அடுத்தவரின் உழைப்பை அபகரித்தல் முரணே!தடுத்ததனை தவிர்ப்பதே தருமத்தின் முறையே!எடுக்கின்ற காரியத்தில் எதிர்வரும் தடைகள்முடுக்கிவிடும் திறனை முயற்சிக்கு முதற்கல்! உழைக்கின்ற சுயமும் உள்ளத்து உறுதியும்விழைகின்ற யாவிலும் வெற்றிக்கு வழியே!உடன் உழைப்போர்க்கும் வழியை விடு!உன் உழைப்பால் சிகரம் தொடு!
இதழ் – 9
தேவர்களின் தேசம் நோக்கி: தேவப்பிரயாகையிலிருந்து பத்ரிநாத் வரை ரிஷிகேஷிலிருந்து பேருந்து அதிகாலையில் புறப்பட்டது. மலைகள் இன்னும் தூக்கத்திலிருந்து விழிக்கவில்லை. கங்கை மட்டும் நித்தமும் போல் விழிப்பாக ஓடிக்கொண்டிருந்தது. “தேவப்பிரயாகை வரை இரண்டு மணி நேரம்தான்” என்று தேவநாதன் சொன்னது கேட்டு, முதியோர் …
உலகத்து வெயிலெல்லாம் உம்மேலதான்’செல்லமாகக் கடிகிறாள் நல்லாச்சிநட்புகளுடன் விளையாடும் பேத்தியைஉச்சிப்பொழுதின் வெப்பம்வாட்டுமென்ற அக்கறையில்கலந்தாலோசித்த பட்டாளம்திருவிழா விளையாட்டைத் தேர்கிறதுஅறங்காவலராக்குகிறது நல்லாச்சியை செங்கற்களே மூர்த்தங்களாய்அகப்பட்ட பூக்களே தோரணங்களாய்வடிவெடுக்கிறது சப்பரம்பூஜைப்பொருட்கள் ஒருவன் உபயம்நைவேத்யம் ஒருத்தி கொணர்கிறாள்காற்றில் ஒருவன் கொட்டுமுழக்கதாத்தாவின் கைத்தடி நாகஸ்வரமாகிறதுஏதும் கொணராத ஒருத்தியைவிலக்குகிறது கூட்டம் பதைக்கிறாள் …
“ஏஞ்சலினா பாடிக்கொண்டிருந்தாள்… “மேய்ப்பன் அவனே, ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில். மன்னவன் அவனே, மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்”. நானும், என் தம்பியும், மனைவியும் கேட்டுக்கொண்டிருந்தோம்.. அப்போது எங்களுக்குத் தமிழ் தெரியாது.. போனது ஜான் பெர்ணான்டஸின் வீடு… ஏஞ்சலினா குரல் இனிமையில் …
காக்கம்மா கிளியம்மா ஒரு புளியமரத்தில் காக்கம்மாவும் கிளியம்மாவும் இருந்தன. காக்கம்மாவுடையது கூடு. கிளியம்மாவுடையது வீடு. ஒருநாள் இராத்திரி பலத்தச் சூறாவளி காற்றும் மழையுமாக இருந்தது. அதில் அந்தக் காக்கம்மாவின் கூடு கொஞ்சம் பறந்துபோனது. கிளியம்மாவுடையது வீடு இல்லையா… அதற்கு எதுவும் ஆகவில்லை. …
சின்னது, நடுத்தர அளவு, பெரியது எனக் கலந்துகட்டி இருக்கும் உருளைக்கிழங்கு மூட்டையை டபக்கெனத் திறந்து உருட்டி விட்டாற்போலச் சின்னப் பையன்கள், பெண்கள், கொஞ்சம் வளர்ந்தவர்கள், கொஞ்சம் உயரமானவர்கள் என மாணவ மாணவிகள் பள்ளிக்கூடத்தில் பரவி இருந்தார்கள். என்ன… நோ யூனிஃபார்ம். ஏனெனில் …
இப்போது பறவைகளிடத்தில் பரவி வரும் H5N1 வைரஸ் நமது பூமியில் பிறந்து கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேல் ஆகிவிட்டது. 1996-1997-களில் தென் சீனாவில் உள்ள வாத்துப் பண்ணைகளில் ஆரம்பித்து, அங்கிருந்து வலசை செல்லும் வனாந்திரப் பறவைகளில் தொற்றி, ஐரோப்பா – அமெரிக்க …
சாளரத்தைத் திறந்தவள்சன்னமாய்ச் சிரித்தாள்காத்திருப்பின் ரகசியம்காற்றில் கலந்த கணம் உள்ளக் கிளர்ச்சி எல்லாம்ஊர்வலமாய்ப் போகுதுவெள்ளம் திரண்டது போல்வெகுளித்தனம் மீறுது கள்ளத்தனம் எல்லாம்காணாமல் போனதுகரை கடந்த அன்பு இங்கேகரம் கோர்க்கப் பார்க்குது ஒற்றை மலர் தனியேஒய்யாரமாய் நின்றதுஎட்டிப் பார்த்த அவளைஏறெடுத்துப் பார்த்தது சாய்வது போல் …
பனிச்சறுக்கு விளையாட ஆசை பேத்திக்குநயந்தும் பயந்தும்பெற்றோர்க்குச்சொன்னவையெல்லாம்கிணற்றில் சறுக்கிய கல்லாய்க் கிடக்கவழக்கம்போல் சரணடைகிறாள் நல்லாச்சியிடம் இமயமலை பற்றி விளக்கினால்‘ஆராம்ளி மலய விட ஒசரமா?’ என்கிறாள்மணல்மணலாய்ப் பனித்துகள் காணலாமென்றால்‘ஆத்தங்கரையில் இல்லாத மணலா?’ என்கிறாள்ஊரே குளிர்ந்திருக்குமென ஆசை காட்டினால்‘தடுமம் பிடிச்சுக்கிடும்ல’ என்கிறாள்ஊரே உலகமென வாழ்ந்த நல்லாச்சி …
தங்கப் பசு ஒரு ஊரில் ரங்கண்ணா என்று ஒருவன் இருந்தான். அவன் மிகவும் ஏழை. அங்கு இங்கு வேலை பார்த்துச் சேர்த்த பணத்தில் பிழைப்பு நடத்தி வந்தான். அவனுக்கொரு மகள் இருந்தாள். அவள் அழகென்றால் அழகு அப்படியொரு அழகு. மகள் மீது …