வணக்கம்.. மறுபடி ஆராவமுதன் பேசறேன்.
இந்த அனந்த் இருக்கானே என்னிடம்தான் வளர்ந்த குழந்தை.. எனக்கு என்னமோ குழந்தை என கிடையாது.. அதற்காக நாங்கள் கவலை எல்லாம் படவில்லை.
மஸ்கட்டில் வசதி எல்லாம் இருந்தும் ஸ்ரீனிவாசன் பையன் என்னிடமே இருக்கட்டும் எனச் சொல்லிவிட்டான்.. வருடம் இருமுறை அவர்கள் வருவார்கள். அனந்த் ஒரு முறை அங்கு சென்று வருவான்.. அவ்வளவு தான்.. மற்றபடி என்னிடம் தான் எல்லாம்.
நான் கூடியவரையில் நண்பனாகத்தான் பாவித்தேன்.. ஸாரி.. சிலோன் பாஷை வந்துட்டது..
எனில் பள்ளி தஞ்சாவூர், காலேஜ் மதுரை, எம்பிஏ துபாய் என முடித்தாலும் கூட பையனுக்கு என்னிடம் பிரியம் ஜாஸ்தி.. என் மனைவியை விட.. ஏனெனில் ஜாலி சித்தப்பா என்பதாகக் கூட இருக்கலாம்.
இப்போது சொன்ன விஷயம். ஆயுஷி மலையாளப் பெண்.. ஹிந்துவாகத் தான் இருக்கவேண்டும் பேரினால்.. இவள் ஆஷா அலெக்ஸாண்டர் டேனிஷ் பெண்.. சீனுவிடம் எப்படிச் சொல்வேன் ஏதாவது ஆனதென்றால்?
இந்தக் காதல் இருக்கிறதே எல்லா வயதிலுமே கிளுகிளுப்பான ஒன்று தான் மற்றவருக்கு வரும் வரை..
சீனு ஆர்த்தடாக்ஸ்… அவன் மனைவி என் மன்னி பரவாயில்லை. கொஞ்சம் அட்ஜஸ்டபிள் இருந்தாலும் இடிக்கிறது எனக்கு..
வாட்ஸ்அப்பில் ஜாலியாய்ப் பேசினாலும் கூட..
ம்.. போகப் போக என்ன ஆகும் என்று பார்க்கலாம்.
அப்படி ஒன்றும் ஆகவில்லையாம்..
இரண்டு தினங்கள் கழிந்து வந்த ஆஷா அதன் சுவடே தெரியாமல் நார்மலாக சிடுசிடுவென்று கேள்விகள் கேள்விகள் வேலை கொடுத்தல் என இருந்தாளாம்.
”ஆயுஷி?”
”அவளைக் கூட அவாய்ட் பண்ணுகிறேன் சித்தப்பா” என்றான்..
”எதுக்குடா?”
”தெரியலை சித்தூ”
”ஏன்?”
”இப்பல்லாம் தூக்கம் வரலை..”
”ஏன்?”
”ஆஷா நடந்து கொண்ட முறை..”
”டேய் அப்பா கிட்ட சொல்லி ஜாதகம் பார்க்கட்டா?. நீ வயசுக்கு வந்துட்டடா..”
”ம்ஹும் சித்து.. என்னமோ போங்க.. உங்க கிட்ட எனக்குச் சொல்லத் தெரியலை” என்றான்..
ஹச்சோ.. இவன் சொன்ன ஆஷா மடிசார் சுற்றியதில் குண்டாக நிற்பது போலவும் அவளுடைய டேனிஷ் அப்பா பஞ்சகச்சம் கட்டிச் சேரில் அமர்ந்திருக்க, அவள் அப்பா மடியில் உட்கார இவன் அவளுக்குத் தாலி கட்டுவது போல நடுராத்திரி கனவு கண்டு விழித்துக் கொண்டேன் நான்..
ஒரு நாள் மெஸேஜ் வந்தது..
நானும் ஆஷாவும் துபாய் செல்கிறோம்… சப்ளையர்ஸ் மீட்டிங்.
ஆண்டவா அனந்தைக் காப்பாத்து..
”அனந்த்” என்றாள் ஆஷா..
”யெஸ்..”
”மீட்டிங்க்ஸ்லாம் நன்றாக முடிந்தது பற்றி மகிழ்வாக இருக்கிறது”
”ஆம் ஆஷா.. அதுவும் ஜெர்மன் ஏஜண்ட் கொடுத்த பிஸினஸ் ப்ளான்.. ஐ திங்க் இட் ஷுட் பி ஃபீஸிபிள்”
”எஸ்”… என்றாள் ஆஷா.. அப்போது அவர்கள் இண்டர்கான் ஹோட்டலில் லவுஞ்சில் அமர்ந்திருந்தார்கள்..
