வளையும் பருவத்திலே
வாழ்வியல் கற்க வேண்டும்
காலம் கடந்து விட்டால்
கற்பது கடினமாகிப் போகும்
பகைமை உணர்வுகள்
பார்த்திருந்து நமைப் பந்தாடும்
தக்க நேரத்திற்கு
காத்திருந்து நமைச் சூழும்
நன்செய் நிலத்தில்
நடுவிலே பதர் வந்திடும்
நாள் கடத்தாமல்
நீக்குதல் நிலத்திற்கு நல்லது
முதிர்ந்த முள்மரம்
வெட்டுவார்க்கு வேதனை ஆகும்
இளையதாய் இருக்கையில்
வேரோடு களைதல் வேண்டும்
கூடவே இருக்கும்
கொத்தித் தின்னக் காத்திருக்கும்
பார்த்து நீக்கிவிடில்
பாதகம் வாராமல் காக்கும்
உறவில் பகைகள்
உடனடியாய் நீக்கப்பட வேண்டும்
உள்ளச் சிதைவுகள்
உடனடியாய் காக்கப்பட வேண்டும்!
(குறள்: 879
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.)