ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே விடுமுறை தினத்த எதிர் நோக்குன காலம் மறஞ்சு எப்படா திங்கக்கிழம வரும்னு காக்க வச்ச விசே வுக்கு நன்றி. இதுவும் ஒரு விதமான மண்டே மோட்டிவேஷன் தான். ஆனா எழுதுற எங்களையும் கொஞ்சம் நெனச்சுப் பாக்கனுமா இல்லையா?
எவிக்ஷன் மட்டும் இல்லேன்னா நேத்து எபிசோட காப்பி பேஸ்ட் போட்டு அட்லித்தனம் பண்ணியிருக்கலாம். சரி, ஒரு பக்கத்துக்கு மேல கண்டென்ட் வருதான்னு பாக்கலாம்.
விசே வரும் நாட்களுக்குன்னு ஒரு பேட்டர்ன் இருக்கு. அதுலயும் சனி, ஞாயிறுன்னு தனித் தனியா ஒரே மாதிரியான பேட்டர்ன். அதுதான் இன்னைக்கும்.
நல்ல நாளா இருக்குறதால கொஞ்சம் ஃபன் பண்ண சொன்னாப்ல. மூன்று எலிகளா மாறி சபரி, விக்கல் & ப்ரவீன் மீதி இருக்குற பெருச்சாளிகளப் பத்தி சொன்னானுங்க. அப்பறம் வினோத்துக்கும் வாட்டருக்கும் இருக்குற ஃபன் மொமன்ட்ஸ் பத்தி பேசுனாப்ல. பின்ன பேசியே ஆகனுமான்ற மாதிரியே துஷார் கேப்ட்டன்ஸி பத்தி பேசி களச்சுப் போனாங்க.
சரி, யாரு உங்கள முதுகுல குத்துவான்னு சொல்லுங்கன்னு கேட்டதுக்கு வழக்கம் போல பாரு முதல் ஆளா வந்துச்சு.
அப்சரா எவிக்டட். சீரியல் காலத்துல ஆதிரைகிட்ட வழக்கம் போல காதல் கார்டு குடுத்து கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டுருப்பான் போல கமருதீன். அத ஆதிரை பொழுது போகாம அரோராகிட்ட சொல்ல, அந்த கிறுக்கு அவங்கிட்டயே போயி இத சொல்லிருச்சு. பய பிடிச்சுக்கிட்டான். அது எப்டி என் பெர்சனல பத்தி இவ பேசலாம்ன்னு ஆரம்பிச்சு. வழக்கம் போல கொஞ்சம் தப்பாவே பேசுனான். இவன ஏன் உள்ள இருக்குற யாருமே கேக்க மாட்டேங்குறாங்கன்னு புரியல. பொண்ணுங்க கூட கேக்குறதில்ல. இதெல்லாம் சோசியல் மீடியால பண்ணாலே கேஸுன்றானுங்க. ஆனா இவன் ஒரு டிவி மீடியால இப்பிடி பண்ணிட்டு இருக்கான். விசேக்கு இதப் பத்தியெல்லாம் ஒரு கவலையும் இல்ல போல. தண்ணியில ஏன் கப்பு போட்ட, சோத்துல ஏன் உப்பு போட்டன்னு கனிகிட்ட கர்ஜிக்கிறாப்ல. எபிசோட் முடியுற வரைக்கும் ஆதிரையும், கமருதீனும் தனித் தனியா இதப் பத்திதான் பேசிட்டு திரிஞ்சானுங்க. இதப் பாத்து எழுதுன நேரத்துக்கு கொஞ்ச நேரம் தூங்கி இருந்தா கனவாவது நல்லா வந்திருக்கும். சரி, நம்ம நல்ல மனசுக்கு இன்னைக்கு எபிசோட் நல்லாயிருக்கும். எல்லாருக்கும் ஹாப்பி தீபாவளி.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
34
previous post