Home தொடர்வரலாற்றில் பொருளாதாரம் – 27

வரலாற்றில் பொருளாதாரம் – 27

by Viswanaath Thyagaraajan
0 comments

போன அத்தியாயத்தை வாசித்த சிலர் அக்காலத்தில் இக்காலத்தை போல் பங்கு சந்தை போன்ற அமைப்பு இருந்திருக்கிறதா என கேட்டு இருக்கிறார்கள். இந்திய நிலபரப்பில் பங்கு சந்தை போன்ற அமைப்பு இருந்திருக்க கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஏனென்றால் தென்னிந்திய நிலபரப்போடு வணிகம் செய்த ரோமானிய நிலபரப்பில் இருந்திருக்கிறது.

பன்டைய ரோமானியத்தில் பங்கு வர்த்தகம் இருந்ததாக குறிப்புகள் இருக்கிறது. இங்கு தமிழகத்தில் வழிபாடு மையங்கள் சார்ந்து தான் பொருளாதார பரிவர்த்தனைகள் நடந்திருப்பதால் நிறுவனங்கள் போன்ற அமைப்பு இருந்திருக்க வாய்ப்புகள் இல்லை ஆனால் சங்கங்கள் இருந்திருக்கிறது.
சாணக்கியர் எழுதிய அர்த்தசாஸ்திராவில் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டிய வழிமுறைகளை எல்லாம் சொல்ல பட்டு இருப்பதை பார்த்தால் நிறுவனங்கள் போன்ற அமைப்பு இருந்திருக்கலாம் என்கிற முடிவுக்கு வரலாம்.

அர்த்தசாஸ்திரா எழுதபட்ட காலத்திற்கும் முந்தைய காலத்தில் எழுதபட்ட யக்ங்கலகிய ஸ்மிருதி மற்றும் நாரத ஸ்மிருதி போன்ற பண்டைய இந்திய சட்ட நூல்களில் சம்பூய சமுத்தானா என்கிற கூட்டு வணிக முறைக்கான வரைமுறை சட்டங்களை சொல்கிறது.

இதில் முக்கியமாக அப்படி தொடங்கிய தொழிலில் இருந்து கிடைக்கும் லாபத்தை முன்பே கையொப்பமிடபட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறது.

கூட்டு வணிகம் என்பது பெரிய அளவிலான தொழில் தொடங்க தான் ஏற்படுத்த பட்டு இருக்கும். அப்படி தொடங்கும் பொழுது முதலீடு கடன் ஆகியவை கட்டாயம் இருந்திருக்க வேண்டும்.

அதை எல்லாம் இனி வர போகும் அத்தியாயங்களில் சொல்கிறேன்.

பண்டைய இந்திய நிலபரப்பில் தொழில் சார்ந்த சங்கங்கள் இருந்ததாக சொன்னேன், கால போக்கில் அந்த சங்கங்கள் தான் சாதிகளாக மாறி இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏனென்றால் தமிழக நிலபரப்பில் இருக்கும் ஒவ்வொரு சாதியும் ஏதோ ஒரு தொழிலோடு சம்பந்தப்பட்டு இருக்கும். இதில் அதிக லாபம் தரும் தொழில்களை செய்த சாதிகள் எல்லாம் உயர்ந்த சாதிகளாகவும், குறைந்த லாபம் அல்லது லாபம் தராத தொழில்களை செய்த சாதிகள் எல்லாம் தாழ்ந்த சாதிகளாகவும் சமூக அடுப்பில் பதிந்து போனது.

இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். கடந்த அத்தியாயத்தில் தென்னிந்திய நிலபரப்பில் வணிக அமைப்புகள் நிலைகுலைந்ததினால் ஆங்கிலேயர்களிடம் பொருளாதார உதவி பெற தொடங்கிய அரசர்களால் என சொல்லி நிறுத்தி இருந்தேன். ஆம் அப்படி பெற தொடங்கிய அரசர்களால் என்ன மாதிரியான பொருளாதார பாதிப்புகள் இந்தியா அடைந்தது என்பதை பார்ப்பதற்கு முன் ஏன் அம்மாதிரியான நிலைக்கு அரசர்கள் போனார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

ஒவ்வொரு முறையும் சமயத்தின் அடிப்படையிலும் வணிகத்தின் அடிப்படையிலும் படையெடுப்பு, போர், முற்றுகை ஆகியவை நடக்கும் பொழுது அதிலிருந்து கிடைத்தவை லாபகாரமானதாக இல்லை. ஒவ்வொரு படையெடுப்புக்கும் நிகழ்ந்த செலவுகள் ஏராளம்.

