நடைப்பயிற்சி வேண்டுமாம் நல்லாச்சிக்குஅறிவுறுத்தி விட்டார் மருத்துவர்நீரிழிவின் ஆரம்பப் படிநிலைசற்றே தடதடக்கும் இதயம்பலவீனமாகிறேனென மணியடித்துவிட்ட எலும்புகள்இறுக ஆரம்பித்திருக்கும் மூட்டுகள்என உண்டியல் காசைப்போல் சேமித்திருக்கும்உடல் நலிவை ஆற்றும்மென் நடையும் மென் பயிற்சியும்தன்னால் ஆகாதென்கிறாள்டாக்டரின் படிப்பையே சந்தேகிக்கிறாள் சாக்குப்போக்குச் சொல்லியும்மெய்யே போல் பொய்க்கோபம் கொண்டும்எல்லாவற்றையும் ஒதுக்குகிறாள்வீட்டுக்குள் …
nallachi
தோல்பாவைக்கூத்து தெருக்கூத்துஇரண்டும் வந்திருக்கின்றன கிராமத்திற்குஊர்த்திருவிழாவை முன்னிட்டுதெய்வங்களும் கொஞ்சம்உற்சாகமடைந்து புத்துணர்வு கொள்கின்றன நல்லாச்சியும் பேத்தியும்தினம் ரசிக்கின்றனர் இரு கூத்துகளையும்அர்ச்சுனன் தபசையும், நள தமயந்தியையும்அரிச்சந்திரனையும் பாஞ்சாலி சபதத்தையும்நல்லாச்சி சொன்ன இன்னபிற கதைகளையும்கூத்துவடிவில் பார்த்த பேத்திராஜாக்களையும் ராணிகளையும்பளபளக்கும் அரசவாழ்வையும்நிஜமெனவே நம்பத்தொடங்குகிறாள்இரவிலும் பகலிலும் வெவ்வேறாய்ச் சுழல்வதுஅவர்கள் உலகம் …
வெய்யில் வாட்டுகிறதாம் நல்லாச்சியைவருடந்தோறும் அதிகரிப்பதாய்ப் புலம்புகிறாள்மழையும் குளிரும் வெயிலும்அதிகரித்துகொண்டே போவதாய்ச்சொல்லிஅந்தந்த தெய்வங்களை ‘அர்ச்சிக்கிறாள்’ஒருவரையொருவர் நோக்கிக்கொள்கின்றன அவைபாவம்போல்குளிருக்கென்றோர் தெய்வம் இல்லாமல்தவித்துத் திரிகின்றன அர்ச்சனைகள் முற்றத்தைப்போர்த்திய தென்னங்கிடுகுசாளரங்களைத் திரையிட்ட வெட்டிவேர்குலைகுலையாய் நுங்கும் இளநீரும்கூடவே கொஞ்சம் மோரும் பானகமும்ஆயுதங்களுடன் தயாராகத்தானிருக்கிறாள்குட்டிச் சிப்பாய் பேத்தியுடன் அவ்வூரைக் கடக்குமட்டும்மேகத்தில் …
இருளென்றால் பயப்படும் பேத்திக்குஇரவும் ஆகாதுமூன்றுகண்ணன் வசிப்பதாய்முற்றத்திற்கும் செல்ல மாட்டாள்இரவின் நிறத்தைப் பூசியதால்கருமையும் ஒவ்வாததாயிற்று ஒரு எள்ளுருண்டையைப்போல்திரண்டிருக்கும் கன்றுக்குட்டிக்கோஅவளென்றால் தனிப்பிரியம்ஒதுக்கினாலும் விரட்டினாலும்அகலாது பிரியஞ்சொரியும் பேத்தியைத் தெளிவிக்கஇட்டுச்சென்ற நல்லாச்சிபலவும் சொல்லிப் போதிக்கிறாள்பிஞ்சு மனதைப் பக்குவப்படுத்துகிறாள்இரவின் கருமைக்குள்தான் நட்சத்திரங்கள்தம் முகவரியைத் தேடிக்கொள்கின்றனவெளிச்சம் ஓர் பிம்பம் எனில்இருள் …
நல்லாச்சியிடம் கதையளக்கிறாள் பேத்திகண்டபடி பறக்கிறது கற்பனைக்குதிரைகதை சொல்வதும் அளப்பதும்ஆச்சிகளின் வழக்கம்இங்கு இன்றுஅது பேத்தியின் முறை நல்லாச்சியின் முதல் விமானப்பயணம்குதூகலம் பாதிகலவரம் பாதியென இருப்பவளிடம்தான்கண்ணகல உரைக்கிறாள் பேத்திமேகங்களின் மேல் ஓய்வெடுக்கும் நிலவைவன்னமிகு இந்திரலோகத்தைமேலோகம் சென்ற மூதாதையரைகண்குளிரக் காணலாமென்கிறாள்அறிவுக்கும் சந்தேகத்துக்குமிடையேஊசலாடுகிறது நல்லாச்சி உள்ளம் உயரப்பறந்த …
