“தீபாவளி” சட்டென்று கடந்து போய் விட முடியாத அனுபவம்நமது பெரும்பான்மையான கொண்டாட்டங்கள் நினைவு சார்ந்தவை.பெரும்பான்மையான நினைவுகள் கொண்டாடத்தக்கவை. “தீபாவளி” நினைவெல்லாம் நிறைந்திருக்கும் தீபாவளி. எத்தனை, எத்தனை தீபாவளி. தீபாவளி என்பது அனுபவம்,இனிப்பான அனுபவம். தீபாவளி என்பது இனிய நிகழ்வுகளின் அனுபவம். அவை …
நன்னாளும் நன்முழுத்தமும் நன்கறிந்துபகை நாட்டார்க்குப் பறையறைந்துதூதன் சொல் கேட்டறிந்துசமாதானத்திற்கு வழியில்லை என்றுணர்ந்துஆநிரையும் முதியோரும் பிணியுடையோரும்அந்தணரும் குழவிகளும் பெண்டிரும்அரணுக்குள் பொத்திய பிறகு… குறித்ததொரு உதயப் பொழுதில்முரசறிவித்து படை நிறுத்திஅந்தி வரை சமரிட்டுஎதிர்ப்புறம் மடிந்த வீரர்கள்எரியூட்ட நேரங் கொடுத்துஇறுதியில் நிராயுதபாணியாய் சரணடைந்தோரைமரியாதையோடு சிறைப்பிடித்துஅறநெறியில் நிலம் …
136, என் மனதுக்கு இணக்கமான எண். என் பால்ய, பதின்ம வயது நினைவுகளால் நிரம்பிய வீட்டின் கதவு எண். வாசல் முதல் பின்புறம் வரை சுமார் நூறடிக்கு மேல் நீண்டிருக்கும் பழங்கால வீடு. வாசல் திண்ணையில் ஆரம்பித்து ஒவ்வொரு இடமும் தன்னுள் …
இப்போதைய வெளிநாட்டு வாழ்க்கையில் தீபாவளி என்பது விடுமுறை நாளாகக் கூட இல்லாமல் வேலை நாளாய்த்தான் கடந்து செல்கிறது. எனது சிறுவயதுத் தீபாவளிக் கொண்டாட்டம் இப்போது எங்கள் ஊரிலும் மாற்றம் கண்டிருந்தாலும் தீபாவளிக்கு ஊரில், அதுவும் சொந்தங்களுடன் இருப்பது மகிழ்வுதானே. அந்த மகிழ்வை …
இன்னும்கூட நன்றாக நினைவிருக்கிறது. அது பூப்போட்ட வெளிர் மஞ்சள் நிறச்சட்டை. அவன் அப்பொழுது ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். வீட்டிலிருந்த ஐவரில் மூவர் பெரிய மனிதர்களாகிவிட, நான்காவது அண்ணன் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். இவன்தான் கடைக்குட்டி. அனைவருக்கும் செல்லப்பிள்ளை என்றாலும் அப்பாவிற்கு …
மனதில் ஒளிந்திருக்கும் நரகாசுரன்களை அழிப்போமா?
விடிந்தால் தீபாவளி.. ஊரே உற்சாகத்துடன் பரபரவென்று இருக்கிறது. இரவு நெடு நேரம் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தாலும் எப்பொழுது விடியும், புதிய ஆடை உடுத்தி பட்டாசுகளை வெடிக்கலாம் என்று சிறார்களும், மாமனார் வீட்டு உபசரிப்பில் மயங்கியபடி இளம் மனைவியைச் சுற்றி வரும் புது மாப்பிள்ளைகளும், கண்கவர் ஆடைகளில் …
வெயில் ஆதிக்கத்தில் பல இல்லங்களில் உலை கொதிக்கும் கந்தக பூமி எங்கள் ஊர். தீபாவளி என்பது ஒருநாள் பண்டியாக இல்லாமல், ஒரு தொடர்ச்சியான கொண்டாட்டமாகக் கொண்டாடித் தீர்க்கும் சிவகாசியில் பிறந்தவள் நான். தீபாவளிக்கு முந்தையநாள் சந்தையெல்லாம் களைகட்டும். சாலையோரங்களில் மழைக் காளான்களாய் …
ஆடி, தீபாவளி பொங்கலுக்கு மட்டும்தான் கறி, நடுவுல எப்போதாவது குக்கு நோய் கண்ட கோழிக ஆரம்பத்துல சொணங்கலாத் தெரிஞ்சவுடனே, கீழத்தெரு கனி கிட்ட கொடுத்து கொதவளையத் திருகி வாங்கியாந்துருவா அம்மா, குப்பைமேட்டுத் தென்னைமரத்துக்குக் கீழ சணல் சாக்கு விரிச்சி வெடுக்கு வெடுக்குன்னு …
———————————— தேவையான பொருட்கள் 1. கடலைப் பருப்பு – ஒரு கப் 2. வெல்லம் – இரண்டு கப் 3. ஏலக்காய் தூள் 4. முந்திரி பருப்பு பத்து எண்ணிக்கை 5. நெய் கால் கப் செய்முறை வெறும் வாணலியில் கடலைப் …
நூறு நாட்கள் இருக்கும்போதே கவுண்ட்டவுன் ஆரம்பித்துவிடும். அதாவது தினசரி காலண்டரில் தீபாவளி தேதியில் ஜீரோ என்று எழுதுவோம். அதன் முன்நாள் ஒன்று, அதற்கும் முதல்நாள் இரண்டு… இப்படியே நடப்பு தேதி வரை எண்கள் இடுவோம். கிட்டத்தட்ட தொண்ணூறு, நூறு வரை எண்கள் …