உதாரணமாக சோழர்களுக்கும் ராஷ்டிரகூடர்களுக்கும் இடைய நடந்த தக்கோல போரில் சோழர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவு தந்த சிறு ராஜ்ஜியங்களுக்கும் மிக பெரிய நஷ்டம். அந்த பொருளாதார இழப்பில் இருந்து சோழர்கள் மீண்டு வர கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமானதாக குறிப்புகள் சொல்கிறது.

இந்த தக்கோல போர் நடக்க காரணங்கள் என இரண்டு நமக்கு கிடைக்கிறது. ஆரம்ப காலத்தில் ராஷ்டிரகூடர்கள் இந்து மதம் சார்ந்த சமயங்களை ஆதரித்தாலும் பின்னர் அவர்கள் சமண சமயத்தை ஆதரித்தார்கள். சோழர்களோ தீவிரமாக சைவ சமயத்தை ஆகரித்து கொண்டு இருந்தார்கள்.

சோழர்களுக்கும் ராஷ்டிரகூடர்களுக்கும் போர் நிகழ்ந்த தக்கோலத்தில் பழமையான சலநாதீஸ்வரர் கோயில் இருக்கிறது. இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் கட்டபட்ட கோயில். எட்டாம் நூற்றாண்டில் ராஷ்டிரகூட ராஜ்ஜியம் அமைக்க படுகிறது. சிலர் ராஷ்டிரகூட ராஜ்ஜியத்தின் சரித்திரம் அதற்கு முன்பிலிருந்தே ஆரம்பிக்கிறதென சொல்வார்கள்.

தக்கோலம் மற்றும் அதன் அருகில் இருக்கும் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் பழமையான சமண சமய தீர்த்தங்கரரின் சிலையும் சமண குறிப்புகளுக்கும் கிடைக்கிறது இருக்கிறது. மேலும் அரக்கோணத்தில் இருக்கும் உப்புகுளம் என்கிற ஊரில் பெருமாள் கோயில் பின் பகுதியில் பழமையான சமண சிலை ஒன்று இருக்கிறது. இதனை எல்லாம் பார்க்கும் பொழுது தக்கோல போர் நடந்த காலத்தில் அங்கு சமண சமயம் பரவலாக வழிபட்டு இருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

அக்காலத்தில் ஒரு இடத்தில் இரண்டு சமயங்கள் ஒரே நேரத்தில் கோலோச்சி கொண்டு இருந்தன என குறிப்புகள் இருந்தால் கண்டிப்பாக அது ஒரு வணிக மையமாக இருக்க வேண்டும்.

ஆம் தக்கோலம் அரக்கோணம் ஆகிய இடங்கள் அக்காலத்தில் முக்கியமான வணிக சாலைகள் கடந்து செல்லும் இடமாகவும் வணிக மையமாகவும் இருந்தது.

சோழர்களிடத்தில் தக்கோலம் இல்லாததால் வணிகத்தில் முழுமையான லாபம் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

ராஷ்டிரகூடர்களுக்கோ முக்கியமான துறைமுகங்கள் இல்லாததால் அவர்களது வணிகமும் முழுமையடையவில்லை.

இதே காலத்தில் தான் பல சமண கோயில்கள் சைவர்களால் கைபற்ற பட்டு அதனஒ இடித்து சைவ கோயில்களாக கட்டி சமண கோயிலின் சொத்துகளை சைவ கோயில் வசமாக்கினார்கள்.

இதில் இருந்து சமணத்திற்கும் சைவத்திற்கும் கடுமையான வணிக நோக்கத்திலான போட்டி இருந்ததை புரிந்து கொள்ளலாம். சைவ சமயத்தை கண் மூடித்தனமாக பரப்பி கொண்டு இருந்த கிருமி கண்ட சோழன் இடத்தில் இருந்து தப்பித்து சென்று ஹோய்சாலப் பேரரசில் அடைக்கலம் பெற்றார் ராமானுஜர்.

அப்பொழுது ஹோய்சால ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு இருந்தவர் பிட்டிதேவா. ஹோய்சால ராஜ்ஜியமும் அரச குடும்பத்தினரும் தீவிரமாக சமண சமயத்தை ஆதரித்து கொண்டு இருந்தார்கள்.

இந்த அடைக்கலம் புகுந்ததை நவீன காலத்தில் திரைப்படங்களில் சொல்படுவதை போல எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற வசனத்தை வைத்து புரிந்து கொள்ளலாம்.

ராமானுஜர் தலைமையில் பிட்டிதேவா சமண சமயத்தை துறந்து வைணவ சமயத்தை ஏற்று கொண்டு விஷ்ணுவர்தனா என புது பெயரை வைத்து கொண்டார்.

இதன் பிறகு தான் சோழர்களுக்கும் ஹோய்சாளர்களுக்குமான போர் தலக்காட்டில் நடக்கிறது. தலக்காடும் பண்டைய காலத்தில் முக்கியமான வணிக மையம் தான்.

(தொடரும்).

Author

You may also like

Leave a Comment