சில நாட்களுக்கு முன்பு ஒரு காணொளி கண்டேன். போரினால் பாதிப்படைந்த இரண்டு பாலஸ்தீன சிறுவர்கள் தொலைவில் இருந்து தண்ணீரை ஒரு தள்ளுவண்டியில் தள்ளிக்கொண்டு வந்தார்கள். ஒருவன் முன்னே இழுக்க பின்னவன் பின்னாலிருந்து தள்ளிக்கொண்டே வந்தான். வழியெங்கும் தண்ணீர் சிந்தியபடி கண்களில் கண்ணீர் …
கட்டுரைப்போட்டி
இந்தத் தேர்தல்ல நான் யாருக்கு ஓட்டுப் போட்டேன்னு நீங்க என்னைக் கேட்டா பட்டுன்னு சொல்லிடுவேன். “போன தேர்தல்ல?” அப்டீன்னு கேட்டீங்கன்னா, அது வந்து வேற கட்சிக்குன்னு இழுப்பேன். இன்னும் சீரியஸா அதுக்கு முன்னாடி தேர்தல்ல ஓட்டை யாருக்கு போட்டே நீன்னு என்னையைக் …
உயிரின் எடையும், அதற்கான விலையும்!
துகளுக்கும் தூசுக்கும் அதற்குரிய எடை இருக்கும். எனில், உயிருக்கும் ஏதாவது எடை இருக்கும்தானே? ஒரு மாட்டுவாலில் ஒற்றை மயிர் பிடுங்கி, அதை நூறாய்த் தரித்து, அதில் ஒன்றை ஆயிரமாக்கி, அவற்றுள் ஒன்றை நூறாயிரம் ஆக்கிப் பார்த்தால் எது மிஞ்சுமோ, அவ்வெடைதான் உயிரின் …
மூன்றெழுத்து அதிசயம் :- என் அப்பா
என்னை இந்த உலகிற்கு அறிமுகம் செய்து, எனக்கு இந்த உலகத்தை முகவுரை செய்த என் தந்தையை, இந்த உலகிற்கு நான் எங்கனம் அறிமுகம் செய்வேன்..? “அப்பா” இந்த மூன்றெழுத்துச் சொல்லுக்குள் அடங்கியிருக்கும் என் பிரபஞ்சம் மிகப் பெரியது. வார்த்தைகளின் எல்லைக்கு அப்பாற்பட்ட …
திருக்குறளும் வணிக நிர்வாகமும்
குறள், முப்பால், பொதுமறை என்று பலவகையாலும் அறியப்படும் திருக்குறள் சற்றேறக்குறைய 2300 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. திருக்குறளைப் படிக்கும் போது பல குறள்கள் இக்காலத்து வணிக நிர்வாகத்துக்கும் பொருந்தும் என்று மனதில் தோன்றும். அவற்றில் இருபத்து நான்கு குறள்களைத் தேர்வு செய்து …
அது ஒரு பொற்காலம் – மங்கா நினைவுகள்
அந்தக் காலத்தில், இக்காலம் போல் ஆன்லைன் கிடையாது. ஆனால் ஆர்டர் செய்யாமலே, வேண்டிய பொருட்களை வீட்டு வாசலில் தள்ளுவண்டியிலோ சைக்கிளிலோ வாங்கலாம். காலை ஐந்து மணி முதல் கணகணவென பலவித மணியோசை. அதுதான் வீட்டுப்பெண்டிரின் அலாரம். “ஓ பால்காரர் வந்தாச்சு. இந்த …
இரயில்வே தண்டவாளத்திற்கு அருகேயிருந்த பழைய லட்சுமி தியேட்டர் பகுதியில் இன்று வணிக வளாகங்களால், முக்கியக் குடியிருப்புப் பகுதிகளால் நிறைந்திருக்கிறது. வாணி ஸ்வீட்ஸ், மூன்று நட்சத்திர ஹோட்டலான வெஸ்டன் கார்ட்ஸ், ஈபி ஆபிஸ், கணேச கந்தபெருமாள் கோவில் போன்றவை ஒரு புறம் வரவேற்க.. …
தமிழகக்கல்விச்சூழல்: சவால்களும்தீர்வுகளும்
முகவுரை: தமிழகத்தில் கல்வி என்பது வெறும் அறிவு சார்ந்த விஷயமாக மட்டுமல்லாமல், சமூக அந்தஸ்து, பொருளாதார முன்னேற்றம் மற்றும் வாழ்வாதாரத்திற்கான முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது. “கல்வி ஒன்றே அழியாத செல்வம்” என்பதை ஆழமாக நம்பும் சமூகம் நம்முடையது. அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு …
நன்னீருக்காகப் பலியாகும் உயிர்கள்
இயற்கையின் வேகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்: பொறுமையே அதன் இரகசியம். — ரால்ஃப் வால்டோ எமர்சன் சில மாதங்களுக்கு முன்பாக நெம்மேலியில் வந்துள்ள பூநாரைகள் குறித்துக் கேள்விப்பட்டு அந்தப் பறவைகளைக் காணச் சென்றிருந்தேன். அப்போது அந்த இடத்தின் முக்கியத்துவம் பற்றித் தெரியாது. அந்த இடத்திற்குச் …
ஆரோக்கியமே உண்மையான அழகு
ஒரிஜினலும் ஒப்பனையும்: பெரும்பான்மையான மனிதர்களுக்குத் தம்மை அழகாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருப்பது இயல்பான ஒன்றுதான். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள். ஆனால், இன்றைய நவீன சமூகம் அகத்தின் உள் அழகை விட, பளபளக்கும் வெளிப்புறத் தோற்றத்திற்கே அதிக …
- 1
- 2