சந்தைவிலை சரியாய் அமையவில்லையாம்கொட்டி வீசப்பட்டிருக்கின்றன காய்கனிகள்கூடைகூடையாய் சாலையோரத்தில்எதிர்ப்புமுகம் காட்டும்விதமாய்கண்டு பதைபதைக்கிறாள்விவசாயியும் தாயுமான நல்லாச்சிஊனுறக்கம் மறந்து அல்லும்பகலும் காத்ததெல்லாம்பயிர்வாடத் தான் வாடி நின்றதெலாம்அழிய விடுவதற்காகவோவெனக் குமுறுகிறாள் ஆதரவற்றோர்க்கு அளிஅதிக லாபமின்றி அள்ளிக்கொடுஅல்லதுவிளைந்ததின் மதிப்பை விவேகமாய்க்கூட்டுவிழுந்த விலைக்காய் நீயும் சோர்ந்தால்உழைத்த நிலத்தின் உதிரம் வற்றாதோபக்குவம் …
nallachi
சூறாவளி வரப்போவதாய்லேடியோப்பொட்டி அறிவித்த அன்றிருந்தேகலக்கமுற்றிருக்கிறாள் நல்லாச்சிஅறுவடைக்குத் தயாராயிருப்பவற்றிலிருந்துஅப்போதுதான் நட்டவை வரைக்கும்அத்தனையும் அபாயத்திலிருந்தாலும்நாணித் தலைசாய்ந்து நிற்கும்வாழைகள் மேல் அதிகக்கரிசனம் அவளுக்கு விளைந்த குலைகள் கனக்கநிறைமாத சூலிபோல் பொலிபவற்றைச்சூறாவளி சாய்க்குமோவென அஞ்சியவள்அஞ்சாறு பேர் துணையுடன் ஆளுயரக்கம்புகளால்ஓடியோடி முட்டுக்கொடுக்கிறாள்மூடிப்பொதிந்த வாழைக்குலைகளுக்கு.பாதுகாப்பின் அவசியத்தைப் பேத்திக்குஊடேஊடே பாடமும் எடுக்கிறாள் …
பாகப்பிரிவினை வேண்டிசண்டித்தனம் பண்ணுகிறார் சின்னத்தாத்தாஎல்லாம் பகிர்ந்து முடித்தபின்தோட்டத்திலிருக்கும் மாமரத்திற்காகவந்து நிற்கிறது பஞ்சாயத்து அடிபெருத்த மாமரம் மரப்பலகைக்காகுமெனஅடிபோட்டுக்கொண்டிருக்கிறார் சின்னத்தாத்தாகாய்ப்பு முடிந்த முதியமரம்கட்டில்செய்ய ஆகுமென்பது அவர் வாதம்வாடாத பசுமரம் வாசமுள்ள பால்மரம்கிளை கழித்தால் தளிர்க்கும்முதிர்ந்தாலென்ன மூலையில் வாழட்டுமெனபெரியவர் கண்கசிகிறார்இராத்தூக்கமென்பது இனி இராதென்பதுபோல்கண்மூடிக் குமைகிறார் பேத்தியின் …
பெரியதாத்தா வரும் தினங்களில்இறக்கை கட்டிக் குதூகலிப்பாள் பேத்திவயலில் விளைந்தவையென கொண்டுவரும் மூட்டைக்குள்தோட்டத்தில் உதிர்ந்தவையெனஒன்றிரண்டு மயிற்பீலிகளும் இருப்பதுவும்ஒரு காரணம் ஆடலும்பாடலும் கதைசொல்லலுமாய்தாத்தாவின் தோளில் நிழலாய்த்தொற்றிநல்லாச்சியை மறந்து திரியும் பேத்திக்குஒரேயொரு குறைதான்தன் களித்தோழனிடம்கைவிரலிடுக்கில் புகையும் கடைசி விரல்தான் அதுஆருரைத்தும் கேட்காத அகந்தையைஅறிவுறுத்தி உடைக்க எண்ணுகிறாள் …
சிக்கனமென்பது கிஞ்சித்துமில்லாமூத்தவனால் பெருங்கவலை நல்லாச்சிக்குகாசுபணமெல்லாம் தண்ணீர் பட்டபாடு அவனுக்குதண்ணீரையும் அவ்வாறே வாரியிறைப்பான்பிறரைப்பற்றிக் கவலை கொள்ளா அப்பெருஞ்செலவாளிநாளையைப் பற்றிச் சற்றும் எண்ணாதவனைஎண்ணியெண்ணி நாளும் உருகுகிறாள்‘எங்காலத்துக்குப் பொறவு என்ன கதியோ?!’ என மருகுகிறாள்பிள்ளையின்மேல் படியும் ஏளனப்பார்வைகளைசகியாத நல்லாச்சிபெரியப்பனுக்குப் பரிகிறாள் பேத்தி தாகங்கொண்ட வெய்யோன் அருந்தியதால்கோழிக்காலாய் …
