லாபமும், பணப்புழக்கமும் அதிகமாக உள்ள தொழிலைத் முதன்மைத் தொழிலாகத் தேர்ந்தெடுக்கலாம். குடும்பத் தொழிலான விவசாயத்தை அதன் பாரம்பரிய மதிப்புகளுக்காக, குறைந்த முதலீட்டில் ஒரு துணையாக நடத்தலாம். இறுதியாக, “வணிகத்தில் உணர்வுகளுக்கு இடமில்லை; பணப்புழக்கமே பிரதானம்; நல்ல பணத்தை நஷ்டத்தில் போடாதீர்கள்; இரண்டு தொழில்களில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்” என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பது வெற்றிக்கான சிறந்த வழி. இது அவருக்கு முடிவை எடுக்க உதவியாக இருக்குமென்று நம்புகிறேன்.
சொலோர்னு. மரகதத்தை ஊட்லதான் நாங்க சிறுசுக(கொழந்தைங்க) அத்தன பேரு ஒன்னா வளந்தோம்.ஓரியாட்டம் ( சண்டை) போட்டுகிட்டு,அத்தன குஷியா போகும் லீவு நாளெல்லாம்.மாமாக்கு ஒடம்பு சரியில்லாம போனதுல அங்க சூழல் மாறி,யாருமே அங்க வர்றதில்ல இப்ப.ஊடே சொலோர்னு (வெறுமையா)கெடக்குது இப்ப. ஊட்ல சிறுசுக …
கைபேசியில் தற்படமெடுக்ககற்றுக்கொண்டுவிட்டாளாம் பேத்திகால் பாவாமல் தாவிக்கொண்டேயிருக்கிறாள் பூக்களின் பின்னணியில் ஒன்றுபூவுடன் முகம் பொருத்தி ஒன்றுகன்றுக்குட்டியுடன் கன்னமிழைத்து இன்னொன்றுகலர் கோழிக்குஞ்சைதலையிலமர்த்தி மற்றொன்றெனகைபேசியின் மூளையைபடங்களால் நிரப்பிக்கொண்டேயிருக்கிறாள். சாக்கு சொல்லி தப்பித்துக்கொண்டிருந்ததாத்தாவைக்கூடசெய்தித்தாள் வாசிக்கும்அசந்த நேரத்தில்காலையொளியின் பின்னணியில் படமெடுத்தாயிற்று ‘எல.. போட்டோ புடிச்சா ஆயுசு கொறையும்’என நழுவிக்கொண்டிருக்கும்நல்லாச்சிக்கும்ஆசை …
ஆல விழுதாக அஞ்சுபத்து பெத்துபுட்டு
..அழகா வாழ்வேன்னு நினச்சேனே எங்கண்ணே
காலம் ஏன்வந்து சுழன்றடிச்சுக் கன்னியுனை
…காத்தில் ஒளிச்சுடுச்சே தெரியலையே என்கண்ணே
இதுவரைக்கும் பண்டமாற்று முறை பற்றியும் நாணயங்கள் தோன்றியதின் அவசியத்தை பற்றியும் சொல்லி இருந்தேன். நாணயங்கள் எப்படி ஒரு மனித சமூகத்தை ஒவ்வொரு நிலையாய் முன்னேற்றி கொண்டு சென்றது என்பதை பற்றி இனி சொல்லப் போகிறேன். அதற்கு முன்பு மனிதர்கள் எப்படி கூட்டமாக …
கொழுந்து வெயிலின்
நிழலினை
முகவாயேந்தி நெற்றிமுத்தமிடுகிறேன்.
மகாபலி அரசனின் கதையின்றி திருவோணத்தைச் சொல்ல முடியாது. உலகையே தானம் செய்ய முனைந்த அவனது உள்ளம், “தர்மம்” எனும் சொல்லின் உயிர்மெய்யாக விளங்கியது. வாமனன் வந்தபோது, மூன்று அடிகள் நிலம் கேட்டார். இரண்டு அடியில் பூமியும் விண்ணும் அளந்ததும், மூன்றாவது அடியை வைக்க மகாபலி தன் தலையைத் தாழ்த்தினான்.
இறைவன் காலடியில் பணிந்த மகாபலி – “தியாகம்” என்ற சொல்லின் சிலையாக என்றும் நிலைத்தான். அவனது தாராள உள்ளத்தால் ஈர்க்கப்பட்டு, ஆண்டுதோறும் திருவோண நாளில் மக்களைக் காண வருகிறான் எனும் நம்பிக்கை இன்றளவும் வாழ்கின்றது.
ஒருவரை ஆபாசமாகத் திட்டுவது கோழைத்தனத்தைக் காட்டுகிறது. இதுவே வீரம் என்று நினைப்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்: தற்போது சைபர் கிரைம் பிரிவு வலுப்பெற்றுள்ளது. நீங்கள் செய்யும் அனைத்துச் செயல்களையும் எளிதாகக் கண்டறிய முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்பதே நம் கடமை. அதுவே அறம்.
ஒரு குழந்தை கடந்த ஐந்து வருடங்களாக என்னுடைய கதைகளைப் படித்து அவ்வப்போது உரையாடி வருகின்றாள். இந்த கொரோணோ காலத்திற்கு இடையில் சந்தித்தபோது லாக்டவுன் நாட்களில் ஆங்கில நூல்களைத் தீவிரமாக வாசிக்க ஆரம்பித்துவிட்டாள் என்று அவளுடைய பெற்றோர் மகிழ்ந்தனர். “அடுத்த என்ன தமிழ் புத்தகத்தினை வாசிக்க இருக்கின்றாய்? என்ன என்ன வாங்கத் திட்டம்?” என்று கண்காட்சியில் கேட்டேன். தமிழில் இனி வாசிக்கும் எண்ணமே இல்லை என்றார்.
