மின்சாரம் வழிந்தோடும்கம்பி பட்டவுடன்விசிறப்படும் யாக்கை போலவே மனமிருந்தது..நம்பிக்கையின் பெயர்வைத்து துரோகம்இயற்றிய பொழுது.. பனிச்சில்லுகள் மேல் நிற்கையில்வழிந்தோடும் குருதியின்ரணத்தை பரிசளித்ததுஉள்ளொன்று வைத்து வெளிப்படும்கானல் சிரிப்பு.. எப்போதும் போல் தீயில்பொசுக்கி விட்டு அறியாதது போல்அக்கறை களிம்பு தடவியதில்இன்னும் பற்றி எரிகிறதுஉணர்வுகள்.. ப்ரூட்டசாகவே இருப்பதையறிந்தும்தாயுமானவனாகவே வருகிறேன்குத்தப்பட்டு …
கவிதை
காலத் தூரிகைத்துடைத்துச் சென்றபக்கங்கள் யாவிலும்அழுத்திப்பிடித்த கறைகள்புரட்டி எடுக்கும்நினைவின் அசைவில்வெளிப் பரவும் வண்ணத்துகள்கள்அலைவரிசையை நிறைத்துவிட்டஅலப்பறையில்படபடக்கும்பக்கங்கள்அத்துணையிலும்புதுப்புது கலவைகளால்தோய்த்து வைக்குமொருமாயம் நிகழும்ஒன்றுகூடிஒன்றுகுறைந்துகலந்து திரிந்துவர்ணம் மாறியவரைபடமென வாழ்க்கைநின்றிருக்கநிதானிக்கநகர்ந்து செல்லதேவையாய் இருக்கிறது..அன்னியப்படுதல் எனும் விதி.
உடலெங்கும் பெருகியோடும்வியர்வை நதியின்ஓயாத் தீண்டலைஒதுக்கி விடுமெனதேடித்தேடி நில்லா இடம் விட்டுநிழலென்ற அமுதத்தை நேசமென விரியவைக்கும்கிளை பரப்பிக் கிடந்தமரத்தின் கீழேபாதையின் ஓவியத்தில் பகலிரவாய் உழைப்பைக் கூட்டிதன்னையே கரைத்துவிட்டயாசகனைப் போலவேபலனைத் தேடாத பக்தனெனநின்றுவிட்ட நிலையில்ஆடாமல் அசையாமல்வேடிக்கை பார்க்கத் துவங்கியதுகிளைக் கண்ணிலிருந்து மரம்.நின்றுவிட்ட இயக்கத்தின்நீள் கதையைச் …
தட்டப்பட்டு திறக்கப்படாதஉங்கள் கதவின் ஆழ்ந்த மௌனங்களின்பின் தொடரும்“போயிருப்பான்” என்ற மெல்லிய குரல்.புருவம் உயர்த்தி ஆச்சரியப்பட்டுபின்னால் உதட்டை பிதுக்கி நகையாடும்உங்கள் எகத்தாளம்.நேர்காணலின் கதவை மூடும்கடைசி நொடியில் கேட்கும்என் சுயவிவரம் குப்பையில் விழும் சத்தம்.பாதையின் மையத்திலிருந்து விளிம்புவரைநானே ஒதுங்கியதாய் ஒதுக்கப்படுகிறேன்.சாலை நடுவே கிடந்து சிதைகிறதுஎன் …
வானம் ஒப்புக் கொள்வதற்கு முன்னரேஅவளது இரவு தொடங்கி விடுகிறது மங்கிய ஒளியில்பழைய புடவைகளை மடிப்பது போலபொழுதுகளை மடிமேல் விரித்து நீவுகிறாள்நைந்து போன அதன் இழைகளில்தூக்கியெறிய முடியாத காலம் முடிவற்ற எண்ணங்களால் நிரம்பி வழியும்அவளது மனதை அறிந்த தூக்கம்ஒருபோதும் உள்ளே நுழைவதில்லைஆனால் அழைக்கப்படாமல்உரிமையுடன் …
வண்ண வண்ணமாய்பறக்கின்றன ஹீலியம் பலூன்கள்உருண்டையாய்வாத்துக்களைப் போலவானூர்தி வடிவத்திலும்இவர்கள் வீடு திரும்பும்போதுஎன்ன வாங்கிப் போவார்கள்குழந்தைகளுக்குத்தின்பண்டங்கள்பொம்மைகள்இல்லத்தரசிகளுக்குகாய்கறிகள்மளிகைப் பொருட்கள்வாழ்க்கைப் பயணத்திற்குத்தேவையானதை பெற்றுத்தருமாஇந்த வாயு தேவனின் குழந்தைகள்கார்கள் கண்ணாடிகளைஏற்றிக்கொண்டு விரைகின்றன.நடுத்தர வர்க்கம் பார்த்தும்பார்க்காதது போல கடக்கிறது.குழந்தைகளே இல்லாத வீட்டில்இதெல்லாம் எதுக்குஎன்ற மனைவியின் கேள்வியைஎப்படி எதிர்கொள்வதுஎன்ற எண்ணத்தைப் புறந்தள்ளிவிற்பவரின் …
தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா அவனைத் தேற்றுங்கள். சோகம் ஆக்கிரமித்த உடலோடுஅமைதியாக நடக்கிறான்;அவனுக்கு என்னவானதென்று கேளுங்கள். ஆயிரம் முறை உடைந்த மனதைத்திரும்பத் திரும்ப ஒட்டவைத்து,பொறுமை தீர்ந்து சலித்து வீசியெறிந்தவன்;அப்படி என்னதான் நடந்ததென்று தெரிந்துகொள்ளுங்கள். வலிந்து ஒரு சிறு புன்னகையைமுகத்தில் தொங்கவிட்டுக்கொண்டு,வெளியே மட்டும் சிரிப்பது …
காலம் உறங்கும் இருட்டு அறையில்நிழல்கள் நிஜங்களை வேட்டையாடுகின்றன.நீலக் கண்ணீர்த்துளிகளாய்சூரியன் உருகி வழியகடந்த பாதைகளின் காலடித்தடங்கள்கள்ளிச்செடிகளாய் முளைத்து நிற்கின்றன தொண்டைக்குள் அடைபட்டுக் கிடந்த மௌனம்ஒரு கருப்புப் பறவையாய்ஆன்மாவைக் கொத்திக்கொண்டிருக்கஆழ்மனதின் கடலில் மூழ்கிவலிகளைச் சேகரிக்கிறேன் முத்துக்களென வானத்தை நோக்கியஒரு புதிய வாசல்தான் வலிகாலம் எறிந்து …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “வெயிலில் விளைந்திடும் வான்” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: உழவர் …
சீதை கடத்தியதால் சீராகத் தன்னுள்ளம்பேதையாய் மாறிப் புலம்பிடுவான் – வாதையில்மீனிடம் சோகமதை மென்மேலும் பேசிடுவான்மானிடம் பெற்றபேறு மா மாமனிதன் என்பதற்கு மாற்றுக் குறையாமல்ராமன் இருந்தானே ரம்யமாய் – பூமனம்கொண்டே அவனியைக் கொற்றக் குடையாலேதொண்டென ஆண்டனன் தான் தானவன் ஆயினும் தங்கமனம் கொண்டுதான்வானவர் …