செல்லப்பிராணி வளர்க்க ஆசை பேத்திக்குவீட்டிலுள்ளோரைப் பிய்த்துப்பிடுங்குகிறாள்சேக்காளிகள் வீடுகளிலெல்லாம் வளர்க்கின்றனராம்கதைகதையாய்ச் சொல்கின்றனராம் அருமைபெருமைகளைசொல்லிச்சொல்லி மாய்கிறாள்தனக்குமொன்று இல்லையெனில் மதிப்பில்லையென்கிறாள் நடைபழக நாயோ பூனையோசேர்ந்து மிழற்ற கிளியோ குருவிக்குஞ்சோசொப்புவாய் குவித்துக்கொஞ்சும் மீன்களோஎனக்கொரு செல்லம் வேண்டுமென்கிறாள்பராமரிப்பை அஞ்சுகின்றனர் வீட்டார்பிள்ளைப்பாசம் நிறைவேற்றச்சொல்கிறதுஇயலாமை பின்னடைய வைக்கிறது அன்றோர்தினம் கீச்வீச்சென விடிகிறது …
செல்லாச்சி வீட்டில் அமளியாயிருக்கிறதெனஓடுகின்றனர் நல்லாச்சியும் பேத்தியும்பிடிவாதம் கொண்ட பேரப்பிள்ளைகளால்இடிந்து அமர்ந்திருக்கிறது குடும்பம்அவர்கள் உதிர்த்ததகாத வார்த்தைகளும் தற்கொலை அச்சுறுத்தல்களும்இறைந்து கிடக்கின்றன வீடெங்கும்வாசலில் வழியும் ஒன்றிரண்டு வார்த்தைகளால்எட்டிப்பார்க்கும் வம்பர்களும் அன்பர்களும்இன்னும் குறுக வைக்கின்றனர் அக்குடும்பத்தைபெற்றோரும் அவர்களைப் பெற்றோரும்ஒருவர்மேல் ஒருவர் குற்றப்பத்திரிகை வாசிக்கின்றனர்செல்லம் கொடுத்துக் கெடுத்துவிட்டதாய்இருவர் …
நடைப்பயிற்சி வேண்டுமாம் நல்லாச்சிக்குஅறிவுறுத்தி விட்டார் மருத்துவர்நீரிழிவின் ஆரம்பப் படிநிலைசற்றே தடதடக்கும் இதயம்பலவீனமாகிறேனென மணியடித்துவிட்ட எலும்புகள்இறுக ஆரம்பித்திருக்கும் மூட்டுகள்என உண்டியல் காசைப்போல் சேமித்திருக்கும்உடல் நலிவை ஆற்றும்மென் நடையும் மென் பயிற்சியும்தன்னால் ஆகாதென்கிறாள்டாக்டரின் படிப்பையே சந்தேகிக்கிறாள் சாக்குப்போக்குச் சொல்லியும்மெய்யே போல் பொய்க்கோபம் கொண்டும்எல்லாவற்றையும் ஒதுக்குகிறாள்வீட்டுக்குள் …
தோல்பாவைக்கூத்து தெருக்கூத்துஇரண்டும் வந்திருக்கின்றன கிராமத்திற்குஊர்த்திருவிழாவை முன்னிட்டுதெய்வங்களும் கொஞ்சம்உற்சாகமடைந்து புத்துணர்வு கொள்கின்றன நல்லாச்சியும் பேத்தியும்தினம் ரசிக்கின்றனர் இரு கூத்துகளையும்அர்ச்சுனன் தபசையும், நள தமயந்தியையும்அரிச்சந்திரனையும் பாஞ்சாலி சபதத்தையும்நல்லாச்சி சொன்ன இன்னபிற கதைகளையும்கூத்துவடிவில் பார்த்த பேத்திராஜாக்களையும் ராணிகளையும்பளபளக்கும் அரசவாழ்வையும்நிஜமெனவே நம்பத்தொடங்குகிறாள்இரவிலும் பகலிலும் வெவ்வேறாய்ச் சுழல்வதுஅவர்கள் உலகம் …
வெய்யில் வாட்டுகிறதாம் நல்லாச்சியைவருடந்தோறும் அதிகரிப்பதாய்ப் புலம்புகிறாள்மழையும் குளிரும் வெயிலும்அதிகரித்துகொண்டே போவதாய்ச்சொல்லிஅந்தந்த தெய்வங்களை ‘அர்ச்சிக்கிறாள்’ஒருவரையொருவர் நோக்கிக்கொள்கின்றன அவைபாவம்போல்குளிருக்கென்றோர் தெய்வம் இல்லாமல்தவித்துத் திரிகின்றன அர்ச்சனைகள் முற்றத்தைப்போர்த்திய தென்னங்கிடுகுசாளரங்களைத் திரையிட்ட வெட்டிவேர்குலைகுலையாய் நுங்கும் இளநீரும்கூடவே கொஞ்சம் மோரும் பானகமும்ஆயுதங்களுடன் தயாராகத்தானிருக்கிறாள்குட்டிச் சிப்பாய் பேத்தியுடன் அவ்வூரைக் கடக்குமட்டும்மேகத்தில் …