கருமை சூழ் நள்ளிரவில் மாமழையின் மண்வாசம் வரஅறையின் சிறு அகல்விளக்கும் சுழற்காற்றினில் அல்லாட…காரிருள் சோக நிழல் போர்த்திய காதலியின் நெஞ்சமதுநூலறுந்த பட்டம் போல் வேதனையில்துடிதுடிக்க… கண் மூட மறுக்கும் நொடியெல்லாம் காதலனின் நினைவு வாட்டவிண்ணெட்டும் காதலது உள்ளுக்குள் வேதனையாய் வலிகள் தர…தவிக்க …
நளினி சுந்தரராஜன்
அறியாமை அகழியுள் அறிவினை சிதைத்துவழிகாட்டும் நல்லற நெறிகளை மறுத்துபேராசைகள் பல கொண்டு பொய்க் கடலில் வீழ்ந்துவஞ்சம் பொறாமைத் தீ மனதினில் வைத்து… நிறம் இனம் மத மொழி பேதத்தினால் பிரிந்துதினம் போர்க்கோலம் பல பூண்டு புதுப்பகை வளர்த்துமாந்தர்தம் நல்லுறவை சடுதியில் முறித்துநேர்மையின்றி …
ஆசை மிகுதியால் அதிகம் தின்னாலேகுறையும் வாழ்நாள் என்பது உறுதியாமே!நாவின் ருசிக்கு அடிமை ஆனாலேஉடல் நலம் கெட்டுச் சீரழிந்திடுமே! கீரையும் காயும் கனிகளும் உண்பதேகாயம் காக்கும் முறையாகும்!அகாலத்தில் கண்டதையும் புசித்து வந்தாலேதீராப் பிணிகள் வருவது நிச்சயமாகும்! உண்டது செரிக்க உதவிடவென்றுநடையும் உடற்பயிற்சியும் நன்று!நஞ்சான …
சுழலும் பந்து மையமான ஆட்டம்அகிலத்து இரசிகர்களை ஒன்றிணைக்கும் திட்டம்!தேச எல்லைகள் கடந்து நிற்கும்விளையாட்டுப் பற்று நாடியில் துடிக்கும்! வியூகங்கள் வகுக்கும் வீரர் திறமைசடுதியில் முறியடிக்கும் எதிரியின் திண்மை!இரும்புமார்பில் பந்தைத் தாங்கும் வலிமைதலையால் இலக்கைத் தாக்கும் கூர்மை! சிறுத்தை எனப் பாய்ந்தோடும் வேகம்வில் …
இறைவன்மலரின் நறுமணம் பிரித்து எடுத்தான்மலைநேர் மரத்தின் மாண்பினைச் சேர்த்தான்புலரிப் பனியின் மென்மை குழைத்தான்புணரியினுள்ளிருந்த அமைதியினை அகழ்ந்தான்அந்திப் பொழுதின் அழகை வார்த்தான்ஆயிரம் விண்மீன் ஆன்மாவினை வடித்தான்சிலிர்க்கும் ஓடையின் நகையினை இட்டான்சிறகடிக்கும் புள்ளின் நளினம் கோர்த்தான்இத்தனை எழிலினையும் ஒன்றாய்ப் பிணைத்துஇணையிலாக் கலையினை இறைவன் முடித்தான்;முழுமை …
ஆங்கில மூலக்கவிஞர்: ஃபிலிப் லெவின் தமிழாக்கம்: நளினி சுந்தரராஜன் ஃபிலிப் லெவின் (1928-2015) மிகவும் புகழ்பெற்ற அமெரிக்கக் கவிஞர்களில் ஒருவராவார். பதின்ம வயதில் மிச்சகன் மாகாண கார் தொழிற்சாலைகளில் பணி புரிந்தவர். Assembly Line எனப்படும் உழைப்பாளர்கள் உடலையும், மனதையும் சோர்வடையச் …
கால் இடறிய நொடியில்குனிந்து பார்த்த அற்புதம்கண்கள் தான் நம்பவில்லை முந்தைய இரவு பெய்தவிண்மீன் மழைச் சாரலில்முளைத்தனவோ தெரியவில்லை இலையில்லா காம்புகளில்வழியெங்கும் நட்சத்திரப் பூக்கள்அழகினை விவரிக்க வார்த்தையில்லை எப்போதும் எதற்கும் நேரமின்றிநமக்காய் அதிசயங்கள் காலடியில்பூத்திருப்பதைக் காணாது கடக்கின்றோம் நின்று இரசித்து மகிழ்ந்திடஇயற்கை இறைஞ்சுகிறது …
அதிசயங்கள் – வால்ட் விட்மன்
தமிழாக்கம்: நளினி சுந்தரராஜன் அதிசயத்தைப் பற்றி யார் பெரிதாகப் பேசுகிறார்கள்?அதிசயங்களைத் தவிர வேறொன்றும் எனக்குத் தெரியாது, நான் மன்ஹாட்டன் வீதிகளில்நடந்தாலும் சரி, அல்லது வீடுகளின் கூரைகளுக்குமேல் விண் நோக்கிபார்வையைச் செலுத்தினாலும் சரி, அல்லது கடற்கரை ஓரத்தில்வெற்றுக் கால்களுடன்நீரின் விளிம்பில் நடந்தாலும் சரி, …
பள்ளி முடிந்துஅவசர அவசரமாகவீட்டிற்கு வந்துஅம்மா வருவதற்குள்பேனா மைத்துளிகள்கோலமிட்ட சீருடையைசோப்பு நீரில்முக்கித் துவைக்கையில்… பறந்து உடையும்வண்ண நீர்க்குமிழிகளில்அன்றைக்கு சூதுவாதின்றிநண்பர்களுடன் ஏமாற்றிகொட்டமடித்த எண்ணங்கள்மின்னி மறையும்; பிள்ளைப் பருவத்தில்ஏமாந்த கோபத்திற்குநீர்க்குமிழியின் ஆயுள்,நீடித்த நட்பினில்கடுமைகள் ஏதும்பலநாள் தொடராது. மனதினில் எதனையும்நிறுத்திக் கொள்ளாதிருக்கஒரு முறையேனும்மீண்டும் வாராதோ…கள்ளமில்லா பிள்ளைப்பருவஏப்ரல் 1.
ஆயிரமாயிரம் ஆண்டு காலம் மடியும் உயிர்கள்ஆழியின் ஆழ மடியில் சேரும்;மண்ணும் சேறும் நீரும் மூடமருளச் செய்யும் இருள் அங்கே சூழும்! பூமித் தாயின் வெப்பம் கனன்றுபுதைந்த உயிர்கள் கொள்கலனில் உருவம் மாறும்;அழுத்தம் தந்து மேலும் இயற்கை சமைக்கஅடியில் உருவாகும் அமுதம் கருப்புத் …
- 1
- 2