இராமன் குழப்பத்துடன் நின்றான். இப்போது தன் முன் நிற்கும் இந்த மான், தான் அழித்த மானேதானா? அல்லது மாரீசனின் மாய மான் வேட்டை முடிவுக்கு வந்த பின்பும், இந்த வனத்தில் வேறொரு தங்க மான் இருந்ததா? தான் எய்த அஸ்திரத்தின் வலிமைக்கு, …
இலக்கியம்
3. கச்சிக்கச்சியமா – சத்தமிடும் மலை. முன்னொரு காலத்தில், ஒரு ஜப்பானிய கிராமத்தில் ஒரு விவசாயியும் அவருடைய மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அவர்களுடன் ஒரு முயல் நட்பாகப் பழகியது. அவர்களும் முயலுடன் நட்பாக இருந்தனர். அந்த முயலை, விவசாயியும் அவர் மனைவியும் …
1.தரையில் இலையுதிர்க்கால இலைகாற்றில் சுழன்றாடும் குழந்தைவிழ அஞ்சுவதில்லை இருவரும். 2.ஓவிய நோட்டில் வண்ணத்துப்பூச்சிஉருளுகிறது கிரேயான்சிறகுகள் பெறுகின்றன நிறங்கள். 3.காற்றில் உதிருகின்றன பூவிதழ்கள்ஆச்சரியத்துடன் சேகரிக்கிறது குழந்தைஓட மறக்கிறது நேரம். 4.அந்திப் பூங்காகடைசிச் சிரிப்பைத் துரத்தும் எதிரொலிஆளற்று அசையும் ஊஞ்சல். 5.மழலையின் பள்ளி முதல் …
விடிந்தாலே எல்லா உயிரினங்களுக்கும் பசிக்கும் போலிருக்கிறது. நீல வானில் பறவைகள் இடம் வலமாகச் செல்கின்றன. பக்கத்து மரத்தில் ஒரு அணில் தாவித் தாவி ஏதாவது பழமோ கொட்டையோ கிடைக்குமா? எனப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு மூலையில் காகம் ஒற்றைக் கண்ணை உருட்டி …
ஒட்டி இழையும் குஞ்சுகளையெல்லாம்எட்டித்துரத்தும் கோழியின் போக்குகொஞ்சமும் பிடிக்கவில்லை பேத்திக்குநல்லாச்சியிடம் வந்து அங்கலாய்க்கிறாள்‘பிள்ளேளுக்க தப்பை அம்மைதானே மன்னிக்கணும்அதுகளுக்கேது போக்கிடம்’ வெதும்பும் பேத்தியைதேற்றுகிறாள் நல்லாச்சி புன்னகையுடன்‘அட! கோட்டிப்பயபுள்ள.. குஞ்சுகளையெல்லாம்கோழி தவுத்துட்டுது’ என்கிறாள்‘தவிர்த்துவிட்டது’ எனத் தெளிவாயும் செப்புகிறாள்புரியாமல் தலைசொரியும் பேத்திக்குஇரைதேடல் முதல்இரையாகாமல் தப்புதல் ஈறாகப் பயிற்றுவித்தபின்குழந்தைகளைசுயமாய் …
சமூக ஊடகத்தில் அறிமுகமான நண்பர் அவர். குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவாளர். அவருடைய பதிவுகள், ஏரணங்கள் அழுத்தம்திருத்தமானவை. அதற்காகவே விரும்பிப் படிப்பேன். அண்மையில் தன் கட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டு விட்டு இறுதியில் ஒரு வரி இப்படி முடித்திருந்தார். “இவைகள் எம் இயக்கத்திற்கு …
சுரைக்குடம் கட்டிச் சில நாட்கள்காற்றடைத்த பையுடன் பலநாட்கள்கவிழ்த்த குடத்துடன் ஒன்றிரண்டு நாளேகடப்பாரை நீச்சலை மறந்துகெண்டை மீனாய் நீந்துகிறாள் பேத்திநீரில் தானுமொரு துளியாய்க்கலந்தவளுக்குநிலமென்பது நினைவிலேயே இல்லை ஆறும் குளமும் யோசிக்கின்றனஅடுத்த ஊருக்குப் போய்விடலாமெனதவளைகளெலாம் தப்பித்துவிட்டன எப்போதோ‘கலங்கியது தானே தெளியும்’அமைதிப்படுத்துகிறது மூத்த ஆறொன்று‘வாய்ப்பில்லை’ என்கிறது …
அருணுக்குப் பத்து வயது. கோடை விடுமுறையில் அவன் பாட்டி வீட்டுக்குச் சென்று இருந்தான். அது ஒரு கிராமம். நகரத்தில் வளர்ந்த அருணுக்கு, அந்த ஊர் பிடிக்கவே இல்லை. பொழுதே போகாமல் போரடித்தது. அவன் ஒரு நாள் மாலை வீட்டின் பின்புறம் இருந்த …
கைப்பிடி உணவும் கண்டாலும்தன் இனம் கரைந்தழைத்துகூடி உண்ணும் காக்கை; கூட்டுக்குள் புழுவாய் ஒடுங்கினாலும்கடுந்தவமிருந்து ஒரு நாள்வண்ணச் சிறகடிக்கும் பட்டாம்பூச்சி; இனத்தில் ஒன்று அடிபட்டால்பதறித் துடித்துச் சுற்றிஉதவிக்காகப் பரிதவிக்கும் குரங்கு; வீழும் பயம் விடுத்துசேய் விண்ணில் பறக்கபயிற்றுவிக்கும் தாய்க் குருவி; நிறம் கருப்பென …
ஒரு காட்டிலே, மரங்களுக்கு இடையிலே கொஞ்சம் இடைவெளி இருந்தது. அங்கு மரமும் இல்லை, செடியும் இல்லை. புல்கூட முளைக்காமல் வெளியிடமாய் இருந்தது. பறவைகள் எல்லாம் அந்த இடத்தைச் சுற்றியுள்ள மரங்களில் கூடு கட்டி, அங்கு அமர்ந்து பறவையாகக் கூவிக்கொண்டிருக்கும். காலை நேரத்திலே …