Home Uncategorized“பண்புடன்” – தொடருக்கான விமர்சனப்போட்டி

“பண்புடன்” – தொடருக்கான விமர்சனப்போட்டி

by admin
0 comments

“பண்புடன்” மின்னிதழில் எழுத்தாளர் விஸ்வா.தி எழுதி தற்போது வெளியாகிக்கொண்டிருக்கும் “வரலாற்றில் பொருளாதாரம்தொடருக்கான விமர்சனப்போட்டி அறிவிக்கப்படுகிறது.

போட்டி விதிமுறைகள்
​விமர்சனம் எழுத விரும்புவோர் இத்தொடரின் முதல் முப்பது அத்தியாயங்களை முழுமையாகப் படித்து, தொடரைப்பற்றிய தங்களின் விரிவான பார்வையைத் தொகுத்து வழங்க வேண்டும். கட்டுரையின் நீளம் 750 வார்த்தைகளுக்கு மிகாமல் சுருக்கமாகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டும்.

​இந்தப் போட்டியில் பங்கேற்கும் ஒருவர் ஒரு விமர்சனத்தை மட்டுமே அனுப்ப அனுமதிக்கப்படுவார். பல பதிவுகள் அனுப்பப்பட்டால் அவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. போட்டியில் வெற்றியாளரைத் தேர்ந்தெடுப்பதில் நடுவர்களின் முடிவே இறுதியானது மற்றும் அதுவே உறுதியானது ஆகும்.

நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த விமர்சனத்திற்கு ரூ. 500 மதிப்புள்ள புத்தகம் அல்லது அமேசான் கிஃப்ட் வவுச்சர் பரிசாக வழங்கப்படும்.

​தங்களின் ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@panbudan.com

​கட்டுரைகளைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 30 ஜூன் 2026.

Author

Leave a Comment