உள்ளுக்குள் ஓர் வலி நெடு நெடுவென வளர்ந்தபடி இருக்க வெகு அருகாமையில் சந்தித்த விழிகள் கூர்மையுடன் உயிர் கிழிக்கிறது
கவிதை
தங்கம் ரப்பர் சங்கு எனவிதவிதமாய் அணிந்த வளையல்கள்அலுத்துப்போய் விட்டனவாம் பேத்திக்குபுதிதாய் ஆசை துளிர்விட்டிருக்கிறதுகண்ணாடி வளையல்கள் மீது கலகலவெனச்சிரிக்கும் அவற்றின் மகிழ்ச்சிஅணிந்தோரையும் அடுத்தோரையும்தொற்றிக்கொள்வதாய்ச்சொல்லும்பேத்தியின் குதூகலம்நல்லாச்சியையும் தொற்றிக்கொள்கிறதுஆடைக்கேற்ற வண்ணங்களில்பேத்தியின் பூங்கரங்களில்அழகழகாய் அடுக்கி அழகு பார்க்கிறாள்‘எந்தங்கத்துக்கு எல்லாக்கலரும் எடுப்பாத்தான் இருக்கும்’வளையல்களைத்தடவி முத்திக்கொள்கிறாள்அவ்வீட்டினுள் நிறைந்தேயிருக்கிறது வளையோசைமூடுபனியென கள்ளன் …
தொட்டுப்பொட்டு வைத்துக்கொள்ளலாம்போல்கரேலென்றிருக்கும் வானத்தில்ஆட்டுக்குட்டிகளாய்மேய்ந்து கொண்டிருக்கின்றன மேகங்களெல்லாம் தலைப்பிரசவம்போல்எப்போது வேண்டுமானாலும் நிகழக்கூடும்மழையின் வீச்சிலிருந்துநெல்லைக்காப்பாற்றும் முகமாய்சாக்குப்பையில்மரக்காலால் அள்ளி நிறைக்கிறாள் நல்லாச்சிஉழக்கு போல் ஒட்டிக்கொண்டு இழையும் பேத்திகேட்கிறாள்மழை எப்போது பெய்யுமென ‘மழை பெய்யறதும் மக்க பொறக்கறதும்மகேசன் கணக்குல்லா’பதிலாகவும் புலம்பலாகவும்ஒரே நேரத்தில் சொன்னபடிமெலிதான இடிச்சத்தத்தைச் செவிமடுக்கும் ஆச்சியைதாக்குகிறது …
கண்கள் மற்றவர்கள் போலில்லைகள் வடிக்கும் கண்களைபெற்றிருக்கிறாள்கடந்து போவதற்கும்கரைந்து போவதற்கும்அவை வழிகாட்டிகள்** அவரின்கண்களைக் கசக்கி மூடிவிட சொன்னார்கள்என் விரல்களுக்கும் உள்ளங்கைக்கும் கசக்கும் வித்தை தெரியவில்லைவெறித்த விழிகளில்கடைசியாக எதைப் பார்த்திருப்பார் என எதிர் திசையைப் பார்த்தேன்அவரே நின்றுக் கொண்டிருந்தார்** எந்தக் கண்களை தானம் செய்வதுஏற்கனவே …
நீரோட்ட நெல்வயலில் நித்தம் சிறுதிருட்டாம்ஊரோட்ட நேரமில்லை உள்பகையே – ஏரோட்டும்தம்பியின் கைகள் தளராது வேலியிடக்கம்பிகளின் காட்டில் கதிர் காலைக் கதிரவன் கண்ணால் கவிபாடிமாலை மயங்குவான் மாவெளியில் – சோலைதனில்செம்பந் திறங்கிடச் சேர்ந்தது வேலிமுகம்கம்பிகளின் காட்டில் கதிர் மாலா மாதவன் காலையிலே எழுந்தவுடன் …
நல்லாச்சியின் கொடி உயரப்பறக்க வேண்டும் வானளாவிப்பறக்கும் கொடியைப் பற்றிக்கொண்டு விண்வெளிக்கும் செல்ல வேண்டும்
திண்ணையில் பேச்சென்றுத் தேர்போல் அசைந்தாடிவண்ணமாய் வந்தமர நேரமில்லை – கண்பார்த்துவாதி பிரதிவாதி வம்பு வழக்கெல்லாம்காதிலவன் சொன்ன கதை பதில் சொல்லத் தெரியாது விழித்திட்டவேதியனைச் சிறையிட்டத் தன்மகனை வேண்டிட்டஆதிசிவன் மண்டியிட பிரணவத்தின் விரிவுரையேகாதிலவன் சொன்ன கதை! ஏதிலார் குற்றம்போல் தன்குற்றம் காணாதுவீதியிலே சென்றவனை …
1 – வேதம் படித்தவர்க்கும் வித்தை அறிந்தவர்க்கும்நாதம் இசைப்போர்க்கும் நல்கவில்லை – பேதமில்லாபாதங்கள் பட்டநிலம் பார்த்தது மோட்சமதுமாதவன் தானுண்ட மண் 2 – சிலிக்கன் வழிவந்த சில்லுப் புரட்சிகலிகாலம் ஆளும் கம்ப்யூட்டர் ஆதியெங்கே?பாதாதி கேசத்தில் அண்டம் அளந்திட்டமாதவன் தானுண்ட மண்! 3 …
குப்பைகளைத் தரம்பிரிக்க கற்றுக்கொடுத்திருக்கிறார்களாம் பள்ளியில் மக்கும் குப்பை மக்காக் குப்பை என உதட்டுக்குள்ளேயே அடிக்கடி சொல்லிப்பார்த்துக்கொள்கிறாள் பேத்தி