தீபாவளிக்கு ஆரோக்கிய அல்வா வேண்டுமெனஅரை மணி நேரமாய்எசலுகிறான் மாமன்அசையாமல் அமர்ந்திருக்கிறாள் நல்லாச்சிஎடையும் இடையும் பெருகாமல்எண்ணெய்யும் நெய்யும் தொடாமல்நாவினிக்க வேண்டுமாம் தீபாவளிஇத்தனை விதிகளைப் பரப்பினால்என் செய்வாள் அவளும் நல்லாச்சியின் பட்டியலைதலையசைத்து ஒதுக்குகிறான்பேத்தியின் பட்டியலையோகண்டுகொள்ளவேயில்லைபழைய மனப்பான்மை கொண்ட உங்களுக்குநவீன நடைமுறை தெரியாதெனகேலியும் செய்கிறான் ஆரோக்கிய …
கவிதை
ஆலய வாசலின் முன்னிருந்தஆரவாரமிக்கப் பூக்கடைகளைத் தாண்டிவீதியின் அமைதியான ஓரத்தில்சாயம் போன குடைக்குக் கீழ்மூங்கில் கூண்டிற்கு உள்ளேசைகைக்காகக் காத்திருக்கிறது கிளி. வருவோர் போவோரைக் கவரும்வாய்கொள்ளாப் புன்னகையுடன்பச்சைக்கரையிட்ட மஞ்சள் வேட்டியும்இளஞ்சிகப்பில் சட்டையும், நெற்றியில்விபூதிப் பட்டையுடன் சந்தனமும் குங்குமமும்தரித்த ஜோஸியர்விரல்களைச் சொடுக்கவும்தாவிக் குதித்து வெளியே வருகிறது …
காதல் கோள்கள் நாம் பூமியில் மட்டும்சந்தித்துக் கொள்ளவில்லை நண்பனே மின்னிக் கிடக்கும் பலகோடி நட்சத்திரங்கள்எப்படி வந்தன என்று கேட்டாய்நான் உடனே ஒரு முத்தம் தந்தேன்அவை ஆகின பல கோடியே ஒன்றுதாரகைகளெல்லாம் முத்தங்களெனில் நிலவு?அது சற்றே நீண்ட முத்தம் பால்வெளி நிரப்பிய காதலின்போதாமையில் …
எனது கண்ணீர் ஆன்மாவிலிருந்து வடிவதுஅதன் தூய்மைஒருவரைப் பகலிலும் தூங்க விடாததுஎத்தனை மைல்களுக்கு அப்பால்இருந்தாலென்னஎத்தனை காலத் தொலைவு இருப்பினும் என்னஇனி தேடவேண்டிய எந்த அவசியங்களுமில்லைநீயே உதிர்த்த சொற்கள்தான்நான் மாயங்களை நிகழ்த்துபவள்நீ எனை வந்து சேர்வாய் தேவ.
மண்பட்ட பாவாடையோடு மண்ணிலே விளையாடினாய்விறகடுப்பில் பூத்த புகையில் கண் சிவந்து சிரித்தாய்இந்தக் கிராமம்தான் என் உலகம்என் குடும்பம்தான் என் சந்தோஷம்இந்தச் சிறு வட்டமே என் வானம்உனக்கும் இங்குதான் இடமென்றுஇத்தனை வருடங்களாய் நான் வாழ்ந்தேன்வெளியிடம் வேறு தேசம் தெரியாமலேஎன் வாசல் தாண்டிப் போகாதே …
ஐந்தாறு நாட்களாய்அமர்க்களப்பட்டுக்கொண்டிருக்கிறது வீடுபருப்புப்பொடியும் ஊறுகாய்களும் இன்னபிறவும்பாட்டிலில் அடைபட்டுக்கொண்டிருக்கின்றனஆரவாரம் கண்டு புருவமுயர்த்துகிறாள் பேத்தி‘அண்ணன் வெளிநாட்டுக்குப்போறாம்லா’குறிப்பறிந்து கூறுகிறாள் நல்லாச்சி பத்தில் ஒரு பங்கைச் சேமித்து வைஅன்றாடம் கணக்கெழுதுநிர்வாகப்பாடத்தை மூளையில் திணிக்கின்றனர்அப்பாவும் அம்மாவும்வம்புவழக்கில் போய் விழாதேஅறிவுரையுடன்தலைவலி வாசனாதி திரவியங்களுக்குதுண்டு போட்டு வைத்தாயிற்று அக்கம்பக்கத்தினர்தாத்தா கிணற்றடியில்துணி வெளுக்கக் …
வயலில் நடக்கும் அறுவடையை மேற்பார்வையிடவென தொற்றிக்கொண்டு கிளம்பினாள் பேத்தியும் கேள்விகளும் பதில்களுமாய் வழிப்பாதையை நிரப்பிக்கொண்டே சென்றாலும் அறுவடை என்பது ஒரு வடையல்ல என்பது சற்று ஏமாற்றத்தையே கொடுத்தது அவளுக்கு
கைபேசியில் தற்படமெடுக்ககற்றுக்கொண்டுவிட்டாளாம் பேத்திகால் பாவாமல் தாவிக்கொண்டேயிருக்கிறாள் பூக்களின் பின்னணியில் ஒன்றுபூவுடன் முகம் பொருத்தி ஒன்றுகன்றுக்குட்டியுடன் கன்னமிழைத்து இன்னொன்றுகலர் கோழிக்குஞ்சைதலையிலமர்த்தி மற்றொன்றெனகைபேசியின் மூளையைபடங்களால் நிரப்பிக்கொண்டேயிருக்கிறாள். சாக்கு சொல்லி தப்பித்துக்கொண்டிருந்ததாத்தாவைக்கூடசெய்தித்தாள் வாசிக்கும்அசந்த நேரத்தில்காலையொளியின் பின்னணியில் படமெடுத்தாயிற்று ‘எல.. போட்டோ புடிச்சா ஆயுசு கொறையும்’என நழுவிக்கொண்டிருக்கும்நல்லாச்சிக்கும்ஆசை …
தொட்டுப்பொட்டு வைத்துக்கொள்ளலாம்போல்கரேலென்றிருக்கும் வானத்தில்ஆட்டுக்குட்டிகளாய்மேய்ந்து கொண்டிருக்கின்றன மேகங்களெல்லாம் தலைப்பிரசவம்போல்எப்போது வேண்டுமானாலும் நிகழக்கூடும்மழையின் வீச்சிலிருந்துநெல்லைக்காப்பாற்றும் முகமாய்சாக்குப்பையில்மரக்காலால் அள்ளி நிறைக்கிறாள் நல்லாச்சிஉழக்கு போல் ஒட்டிக்கொண்டு இழையும் பேத்திகேட்கிறாள்மழை எப்போது பெய்யுமென ‘மழை பெய்யறதும் மக்க பொறக்கறதும்மகேசன் கணக்குல்லா’பதிலாகவும் புலம்பலாகவும்ஒரே நேரத்தில் சொன்னபடிமெலிதான இடிச்சத்தத்தைச் செவிமடுக்கும் ஆச்சியைதாக்குகிறது …