள்ளி முடிந்துஅவசர அவசரமாகவீட்டிற்கு வந்துஅம்மா வருவதற்குள்பேனா மைத்துளிகள்கோலமிட்ட சீருடையைசோப்பு நீரில்முக்கித் துவைக்கையில்… பறந்து உடையும்வண்ண நீர்க்குமிழிகளில்அன்றைக்கு சூதுவாதின்றிநண்பர்களுடன் ஏமாற்றிகொட்டமடித்த எண்ணங்கள்மின்னி மறையும்; பிள்ளைப் பருவத்தில்ஏமாந்த கோபத்திற்குநீர்க்குமிழியின் ஆயுள்,நீடித்த நட்பினில்கடுமைகள் ஏதும்பலநாள் தொடராது. மனதினில் எதனையும்நிறுத்திக் கொள்ளாதிருக்கஒரு முறையேனும்மீண்டும் வாராதோ…கள்ளமில்லா பிள்ளைப்பருவஏப்ரல் 1.
இதழ் 11
இந்த உலகத்தில் பிறப்பது மனிதர்களானாலும் சரி, என்னைப் போலவே மிருகமானாலும் சரி, ஆண்களாகவே பிறக்கக் கூடாது! ஏனாம்? பாருங்கள். நான் கண்களில் வெறியுடன் காது விடைத்து மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கிறேன் சில நாட்களாக. நோ ரெஸ்ட். என் மேல் ஜக்கு; அவனும் என் …
சுவர்கள் எப்போதும்செங்கற்களால் எழுப்பப்படுவதில்லை,சில நேரங்களில் அவை எண்ணங்களைசுவாசித்தும் எழுகின்றன.இயலாதெனும் தயக்கமும்வேண்டாமெனும் எச்சரிக்கையும்ஒரு முடிச்சாகப் பிணைந்துகாலத்தைக் கட்டிப் போடுகின்றன. நமது எல்லைகளால்ஆகாயம் சுருங்கிப் போகிறது.நமது சந்தேகங்களால்அடிவானம் மறைந்து போகிறது.நமது தடுமாற்றங்களால்திசை விளிம்பு குறுகிப் போகிறது. வெளிப்படுத்தாத வார்த்தைகள்மெளனச் சுவர்களாக உயருகின்றன.மாயக் கோட்டிற்குள்அவிழாத புதிர்களாக …
மருத்துவர் பக்கம் – 23: உடல் எடை குறைக்கும் மருந்துகள், நன்மைகளும் எச்சரிக்கையும்.
உடல் பருமனாக இருப்பது என்பது அழகியல் ரீதியாகவும், அதனுடன் ஆரோக்கிய ரீதியாகவும் பல சிக்கல்களைக் கொண்டு வருகிறது. இதனால் மனிதர்கள் உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை சுமார் 25 கோடி பேர் தேவைக்கும் …
இருசியமுக மலை உச்சியில் இருந்த குகைக்குள் இருந்த சுக்ரீவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. உளவறியச் சென்ற அனுமன் இன்னும் வரவில்லை. ஏற்கனவே ஒற்றர்கள் சொல்லியிருந்த செய்தி அவன் மனதை அரித்துக்கொண்டிருந்தது. இரு மானிடர்கள் பெரும் வில்லுடன் இருசியமுக மலையைத் தேடி வந்துகொண்டிருந்த செய்திதான் …
வெள்ளிக்கிழமை காலை. அர்ஜுன் சரியாகத் தூங்கவில்லை. கண்கள் சிவந்திருந்தன. முகச்சவரம் செய்யும்போதே கை லேசாக நடுங்கியது. நேற்றிரவு சுசிக்குத் தெரியாமல் அந்த எண்ணிற்குப் பதில் அளிக்க முயன்றான். ஏதும் போகவில்லை. மீனாவின் பழைய எண்ணிற்கே செய்தி அனுப்பினான்: “பிரிகேட் ரோட், டீ …
“அம்மா!” பார்கவியின் உள்ளாழம் வரை சென்ற அந்த அழைப்பு அவள் உயிர்வரைத் தொட்டு உலுக்கியது. தன்னைச் சில நொடிகளில் சமன் செய்து கொண்டாள். “சொல்லுப்பா.” “ம்மா!” மஞ்சளில் சிவப்புப் புள்ளிகளிட்ட சுங்குடிப் புடைவை. கோடாலி முடிச்சு. விபூதிக் கீற்று. அதற்கு மேலே …
வெய்யில் வாட்டுகிறதாம் நல்லாச்சியைவருடந்தோறும் அதிகரிப்பதாய்ப் புலம்புகிறாள்மழையும் குளிரும் வெயிலும்அதிகரித்துகொண்டே போவதாய்ச்சொல்லிஅந்தந்த தெய்வங்களை ‘அர்ச்சிக்கிறாள்’ஒருவரையொருவர் நோக்கிக்கொள்கின்றன அவைபாவம்போல்குளிருக்கென்றோர் தெய்வம் இல்லாமல்தவித்துத் திரிகின்றன அர்ச்சனைகள் முற்றத்தைப்போர்த்திய தென்னங்கிடுகுசாளரங்களைத் திரையிட்ட வெட்டிவேர்குலைகுலையாய் நுங்கும் இளநீரும்கூடவே கொஞ்சம் மோரும் பானகமும்ஆயுதங்களுடன் தயாராகத்தானிருக்கிறாள்குட்டிச் சிப்பாய் பேத்தியுடன் அவ்வூரைக் கடக்குமட்டும்மேகத்தில் …