நாளும் நாலு நல்லதைநடைப்பயிற்சியின்போது அலசுவதுநல்லாச்சிக்கும் பேத்திக்கும் வழக்கம்தகவல்கள் பரிமாறுவதுபோலவேஅறிவுரைகளும் பரிமாறப்படும்பேதமின்றி ஏற்பாள் நல்லாச்சி வகுப்புத்தோழி குடும்பச்சண்டையால்அம்மாச்சி ஊருக்குப் போய்விட்டது முதல்நாளது தினம் தொலைக்காட்சிச்செய்தி வரைபிழிந்து அலசியபின்பேத்திக்கு வருகிறது சந்தேகமொன்றுமனிதர்கள் ஏன் மோதிக்கொள்கிறார்களென அகந்தையும் தன்முனைப்பும்பெற்றுப்போட்ட காரணங்கள்தாம்காரணங்களென்கிறாள் நல்லாச்சிதுளிக்குள் பிறந்தழியும்மாந்தர் அறியாரோதுளிக்குள் துளியே …
உலகத்து வெயிலெல்லாம் உம்மேலதான்’செல்லமாகக் கடிகிறாள் நல்லாச்சிநட்புகளுடன் விளையாடும் பேத்தியைஉச்சிப்பொழுதின் வெப்பம்வாட்டுமென்ற அக்கறையில்கலந்தாலோசித்த பட்டாளம்திருவிழா விளையாட்டைத் தேர்கிறதுஅறங்காவலராக்குகிறது நல்லாச்சியை செங்கற்களே மூர்த்தங்களாய்அகப்பட்ட பூக்களே தோரணங்களாய்வடிவெடுக்கிறது சப்பரம்பூஜைப்பொருட்கள் ஒருவன் உபயம்நைவேத்யம் ஒருத்தி கொணர்கிறாள்காற்றில் ஒருவன் கொட்டுமுழக்கதாத்தாவின் கைத்தடி நாகஸ்வரமாகிறதுஏதும் கொணராத ஒருத்தியைவிலக்குகிறது கூட்டம் பதைக்கிறாள் …
பனிச்சறுக்கு விளையாட ஆசை பேத்திக்குநயந்தும் பயந்தும்பெற்றோர்க்குச்சொன்னவையெல்லாம்கிணற்றில் சறுக்கிய கல்லாய்க் கிடக்கவழக்கம்போல் சரணடைகிறாள் நல்லாச்சியிடம் இமயமலை பற்றி விளக்கினால்‘ஆராம்ளி மலய விட ஒசரமா?’ என்கிறாள்மணல்மணலாய்ப் பனித்துகள் காணலாமென்றால்‘ஆத்தங்கரையில் இல்லாத மணலா?’ என்கிறாள்ஊரே குளிர்ந்திருக்குமென ஆசை காட்டினால்‘தடுமம் பிடிச்சுக்கிடும்ல’ என்கிறாள்ஊரே உலகமென வாழ்ந்த நல்லாச்சி …
சாப்பிடுவதற்குசெரை படுத்தாத பேத்திஏனோசில பொழுதுகளில் சுணங்குவதுண்டு‘காத்தாட சாப்பிடுதேன்’ என்றபடிகிணற்றடிக்குத் தட்டுடன் செல்பவள்துலக்கி மினுக்கி மீள்வாள்அம்மட்டில் திருப்தியுற்ற நல்லாச்சிகண்டுகொள்ளாதிருக்கிறாள் சின்னவளை ‘காத்தாட’ தனித்துண்ணும் பொழுதுகள்சந்தேகத்தை விதைக்கின்றனஅன்னையின் மனதில்செல்லப்பேத்தியைச் சொல்லுக்கு ஆளாக்கினால்ஆச்சி வீசுவாள் கண்டனக்கணையைஅகிலமே ஆச்சிக்கு அஞ்சும்போதுஅன்னை எம்மாத்திரம்எனினும்புகையை ஒளிக்க இயலுமோ!! கரையவிட்ட தோசைகள் …
விதைத்த சோளக்காடு அறுவடைக்கு நிற்கிறதுதளவாடங்களுடன் கிளம்புகிறது குடும்பம்கோணிகளோடு நல்லாச்சியும்சிறு பையுடன் பேத்தியும் தொடர்கின்றனர் கும்பிட்டு அறுத்தமுதல் கதிரே சாவியாய் இருக்கஅடுத்தடுத்த கதிர்களும் அப்படியேபோனால் போகிறதெனஒன்றிரண்டு சோளமுத்துகளைச் சுமந்துவெறுஞ்சிப்பியாய் பிளந்திருக்கின்றன மீதமுள்ளவைபறவைகள் பாதி நாம் மீதியெனபிரிக்கத்தேவையின்றிகாலிப்பாத்திரத்தை வைத்திருக்கிறாள் மண்மாதாமலைத்து நிற்கின்றனர் மற்றவர்பரிகசிக்கிறாள் பேத்தி …