Home கவிதைஇயற்கையின் இறைஞ்சல்

கால் இடறிய நொடியில்
குனிந்து பார்த்த அற்புதம்
கண்கள் தான் நம்பவில்லை

முந்தைய இரவு பெய்த
விண்மீன் மழைச் சாரலில்
முளைத்தனவோ தெரியவில்லை

இலையில்லா காம்புகளில்
வழியெங்கும் நட்சத்திரப் பூக்கள்
அழகினை விவரிக்க வார்த்தையில்லை

எப்போதும் எதற்கும் நேரமின்றி
நமக்காய் அதிசயங்கள் காலடியில்
பூத்திருப்பதைக் காணாது கடக்கின்றோம்

நின்று இரசித்து மகிழ்ந்திட
இயற்கை இறைஞ்சுகிறது நம்மிடம்
நிதானமாய்க் கொஞ்சம் பொறுமை!

Author

  • கவிஞர் நளினி சுந்தரராஜன் வட அமெரிக்காவில் வசிக்கிறார். தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதும் இவர், அமெரிக்காவில் தமிழ்ச்சங்கப்பேரவை, கவியரங்கங்கள் மற்றும் உலகத்திருக்குறள் மாநாட்டில் கவிதைகள் வாசித்திருக்கிறார். "Face in Face" இவரது முதல் மொழிபெயர்ப்பு நூல். "திக்குகளின் புதல்வியர், உறைபனி உதிர்த்த இறகு, வலசை சென்ற வண்ண மயில்கள்" ஆகிய தொகுப்பு நூல்களில் இவரது கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.

You may also like

Leave a Comment