காலையிலிருந்து ஈவ்னிங் வரை தொடர்ச்சியாக மீட்டிங்குகள், அது தொடர்பான லஞ்ச் அண்ட் ஈவ்னிங் 8 வரை அவை தொடர, முடித்து இப்போது லவுஞ்ச்.
”சரி வா டின்னர் என்னுடன் சாப்பிடலாம்”
”வேண்டாங்க.. மதியம் சாப்பிட்டதே ஃபுல்.. ஐ வில் கோ டு மை ரூம்..”
”இட்ஸ் ஓகே வா .. என் ரூமிற்குப் பேசிக் கொண்டிருக்கலாம்.”
”ஓகே…” என்னதான் ஆனாலும் பாஸ்.
ஏழாவது மாடியில் இருந்தது அவள் அறை..
வழக்கம் போல ட்யூட்டி ஃப்ரீயில் வாங்கிவந்த பகார்டி ரம்.. அண்ட் கோக்.. ”உனக்கு அனந்த்?”
”ஸாரி.. நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் ஆஷா..”
”ம்.. கொஞ்சம் டயர்ட்..” என்றாள் ஆஷா வெளிர் நீல டாப்ஸ் கீழே கொஞ்சம் பெரிய மிடி.. டார்க் ப்ளூ..
குடித்தாள்.
”காதலைப் பற்றி என்ன நினைக்கிறாய்?”
”என்ன நினைப்பதற்கு..?”
”ம்.. இன்னும் என் கிஸ் நினைச்சுண்டு தானே இருக்க?”
ப்ளண்ட் கேள்வி.. முழித்தான்.
”ஷ்.. ஐ நோ உங்கள் ஆண்வர்க்கம் பற்றி..”
”ஆஷா..”
”ம்.. நான் காதலில் இருந்திருக்கிறேன் அனந்த்.. முறிந்துவிட்டது.. நல்லவேளை ஒரே ஒரு நபர் தான்.. என்னிடம் விரும்பியது வேறொன்றை..”
அனந்த் பேசவில்லை அவளது முதல்பெக் முடித்தாள்.
”முறிந்தால் என்ன, ஷெல்லி சொன்னது போல இன்பத்தின் மகிழ்ச்சியை விட சோகத்தின் வலி சிறந்தது என்பது போல… எனக்கு சோகம் பிடித்தே விட்டது.. வாண்ட் அனதர் கோக்.”.
”இட்ஸ் ஆல் ரைட் ஆஷா..”
”பேசவே மாட்டேன் என்கிறாய் நீ.. பாட்டு கேட்கலாம்..”
ஃபோனை சர்ச் செய்தாள்.. ஒரு ஆங்கிலப் பாடல்.. காதலின் வலி சொல்லும் பாடல்..
சற்றே அலறவும் செய்தது..
”கம் வீ வில் டான்ஸ்..”
”எனக்குத் தெரியாதே”
”எதைச் சொன்னாலும் தெரியாது தெரியாது என்றே சொல்.”
”ஆஷா எனக்குத் தெரியும் என்று நான் எப்பொழுது சொன்னேன்?..”
கடக். குடித்து முடித்தாள்.. இவள் ஏன் எப்பொழுதும் இப்படியே செய்கிறாள்..?
”கம் வீ வில் டான்ஸ்”
பின்னணியில் இப்போது இன்னொரு சோகப் பாடல்..
மெலிதாக ஆடினார்கள் இருவரும்..
”ஆஷா ஆர் யூ ஆல்ரைட்.. கேன் ஐ ஆர்டர் யூ சம்திங்க்?”
”எஸ்.”.
”எது வேண்டும்?”
”நீ”
”நோ”
சிரித்தாள் ஆஷா.. எப்போதும் பயம் அனந்த்துக்கு.. அருகில் வந்து தலையைக் கலைத்து விட்டாள்..
”சரி ஓகே அனந்த் நீ கிளம்பு”
பெருமூச்சு விட்டான் அனந்த்..” ஓகே ஆஷா டேக் கேர்”
படக் படக்கென்று கதவைத் திறந்து செல்லலாம் என நினைத்துக் கதவைத் திறந்தால் பின்னாலேயே ஒரு கரம்..
”அனந்த்..”
”ஆஷா”
”ப்ளீஸ்…”
அதன் பின் அனந்த் வெளியில் செல்லவில்லை..
(தொடரும்)