அனைத்தையும் சுருட்டிவிட்ட பிறகு
எதுவும் இல்லையென்று செல்பவன்தான் அவன்
அவன் அப்படிச் சென்றபிறகும்
எல்லாமும் இருந்தது
அவன் பார்வையில் பட்டவை அளவு சுருங்கியிருந்தன
அவன் பார்வையும் சுருங்கி இருந்தது
தன்னில் இல்லை
அவனிடமே என்று மூச்சு விடாதும் ஒப்பிப்பான்
அயரவே மாட்டான்
விட்ட பிடி கிடைக்காதா என்பதில் விடாப்பிடியாக இருப்பான்
புரண்டு விழுந்து எழுந்தாவது எதையும் எடுத்துவிடுவான்
அவன்தான் இப்போது
பொய்களாக அடுக்கிக் கோட்டை கட்டி
காத்து வருகிறான்.
Author
-
மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.