ஒவ்வொரு தலைமுறையும் தன் சொந்த வாழ்க்கையை நினைவுகூர அவரது ஏதோவொரு பாடலை கடன் வாங்கியது
கவிதை
தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா அறைக்குள் நுழைந்து கண்ணுக்குத்தப்பி ஒளிந்துகொண்டபாம்பு ஏற்படுத்திய பயம்இராத்திரி முழுக்கப் படுத்தி எடுப்பதுபோல்…தேகப் புற்றிற்குள் நுழைந்துமனதுக்கும் மூளைக்கும் நடுவேசட்டை கழற்றிவிட்ட ஒரு வார்த்தைஏற்படுத்திய பயம்வாழ்நாள் முழுக்கத் துரத்திக்கொண்டே இருக்கும்…. மூச்சுவிடுவதுபோலத் தான் இருக்கும்,ஆனால்,உள்ளுக்குள் எங்கோ பிணத்தைச் சுற்றியும் திரண்ட …
கிளை நுனியில் ஊசலாடும்தூக்கணாங்குருவியின் பெருவீடு கண்டுவியப்புடன் வினவினாள் பேத்தி“கம்பியும் இல்லை, காரையும் இல்லை,எப்படி முடைந்தது இத்தகு பேரழகை?பட்டம் பயின்ற பொறியாளராலும்இப்படியோர் விந்தை இயலுமோ ?” மென்னகை புரிந்த நல்லாச்சிஇயற்கையின் அதிசயங்களில்இதுவுமொன்று என்றாள்;கூட்டுக்குள் மழைத்தூறல் நனைக்குமேஇரவானால் வெளிச்சத்திற்கு என்செய்யும்அசராமல் கேள்விகளை அடுக்குகிறாள் பேத்தி …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். மயங்கிக் கிடக்கும் மனது என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: தூயவளே …
தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா காலம் ஒரு இறக்கையை முறித்துவிட்டால் பறக்க முடியாதஒற்றைச் சிறகு தும்பிகளின் கூட்டத்தினிடையே போய் நின்றுஜோடிச் சிறகுகளின் நிறம் மங்கிவிட்டதென்று புலம்பித் தள்ளுவாய் அழுதுகொண்டிருப்பாய் இடையறாதுஇன்றைய நாள் உன்னோடது இல்லையென்றோ உனக்கான நாள் வராதென்றோ பழைய ஆழமான காயங்களைச் …
காலத்தின் கால்களில் நசுங்கவேண்டுமென்றவிதிமுறைகளின் சாம்பல்நிறப் புத்தகத்தைவாசித்தறியா பூக்கள்ஒவ்வொன்றாய் கண்மலர்த்துகின்றன காற்றின் கத்தரிக்கோலால்உலர்ந்த சருகுகளாய் நறுக்கப்பட்டுமண்ணின் ஆழத்தில் புதையப்போகும்மரணத்தின் கணக்குகளைத் தள்ளுபடி செய்துவிட்டுதங்கள் பூங்கதவுகளைத் திறக்கின்றன யாரோ வரைந்த ஓவியத்திலிருந்துதிடீரென வெளியேறும் வண்ணத்துப் பூச்சிகளாய்உலகைப் பார்க்கும்அவற்றின் பார்வையில்வானம் ஒரு நீலநிற நதியாகவும்,பூமி அதில் …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். அந்நிலவும் அஞ்சும் அழகு என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: கன்னல் மொழியாளின் கார்வண்ணக் …
சுள்ளி சேகரிக்கும் பறவை கூட்டைக் கலைக்கும் காற்று மற்றுமொரு சுள்ளி.
ஆசை மிகுதியால் அதிகம் தின்னாலேகுறையும் வாழ்நாள் என்பது உறுதியாமே!நாவின் ருசிக்கு அடிமை ஆனாலேஉடல் நலம் கெட்டுச் சீரழிந்திடுமே! கீரையும் காயும் கனிகளும் உண்பதேகாயம் காக்கும் முறையாகும்!அகாலத்தில் கண்டதையும் புசித்து வந்தாலேதீராப் பிணிகள் வருவது நிச்சயமாகும்! உண்டது செரிக்க உதவிடவென்றுநடையும் உடற்பயிற்சியும் நன்று!நஞ்சான …
சொல்லாலே காட்சியைச் சுவைபடவே காட்டியேசெல்லாத இடத்திற்கும் சென்றுவரவே வைத்திடும்வில்லாளன் கண்ணதாசன் வியப்பிற்கு நேரானார்!கல்லாத மனிதருக்கும் காவியத்தைப் படைத்தார்! உள்ளத்து உணர்வுகளை உவமைகளில் வைத்திட்டுஎள்ளெனில் எண்ணெயென எண்ணத்தில் ஏற்றிட்டுபண்ணெடுத்துப் பதமாகவே பாரத்தை இறக்கியேமண்ணிற்குப் பெருமையாய் மன்னவன் நின்றாரே! பலாவாழை மாவுடனே பாலோடு தேனுடனேஉலாவரும் …